எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் குரூப் 1 தேர்வுகளிலும் மட்டுமே நடந்துவந்த முதனிலைத் தேர்வுகள் இப்போது குரூப் 2 தேர்வுகளுக்கும்கூட நடத்தப்படுகின்றன. நிர்வாகத் துறைப் பணிகளுக்கான தேர்வுகளைப் போலவே நீதிப் பணித் துறைகளுக்கான தேர்வுகளிலும் முதனிலைத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.

மாவட்ட நீதிபதிகள், நீதித் துறை நடுவர்கள், அரசு உதவி வழக்குரைஞர் பணியிடங்களுக்கான தேர்வுகளில் முதனிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற முறை விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதி பணித்துறைத் தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், அத்தேர்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் மய்யங்கள் முதனிலைத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.

நான்கு தாள்கள்

இதற்கு முன்பு அரசு உதவி வழக்கறிஞர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டன. எழுத்துத் தேர்வில் நான்கு தாள்களை எழுத வேண்டியி ருந்தது. முதல் தாளில் குற்ற அறிக்கை உள்ளிட்ட ஆவணங் களை எழுதுதல், ஆவணங்களைத் தமிழில் இருந்து ஆங்கி லத்துக்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தல் ஆகிய திறன்கள் சோதிக்கப்பட்டன.

இரண்டாம் தாளானது, இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றியதாக அமைந்திருந்தது. மூன்றாம் தாள், இந்திய அரசியல் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தைப் பற்றியது. நான்காம் தாள், மத்திய-மாநில அரசுகள் இயற்றிய சிறப்புச் சட்டங்களைப் பற்றியதாக இருந்தது. நான்காம் தாளுக்காக மட்டுமே, ஏறக்குறைய 50 சட்டங்களைப் பற்றிய அறிமுகம் அவசியமாக இருந்தது. ஏறக்குறைய இதே முறையில் தான் நீதித் துறைப் பணிகளுக்கான தேர்வுத் தாள்களும் அமைந்திருந்தன.

கைகொடுக்குமா பழைய முறை?

இதற்கு முன் நடத்தப்பட்டுவந்த தேர்வுகள், பெரிதும் நீதிமன்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே அமைந் திருந்தன. எனவே, வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டே நீதித் துறைத் தேர்வுகளை எழுதுவது எளிதாக இருந்தது. இளம் வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர்களின் வழி காட்டுத லோடு, தேர்வுகளை எளிதில் அணுக முடிந்தது.

புதிய முறையில், முதனிலைத் தேர்வு சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் கொள்குறி (அப்ஜெக்டிவ்) முறையில் அமைந்திருக்கும். சட்டவியல், ஒப்பந்தச் சட்டம், தீங்கியல் சட்டம் என அடிப்படைச் சட்டக் கோட்பாடுகளை மய்யமாகக் கொண்டிருக்கும். இவை அனைத்துமே சட்டப் படிப்பின்போது பாடங்களாகப் படித்தவைதாம். என்றாலும், வழக்குரைஞராகப் பணியாற்றும் போது குறிப்பிட்ட சில சட்டங்களுக்கே முதன்மை கவனம் கொடுப்பதால், தேர்வுக்காகப் பழைய பாடங்களை மீண்டும் நினைவில் கொள்வது அவசியம். சட்டப் படிப்பில் படித்த பாடங்களை கொள்குறி (அப்ஜெக்டிவ்) முறையிலான தேர்வில் எதிர் கொள்வது எப்படி என்பதுதான் இப்போது உள்ள சவால். முதனிலைத் தேர்வில் எத்தனை கேள்விகள், எந்தப் பாடத் துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது, வினாக்கள் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் அமைந்திருக்குமா, முக்கிய தீர்ப்புகளைப் பற்றியும் கேட்கப்படுமா? அடிப் படையான சட்டக் கோட்பாடுகள் கேள்விகளாக வருமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக் கின்றன. முதலாவதாக நடத்தப்படப்போகும் முதனிலைத் தேர்வுக்குப் பிறகுதான் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்கும்.

ஆனால், அதற்கு முன்பே முதனிலைத் தேர்வு எந்த வகையில் அமைந்திருந்தாலும் அதை எதிர் கொள்வதற்கு வருங்கால நீதிபதிகள் தயாராகிவிட வேண்டும்.

நிலக்கரி நிறுவனத்தில்
காலிப் பணியிடங்கள்

நெய்வேலியில் உள்ள லிக்னைட் கார்ப்பரேசன் லிமிடெட் எரிசக்தி துறையில் புகழ் பெற்றது. பொதுத்துறை நிறுவனமான இது டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் என்ற இரண்டு பிரிவுகளில் அப்ரென்டிஸ்சிப் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலியிடங்கள்: டெக்னீசியன் அப்ரென்டிஸ்சிப் பிரிவில் 250 காலியிடங்களும், கிராஜூவேட் அப்ரென்டிஸ்சிப் பிரிவில் 120 காலியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப் பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் : www.nlcindia.com/new_website/careers/GAT-TAT%20ADVERTISEMENT.pdf  

ரயில்வேயில் காலிப்பணியிடங்கள்


ரயில்வேயின் கிளை நிறுவனமான இர்கான், ரயில்வே தொடர்புடைய கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது. இதன் கிளைகள் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளது.

இங்கு துணைப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் : ஏ.இ., - எலக்ட்ரிக்கலில் 15ம், ஜூனியர் இன்ஜினியர் - எலக்ட்ரிக்கலில் 20ம், எஸ்.அண்டு டி., சார்ந்த ஏ.இ.,யில் 5ம், ஜே.இ.,யில் 10ம், எஸ்.அண்டு டி., டிசைன் சார்ந்த ஜே.இ.,யில் 2ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : அனைத்து பதவிகளுக்கும் அதிகபட்ச வயது 30.

கல்வித் தகுதி : ஒவ்வொரு பிரிவுக்கும் கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழுமையான விபரங்களுக்கு இணைய தளத்தை பார்க்கவும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய். கடைசி நாள் : 2018 ஜன., 5. விபரங்களுக்கு :  www.ircon.org

வங்கியில் உதவியாளர்
பணியிடங்கள்

தனியார் துறை வங்கி யான சவுத் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கியில் காலியாக உள்ள 468 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது.

காலியிட விபரம்: கேர ளாவில் 340ம், தமிழகத்தில் 68ம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 35ம், டில்லியில் 25ம் என மொத்தம் 468 காலியிடங்கள் உள்ளன.

வயது : 2017 டிச., 31 அடிப்படையில் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப் பிக்கலாம்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படை யில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம் : 600 ரூபாய். கடைசி நாள்: 2017 டிச. 30.

விபரங்களுக்கு: www.southindianbank.com

அய்.டி.அய்., படித்தவர்களுக்கு பணியிடங்கள்

எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த வடிவங்களை உருவாக்குதல், உற்பத்தி, மேம்படுத்துதல், மற்றும் வணிகப் படுத்துதல் தொடர்புடையதுதான் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம்.

இது 1967இல் நிறுவப்பட்டது. இங்கு டிரேட்ஸ்மேன் பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வயது : 2017 நவ., 30 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்குப் பின், என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற அய்.டி.அய்., படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, டிரேடு டெஸ்ட், நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : விண் ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 500. கடைசி நாள் : 2018 ஜனவரி 5,

விபரங்களுக்கு :

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner