எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்திய கடற்படையில் காலியாக உள்ள சார்ஜ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங் களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.

பணி:: Chargeman (Ammunition Work Shop)

காலியிடங்கள்: 07

பணி:(ICE Fitter) காலியிடங்கள்: 01

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி அல்லது பொறியியல் துறையில்

டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

பணி:  Library and Information Assistant

காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  ibrary and Information Science துறையில் இளங்கலை பட்டம் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட 3 பணிகளுக்குமான மாதம் சம்பளம் ரூ.35,400 - 1,12,400

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic/WriteReadData/ADS/eng_10702_11_0187_1718b.pdf என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு அதனுடன் ரூ.45க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட அஞ்சல் கவர் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் போன்வற்றை இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:   The Flag Officer Commanding-in-Chief, (for CivilianRecruitment Cell), Headquarters Southern Naval Command, Kochi - 682 004

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiannavy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள

அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ரிசர்வ் வங்கியில் காலிப் பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி, உதவியாளர் பதவியில் 623 காலியிடங்களை நேரடி நியமன முறையில் தேர்வுசெய்திட அறிவிப்பு வெளி யிட்டு இருக்கிறது. உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியுடன் கூடுதலாக அடிப்படைக் கணினி அறிவும் தேவை. வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைப்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு வயது 33 வரையும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 31 வரையும் இருக்கலாம். உடல் ஊனமுற்றோருக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்த்தப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகளும் ஆன்லைன் வழியில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், கணிதம் ஆகிய பகுதிகளில் (முதன்மைத் தேர்வில் கூடுதலாகப் பொது அறிவு, கணினி அறிவு) அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். உரிய கல்வியும் வயதுத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் (www.rbi.org.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இன்றைய நிலையில், உதவியாளர் பதவிக்குச் சம்பளம் ரூ.32,528 கிடைக்கும். சம்பளத்தோடு அலுவலகக் குடியிருப்பு வசதி, மருத்துவச் செலவினங்களுக்கான தொகையைத் திரும்பப் பெறும் வசதி, இலவச மருத்துவ வசதி, நாளிதழ்கள், புத்த கங்கள் வாங்க பணம், குறைந்த வட்டியில் வீட்டுவசதிக் கடன், கார் வாங்க கடன் என ஏராளமான சலுகைகளையும் பெறலாம். மேலும், பதவி உயர்வுக்கான தேர்வெழுதி

படிப்படியாக உயர் பதவிக்கும் செல்லலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டம், தேர்வு மய்யம், தேர்வுக்காக எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பி னருக்கு இலவச பயிற்சி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 10

முதல்நிலைத் தேர்வு: நவம்பர் 27, 28

முதன்மைத் தேர்வு: டிசம்பர் 20

நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினியர் பணியிடங்கள்

தற்போது நமது நாட்டின் பல் வேறு நகரங்களும் நான்கு வழிச் சாலைகள் வாயிலாக இணைக்கப்பட் டுள்ளது. பயண நேரத்தை வெகுவாக இவை குறைத்திருப்பதோடு, பாது காப்பான பயணத்தையும் உறுதி செய் துள்ளன.

இந்தப் பாதைகளுக்கு காரணமாக இருப்பது நேஷனல் ஹைவேஸ் அதாரிடி ஆப் இந்தியா (என்.எச். ஏ.அய்.,) ஆகும். பெருமைக்குரிய இந்த அமைப்பில் யங் புரொபசனல்- டெக்னிக்கல் பிரிவிலான 170 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 28.10.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதர தேவை: பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்புடன்  தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த மதிப்பெண் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: நேர்காணல் வாயிலாக தேர்ச்சி செய்யப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

கடைசி நாள்: 2017 அக்., 28. விபரங்களுக்கு:http://www.nhai.org/Doc/4oct17/ADVERTISEMENTWalk-in-interview.pdf

இந்திய உணவுக் கழகத்தில் வாட்ச்மேன் வேலை

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு

புதுடில்லியில் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள 53 வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர் களிடமிருந்து ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

பணி: வாட்ச்மேன்  - காலியிடங்கள்: 53

பணியிடம்: புதுடில்லி

வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.fci.gov.in, www.fciregionaljobs.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner