எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அச்சு, காட்சி ஊடகம், சினிமா, தொலைக்காட்சி மற்றும் விளம்பர உலகம், சமூக ஊடகங்கள் என பலவிதமான ஊடகங்கள் சுவாரசியமான வேலைவாய்ப்புகளை அள்ளித்தரக் காத்திருக்கின்றன. இத்துறைகளுக்குள் நுழைவதற்கு உங்களைத் தயார்  படுத்தும் மாஸ் கம்யூனிகேசன் படிப்புகள், அவற்றை பயிற்றுவிக்கும் முன்னணி கல்வி நிறுவனங்கள், அவற்றுக் கான நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை அறிந்து கொள்வோம்.

பிளஸ் டூவுக்குப் பிறகு

பிளஸ் டூவில் எந்தப் பாடப் பிரிவில் படித்தவர்களும் மாஸ் கம்யூனிகேசன் படிப்பை மேற்கொள்ளலாம். இதில் பி.ஏ., பி.எஸ்சி. பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக கலை அல்லது அறிவியல் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கு பிளஸ் டூவில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந் தால் போதுமானது. பிற துறைகளில் இளநிலை பட்டம் முடித்தவர்களும் மாஸ் கம்யூனிகேசனில் முதுநிலை பட்டயப் படிப்பில் சேரலாம்.
வேலைவாய்ப்புக்கான துறைகள்

வளர்ந்து வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் ஆகியவை துடிப்பான இளைஞர்களை வரவேற்க காத்திருக்கின்றன. தடையற்ற இணைய வசதியின் பெருக்கத்தால் கைப்பேசி இயங்குதளத்தைக் குறிவைத்தும், செயலிகளின் வாயிலாகவும் புதிய தலைமுறைக்கான ஊடகங்கள் தலைதூக்கிவருகின்றன. ஆர்வமும், மாறுபட்ட திறனும், படைப்பாற்றலும் கொண்ட துடிப்பான இளைஞர் களுக்கு இது மிகவும் பொருத்தமான துறை. மேலும் பண்பலை வானொலிகள், மக்கள் தொடர்பாளர்கள், சமூக ஊடகத் துறை பொறுப்பாளர்கள் என மாஸ் கம்யூனிகேசன் மாணவர்களுக்கான வாய்ப்புகள் பிரமாண்டமாக விரி வடைந்திருக்கின்றன.

எங்கே படிக்கலாம்?

மாஸ் கம்யூனிகேசனில் பெரும்பாலானோரின் தேர்வு பி.ஏ., இளங்கலை பட்டப் படிப்பாக உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அடிப்படை அறிவியல் பாடங்களையும் உள்ளடக்கிய பி.எஸ்சி. பட்டப்படிப்பு உள்ளது. இவை தவிர்த்து டிசைனிங், நுண்கலை சார்ந்தும் பட்டம், பட்டய சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இப்படிப்பை மற்ற பட்டப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் படிப்பதைவிட அதற்கான சிறப்புக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதே நல்லது.

இதழியல் துறையை இலக்காகக் கொண்டவர்களுக்கு பி.ஏ. ஜர்னலிசம் உகந்த படிப்பாகும். புனேவில் இயங்கும் எஸ்.சி.எம்.சி. கல்வி மய்யம் (https://www.scmc.edu.in/) மாஸ் கம்யூனிகேசன் இன் ஜர்னலிசம் இன் பிரிண்ட், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேசன் என்ற இளங்கலைப் பட்டப்படிப்பை வழங்குகிறது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பி.ஏ. ஜர்னலிசம் அண்டு கம்யூனிகேசன் வழங்குகிறது. இவை தவிர்த்துப் பெருவாரியான பல்கலைக் கழகங்கள் பி.ஏ.ஜர்னலிசப் படிப்புகளை வழங்குகின்றன.

முக்கியமான நுழைவுத் தேர்வுகள்

எத்துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் மாஸ் கம்யூனிகேசனில் பல்வேறு முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளைப் படிக்கலாம். முன்னணி கல்வி நிறுவனங்கள் இதற்கெனத் தனியாக நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்துகின்றன. 10 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் பொது நுழைவுத் தேர்வு இதற்கு முதன்மையான உதாரணம். இவற்றில் திருவாரூர் உள்ளிட்ட 8 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாஸ் கம்யூனிகேசன் எம்.ஏ., முதுகலைப் படிப்புகளில் சேரலாம்.

ஏப்ரல் 2018 சேர்க்கைக்கு மார்ச் மாதம் ஆன்லைனில் (http://admissions.cutn.ac.in/)விண்ணப்பிக்கலாம். சென்னையைச் சேர்ந்த ஏசியன் இதழியல் கல்லூரி (http://asianmedia.in/) முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான ஆன்லைன் தேர்வை மே மாதம் நடத்துகிறது. இதேபோன்று மணிபால் பல்கலைக்கழகத்தின் MU-OET, XIC-OET, IPU CET உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகள் உள்ளன.

டில்லி பல்கலைக்கழகம் இதழியலில் அய்ந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை நுழைவுத் தேர்வு வாயி லாகத் தேர்வு செய்கிறது.

பிளஸ் டூ தேர்ச்சியுடன் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களும், தேர்வு முடிவுக்குக் காத்திருப்போரும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இளநிலைப் படிப்புகளுக்கும் டில்லி பல்கலைக்கழகம், மணிபால் பல்கலைக்கழகம் போன்றவை நுழைவுத் தேர்வு வாயிலாகச் சேர்க்கை மேற்கொள்கின்றன.

கற்பிக்கும் செய்தி நிறுவனங்கள்

இந்தியாவில் பல்வேறு தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் பிரத்யேகக் கல்வி நிறுவனங்கள் வாயிலாகத் தொலைக்காட்சிக்கான இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை வழங்குகின்றன.

இளம் வயதில் அறிவியல் ஆய்வு

ஆராய்ச்சி என்பது மிகப் பெரும் அறிஞர்கள் செய்ய வேண்டிய பணி. நம்மால் செய்ய முடியாது என்று நினைத்து அதிலிருந்து நாம் ஒதுங்கிவிடுகிறோம். இதனால் நமக்கும் ஆராய்ச்சிக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஆராய்ச்சி என்ற வார்த்தையைக் கேட்கும்போதும் ஆராய்ச்சியாளரைப் பார்க்கும்போதும் நம்மிடையே வியப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், ஆராய்ச்சி சாதாரண விசயம்தான். ஆர்வம் மட்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம். அந்த ஆர்வத்தைச் சரியான திசையில் கொண்டு சென்றால் மாணவர்களை ஆராய்ச்சி யாளர்களாக உருவாக்கலாம் என்பதை நிரூபித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மலர்ச்செல்வி.

சிறுவயதில் இருந்தே பள்ளி மாணவர்களை இதற்காகத் தயார்படுத்திவருகிறார் அவர். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துவருகிறார் அவர்.

மதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் மலர்ச்செல்வி. வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்ற இவர் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள முத்துப்பட்டி பல்கலைக்கழக நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தன் பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவர் களுக்கும் ஆராய்ச்சி முறைகளைக் கற்றுக் கொடுக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்திவருகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குப் பள்ளி மாணவர்களைத் தயார் படுத்துகிறோம். ஆய்வு செய்வதற்காக மாணவர்களை நேரடியாகக் களத்துக்கு அழைத்துச் செல்கிறோம்.

சிறுவயதிலேயே கள ஆய்வில் ஈடுபடுவதால் அவர் களுக்கு எதிர்காலத்தில் ஆய்வு குறித்த பயம் இருக்காது. பள்ளிப் பருவத்தில் மேற்கொள்ளும் ஆய்வுகளால் அறிவியல் மீது ஆர்வம் ஏற்படும் மாணவர்கள் சிலர் பள்ளிப் படிப்பை முடித்த பின்பு கல்லூரியிலும் ஆய்வைத் தொடர்கின்றனர் என்கிறார் மலர்ச்செல்வி.

கப்பல் படையில் பயிற்சிப் பணி வாய்ப்பு

நமது நாட்டின் பாதுகாப்புப்படைகளில் இந்தியக் கப்பல்படைக்கு முக்கிய பங்கு உள்ளது. இங்கு அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்
படுகின்றன.

காலியிட விபரம் : அப்ரென்டிஸ் பிரிவில் மொத்தம் 180 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இவற்றில் பிட்டரில் 15, மெசினிஸ்டில் 10, ஷீட் மெட்டல் ஒர்க்கரில் 15, வெல்டரில் 15, பிளம்பரில் 10, பில்டிங் கன்ஸ்ட்ரக்டரில் 10, மெசின் டூல் மெக்கானிக்கில் 5, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேசன் மெக்கானிக்கில் 5, மெக்கானிக் டீசலில் 15, பெயிண்டரில் 10, எலக்ட்ரீசியனில் 20ம், மேலும் சில பணிகளுக்கு 5 காலியிடங்கள் உள்ளன.

இவை அனைத்தும் ஓராண்டு அப்ரென்டிஸ் பயிற்சிக்கான காலி யிடங்களாகும். இரண்டு ஆண்டு  அப்ரென்டிஸ்

காலியிடங்களில் பிட்டர், பிளம்பர் ஆகியவற்றில் தலா 10, பிரஷரில் 10, கார்பென்டரில் 15ம் காலி யிடங்கள் உள்ளன.

வயது : 01.04.1997 முதல் 31.03.2004க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பத்தாம் வகுப்பு மற்றும் அய்.டி.அய்., மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஜன., 2. விபரங்களுக்கு : ..www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_256_1718b.pdf

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner