எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளைப் போலவே மத்திய அரசு பணியில் இந்தியப் பொறியியல் பணி  எனப்படும் இன்னொரு அகில இந்தியப் பணியும் இருக்கிறது. சிவில் சர்வீசஸ் தேர்வை எந்த பட்டதாரியாக இருந்தாலும் எழுதலாம். எனவே, அதற்குப் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், அய்.இ.எஸ். தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் இத்தேர்வுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அளவுக்குக் கடுமையான போட்டி இருக்காது.

தேவையான தகுதி

சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்தான் (யூ.பி.எஸ்.சி.) அய்.இ.எஸ். தேர்வையும் நடத்து கிறது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் பொறியியல் பட்டதாரிகள் அய்.இ.எஸ். தேர்வை எழுதலாம். பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பைப் பொறுத்தவரையில், 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

இதர மத்திய அரசு தேர்வுகளைப் போன்று எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

பணியும் பதவியும்

அய்.இ.எஸ். தேர்வில் இந்தியன் ரயில்வே சர்வீஸ், மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், இந்தியன் டெலிகாம் சர்வீஸ், இந்தியன் நேவல் ஆர்மாமென்ட் சர்வீஸ், இந்தியன் ரயில்வே ஸ்டோர் சர்வீஸ், இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி சர்வீஸ், இந்தியன் சப்ளை சர்வீஸ், சென்ட்ரல் பவர் இன்ஜினியரிங் சர்வீஸ் என்று பல்வேறு வகையான பணிகள் இருக்கின்றன. எனவே, பிடித்தமான பணியைத் தேர்வுசெய்துகொள்ள முடியும். தேர்வில் எடுக்கும் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

ரயில்வே துறை, மத்தியப் பொதுப்பணித்துறை, பாதுகாப்புத்துறை, கடற்படை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மத்திய மின்சார வாரியம், எல்லையோரச் சாலை நிறுவனம், தொலைதொடர்புத் துறை என ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளுக்கு ஏற்ப, உதவி செயற்பொறியாளர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் சேரலாம். உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், கூடுதல் தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர், கூடுதல் டைரக்டர் ஜெனரல், டைரக்டர் ஜெனரல் எனப் படிப்படியாக உயர்ந்த பதவிக்குச் செல்ல முடியும்.

தேர்வைப் பொறுத்தவரையில், சிவில் சர்வீசஸ் தேர்வைப் போலவே, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என அடுத்தடுத்து 3 விதமான தேர்வுகள் உண்டு.

ஆன்லைனில் (www.upsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு மெயின் தேர்வு எழுதும் வாய்ப்பளிக்கப்படும். தேர்வு முறை, பாடத்திட்டம், பல்வேறு விதமான பணிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை முதலான விவரங்களை யூ.பி.எஸ்.சி.-யின் இணையதளத்தில்(www.upsc.gov.in)விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.
அய்.இ.எஸ். பணியில் காலியிடங்கள் : 588

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 23, 2017

முதல்நிலைத் தேர்வு: ஜனவரி 7, 2018
மெயின் தேர்வு: ஜூலை 1, 2018

தமிழக மருத்துவ துறையில் 744 காலிப் பணியிடங்கள்

தமிழக மருத்துவ துறையில் காலியாக உள்ள 744 அசிஸ்டென்ட் சர்ஜன் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரிவுகள் : அனஸ்திசியாலஜியில் 136, அனாடமி 20, பயோ கெமிஸ்ட்ரி 15, இ.என்.டி 40, ஜெனரல் மெடிசன் 51, ஜெனரல் சர்ஜரி 44, அப்ஸ்டெட்ரிக்ஸ் 200, பீடியாட்ரிக்ஸ் 71, சோசியல் பிரிவென்டிவ் மெடிசனில் 20 காலியிடங்கள் உள்ளிட்ட மொத்தம் 20 பிரிவுகளில் 744 காலியிடங்கள் உள்ளன. வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது 57 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் 2017 அக்., 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசிநாள் : 2017 அக்., 10. விபரங்களுக்கு :www.freejobalert.com/wp-content/uploads/2017/08/Notification-TN-MRB-Asst-Surgeon-Posts.pdf


எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்

மத்திய காவல் படைகளில் ஒன்று எல்லை பாதுகாப்புப் படை. துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்று. நாட்டின் சர்வதேச எல்லைப்பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் 1965 டிச., 1இல் தொடங்கப்பட்டது. எல்லை ஊடுருவலைத் தடுப் பதும், எல்லையை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் தான் இதன் முக்கியப் பணி. இப்படையில் காலியாக உள்ள 1,074 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் : காலியிடங்கள் 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம், கருநாடகம், கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தலைமையகம் பெங்களூரு எலங்காவில் உள்ளது.

கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மேலும் தொழில் பயிற்சி நிறுவனத்தில் ஒரு வருட பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது : 2017 ஆக., 1 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய வயது சலுகை உள்ளது. உயரம் குறைந்தது 167.5 செ.மீ., இருக்க வேண்டும். மார்பளவு 78 - 83 செ.மீ., அளவில் இருக்க வேண்டும். இதேபோல கண்பார்வையும் சிறப்பாக இருக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முதலில் உயரம், மார்பளவு சோதனை செய்யப்படும். பின் 5 கி.மீ., தூரத்தை 24 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு டிரேடு தேர்வு நடக்கும். அனைத்திலும் தேர்வு பெற்ற வர்களுக்கு எழுத்துத்தேர்வு நடக்கும். பின் மருத்துவ சோதனை அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய். இதனை ‘டிடி’ ஆக செலுத்த வேண்டும். முகவரி :  STC BSF Bangalore, Air Force Station, Yelahanka, Bangalore - 560063..

கடைசிநாள் : 2017 அக்., 30. விபரங்களுக்கு : http://bsf.nic.in/doc/recruitment/r63.pdf


கப்பல் படையில் சேர வேண்டுமா?

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான பாதுகாப்புப் படைகளில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. சர்வதேச பிரசித்தி பெற்ற கப்பல் படையின் துணை அங்கங்களாக தரைவழிப்படை மற்றும் கடல்சார் விமானப்படையும் உள்ளன. பெருமைக்குரிய இப்படையில் நிரந்தர நிலை அதிகாரிகள் பிரிவில் உள்ள 40 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் : பி.சி., எஜூகேசன் பிரிவில் 17ம், எஸ்.எஸ்.சி., லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் 6ம், எஸ்.எஸ்.சி., அய்.டி., பிரிவில் 15ம், எஸ்.எஸ்.சி., லா பிரிவில் 2ம் சேர்த்து மொத்தம் 40 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள் என்ன : பி.சி., எஜூகேசன் பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு எம்.எஸ்.சி., படிப்பை இயற்பியல் அல்லது கணிதத்தில் முடித்தவர்கள், எம்.எஸ்.சி., கணிதம் அல்லது ஆபரேசன்ஸ் ரிசர்ச்சில் முடித்தவர்கள், எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, பி.டெக்., எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.சி., லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., அய்.டி., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., அய்.டி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.சி., அய்.டி., பிரிவுக்கு பி.இ., அல்லது பி.டெக்., கில் சி.எஸ்., சி.இ., அய்.டி., எம்.எஸ்.சி., அய்.டி, பி.எஸ்.சி., அய்.டி., எம்.டெக்., சி.எஸ்., பி.சி.ஏ., எம்.சி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.சி., சட்டம் பிரிவுக்கு சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்து இதன் பின்னர் வழக்குரைஞராக பதிவு செய்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, குறைந்த பட்ச உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2017 அக்.,20. விபரங்களுக்கு www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_30_1718b.pdf>

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner