எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் சென்னை கிளையில் 32 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் எக்சிக்யூடிவ் டைப்பிங் பதவிக்கு பட்டப் படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கில் ஹையர் கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மில்க் ரெகார்டர் பதவிக்கு: கோ-ஆப்பரேடிவ் படிப்பு முடித்திருக்க வேண்டும். கட்டணம் ரூ. 250. தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Joint Managing Director,  The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited,  29 & 30, Ambattur Industrial Estate, Aavin Dairy Road, Chennai-600 098  

கடைசி நாள் : 2018 ஜன., 10. விபரங்களுக்கு :www.aavinmilk.com/hrjmd2612171.html

காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவர் காலியிடங்கள்

நியூ இந்தியா இன்ஸ்யூரன்சு நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு 26 மருத்துவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வயது : 1.1.2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹோமியோபதி, யுனானி, சித்தா, ஆயுர்வேதா முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 200. தேர்ச்சி முறை : நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
கடைசி நாள் : 2018 ஜன., 17.

விபரங்களுக்கு : www.newindia.co.in/portal

ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் 291 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் : லோயர் டிவிசன் கிளார்க்கில் 10, பயர்மேனில் 8, மெட்டீரியல் அசிஸ்டென்டில் 6, டிரேட்ஸ்மேன் மேட்டில் 266, எம்.டி.எஸ்.,சில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  Ministry Of Defence 27 Field Ammunition Depot, PIN - 909427, C/O 56 APO

கடைசி நாள் : 2018 ஜன., 16.

விபரங்களுக்கு : https://indianarmy.nic.in/ex.aspx

உரத்தொழிற்சாலையில்
காலிப் பணியிடங்கள்

பெர்டிலைசர்ஸ் அண்டு திருவாங்கூர் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்பது சுருக்கமாக ‘பாக்ட்’ என அழைக்கப்படு கிறது. இங்கு அப்ரென்டிஸ்   148 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : டிப்ளமோ பிரிவுக்கு அதிகபட்சம் 23ம், டிரேடு பிரிவுக்கு அதிகபட்சம் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளமோ பிரிவுக்கு தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பும், டிரேடு பிரிவுக்கு அய்.டி.அய்., படிப்பும் தேவைப்படும். விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.

கடைசி நாள்: 8.1.2018 முதல் 13.1.2018.

விபரங்களுக்கு :

பொறியியல் பட்டதாரி... விவசாயி... ஏற்றுமதியாளர்!

விவசாயம் செய்தால் வாழ்க்கை நடத்த முடியுமா என்று பலர் யோசித்துக் கொண்டிருக்கையில், விவசாயத்தையே தொழிலாக மாற்றி, கிராமத்தில் 100 பேருக்கு வேலை வழங்கி வருகிறார் கடலூரைச் சேர்ந்த முதுநிலை பொறியியல் பட்டதாரி ப.சக்திவேல்.

திருவண்ணாமலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளை முடித்தவர் சக்திவேல். படித்து முடித்ததும் வேறு வேலைக்குப் போகாமல், குறிஞ்சிப்பாடியில் தனது தந்தை நடத்தி வந்த நர்சரி பண்ணையைக் கவனிக்கத் தொடங்கினார். வழக்கமாக பூச்செடிகள், காய்கறிச் செடிகளை விற்று வந்த நர்சரி பண்ணை, சக்திவேலின் முயற்சியால், விவசாயிகளுக்கு பணப் பயன் அளிக்கும் சவுக்கு மரக்கன்றுகள் விற்பனை செய்யும் நர்சரியாக மாறியது.

“சவுக்கு மரத்திலிருந்து காகிதம் தயாரிக்கப்படுவதால் தமிழக அரசின் காகித நிறுவனம், தனியார் காகித நிறு வனங்களுக்கு மரத்தின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் மரம் தேவைப்படுகிறது. அதன் தேவையில் பெரும்பகுதி வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. நமது ஊரிலேயே இதை வளர்த்தால் நமது விவசாயிகளுக்கு லாபம்தானே? என்று தோன்றியது. அதனால் விவசாயிகளிடம் சவுக்கு மர வளர்ப்பையும், அதன் வீரிய ரக வளர்ப்பையும் பற்றிப் பேசத் தொடங்கினேன்.

மேலும் குறைவான தண்ணீரே இந்த சவுக்கு வளர்க்கப் போதுமானது. சவுக்குக்கு பராமரிப்பும் அதிக அளவில் தேவையில்லை’’ என்கிறார் சக்திவேல்.

கோவையிலுள்ள வன மரபியல் - மர வளர்ப்பு நிறுவனத்தின் சவுக்கு மர ஆராய்ச்சியாளர் நிக்கோடமஸின் கண்டுபிடிப்பான சிஎச்-1, சிஎச்-5 என்ற ரகத்தை

விவசாயிகளுக்கு பிரபலப் படுத்துவதில் தனது பணியைத் தொடங்கியிருக்கிறார் சக்திவேல்.

இந்த ரகத்தில் அப்படியென்ன இருக்கிறது என்கிற கேள்விக்கு அவரே பதிலளிக்கிறார்: “”பொதுவாக இந்தியாவில் நாட்டு ரகங்களான சவுக்குகள்தான் பயிரிடப் படுகின்றன. இவை 4 - 5 ஆண்டுகள் வளரக் கூடியது.

ஆனால், நிக்கோடமஸின் ஆராய்ச்சியின் பலனாக கண்டுபிடிக்கப்பட்ட சிஎச் வீரிய ரகங்கள் 24 மாதத்தில் முழு வளர்ச்சி பெறுவதோடு, 40 அடி உயரம் வளர்ந்து, 60 - 70 டன் வெட்டக்கூடியதாகும். இதனால், விவசாயிகள் கூடுதல் பணப் பலனைப் பெறுகிறார்கள்.

இதனை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு கிராமங்களில் எங்களின் நர்சரி மூலமாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்” என்கிறார்.
சக்திவேல் படித்துவிட்டு வேறு ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் அவர் மட்டுமே வேலை பார்த்திருப்பார். இப்போது

அவருடைய நர்சரியில் நூறு பேர் வேலை செய்கிறார்கள்.

“தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே இந்த நர்சரி தொழிலை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, வேகாக்கொல்லை பகுதிகள் சிறப்பானவை.

அதில் குறிஞ்சிப்பாடியில் எனது குடும்பத்தினர் வசமிருந்த 5 ஏக்கர் நிலத்தில் தற்போது சிஎச்-1, சிஎச்-5 ரக சவுக்கு மரங்களைப் பதியம் போட்டு அதனை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்தப் பணியில் உள்ளூரைச் சேர்ந்த 100 பேர் வேலை செய்கிறார்கள்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சக்திவேல். சக்திவேல் நடத்தும் நர்சரியில் ஆண்டுக்கு ஒரு கோடி சவுக்கு கன்றுகளை விற்பனை செய்கிறார்கள். தமிழகத்தில் கன்று ரூ. 3-க்கும், வெளிமாநிலங்களில்

ரூ.4-க்கு வழங்குகிறார்கள்.

“ஏக்கருக்கு 3 ஆயிரம் கன்றுகள் நடவுச் செய்யலாம். ரூ. 20 லட்சம் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கி 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனினும், தமிழக விவசாயிகளை விட ஆந்திர மாநில விவசாயிகள் இது குறித்து நன்கு தெரிந்து வைத்திருக் கிறார்கள்.

ஆந்திராவுக்கு நிறைய சவுக்கு மரக்கன்றுகளை ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். எனவே, விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்தொழிலில் தாராளமாக ஈடுபடலாம்.

சவுக்கு வளர்ப்புத் தொழில்நுட்பம் தொடர்பாக கோவையில் பயிற்சியளிக்கப் படுகிறது. பயிற்சியைப் பெற்று நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் மேற் கொள்ளலாம்‘ என்கிறார் சக்திவேல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner