எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நமது நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை அய்.பி.பி.எஸ்., (இந்தியன் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) செய்து வருகிறது.

பொதுத்துறை வங்கிகளுக்கான கிளரிக்கல், புரபேசனரி ஆபிசர், சிறப்பு அதிகாரி மற்றும் கிராம வங்கிகளுக்கான ஆபிஸ் அசிஸ்டென்ட் மற்றும் அதிகாரி என ஆண்டுதோறும் அய்ந்து தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தாண்டு இதுவரை நான்கு தேர்வுகளுக்கு ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி விட்டது. கடைசியாக சிறப்பு அதிகாரி பிரிவில் காலியாக இருக்கும் 1,315 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் : அய்.டி., ஆபிசரில் 120, அக்ரி கல்சர் பீல்டு ஆபிசரில் 875, ராஜ்பாஷா அதிகாரியில் 30, சட்டம் அதிகாரியில் 60, எச்.ஆர்., / பெர்சனல் ஆபிசரில் 35, மார்க்கெட்டிங் ஆபிசரில் 195ம் சேர்த்து இதன் மூலம் மொத்தம் 1315 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : 2017 நவ., 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 20-30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அய்.டி., ஆபிசர் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ்,

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், அய்.டி., எலக்ட் ரானிக்ஸ் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அக்ரிகல்சர் ஆபிசர் பதவிக்கு அக்ரிகல்சர்/ஹார்டிகல்சர் பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். ராஜ்பாஷா அதிகாரிக்கு இந்தியில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சட்ட அதி காரி பதவிக்கு

எல்.எல்.பி., படிப்புடன் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். எச்.ஆர்.,/பெர்சனல் ஆபிசர் மற்றும் மார்க் கெட்டிங் ஆபிசர் பதவிகளுக்கு முதுநிலை டிப் ளமோ படிப்பு அல்லது எம்.பி.ஏ., தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். முழுமையான தக வல்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் முறையிலான பிரிலி மினரி மற்றும் மெயின் என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். பின் நேர்காணல் மூலம் இறுதி தேர்ச்சி இருக்கும். பிரிலிமினரி எழுத்துத்தேர்வு 2017 டிச., 30, 31 தேதிகளில் நடைபெறும்.

மெயின் தேர்வு 2018 ஜன., 28இல் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: 600 ரூபாய். கடைசி நாள்: 2017 நவ., 27.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சி

அய்.ஓ.சி.எல்., நிறுவனம் நமது நாட்டின் எரிபொருள் தேவை களை நிறைவேற்றுவதில் மிக முக் கிய பங்கு வகிக்கும் அரசுத்துறை நிறுவனம். இங்கு 354 டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

பிரிவுகள் : பிட்டர், எலக்ட்ரீ சியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், லேபரட்டரி அசிஸ்டென்ட், இன்ஸ்ட்ரூ மென்ட் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 18-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : டெக்னிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்பு டைய டிரேடு பிரி வில் அய்.டி.அய்., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

லேபரட்டரி அசிஸ்டென்ட் பதவிக்கு விண்ணப் பிப்பவர்கள் பி.எஸ்சி., படிப்பை இயற்பியல், வேதி யியல் அல்லது கணிதத்தில் முடித்திருக்க வேண்டும். முழுமை யான விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர் காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

கடைசி நாள் : 2017 நவ., 15.

காதி நிறுவனத்தில் 342 காலியிடங்கள்

கே.வி.அய்.சி., என்ற காதி அண்டு வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் கமிஷன் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம். காதி மற்றும் இதர கைவினைப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் 342 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : அசிஸ்டென்ட் டைரக்டர் கெசடடு பிரிவிலான காதியில் 3, அட்மினில் 11, டிரெய்னிங்கில் 2, எப்.பி.ஏ.ஏ.,வில் 16, எகனா மிக் ரிசர்ச்சில் 4, வில்லேஜ் இண்டஸ்ட்ரீசில் 18ம் காலியாக உள்ளன. நான் - கெசடடு பிரிவிலான சீனியர் எக்சிக்யூடிவில் இசி.ஆர்.,ல் 37, லீகலில் 7, ஜூனியர் டிரான்ஸ்லேட்டரில் 2ம் காலியாக உள்ளன.

குரூப் சி - நான்-கெசடடு டெக்னிக்கல் மற்றும் நான்-டெக்னிக்கல் பிரிவிலான காதி எக்சிக்யூடிவில் 31, வில்லேஜ் இண்டஸ்ட்ரீசில் 109, டிரெய்னிங்கில் 23, எப்.பி.ஏ.ஏ.,வில் 67, டிரெய்னிங் அசிஸ்டென்டில் 7, பப்ளிசிட்டி அசிஸ்டென்டில் 1ம் காலியாக உள்ளன.

வயது : கெசடடு பிரிவுக்கு அதிகபட்சம் 35ம், நான்-கெசடடு பி பிரிவுக்கு அதிகபட்சம் 30ம், பப்ளிசிட்டி அசிஸ்டென்டிற்கு அதிகபட் சம் 25ம், இதர பதவிகளுக்கு அதிகபட்சம் 27 வயதுக்கும் உட்பட்டவராக இருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத் தைப் பார்த்து அறியவும்.

கல்வித் தகுதி : கெசடடு பிரிவிலான அசிஸ் டென்ட் டைரக்டர் பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் அல்லது பேஷன் டெக்னாலஜியில் முடித் திருக்க வேண்டும். எக்சிக்யூடிவ் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் பதவிக்கும் இதே போல் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை உரிய பிரிவில் முடித்திருக்க வேண்டும். இதர பதவிகளுக்கான தேவையை இணையதளத்திலிருந்து அறிய வும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் : 2017 நவ., 19.

ரயில்வே துணை நிறுவனத்தில் வேலை

ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்டு எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் என்பது இந்திய ரயில்வேயின் உப நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள சிவில் இன்ஜினியர் பணியிடங்கள் 23அய் நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

காலியிட விபரம் : ரைட்ஸ் நிறுவனத்தில் சிவில் பிரிவு ஜாயிண்ட் ஜெனரல் மேனேஜரில் 3ம், டெபுடி ஜாயிண்ட் ஜெனரல் மேனேஜர் சிவிலில் 5ம், சிவில் இன்ஜினியர் பிரிவில் 15ம் சேர்த்து மொத்தம் 23 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 54 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங் பிரிவிலான பட்டப் படிப்பை முழு நேரப் படிப்பாக கல்லூரியில் படித்தவராக இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப் பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தினைப் பார்த்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

கடைசி நாள் : 2017, நவ., 14