எழுத்துரு அளவு Larger Font Smaller Fontஇவ்வுலகில் வழிப்பறித் திருடர்கள், கொள்ளைக் கும்பல்கள் போல இணைய உலகிலும் உண்டு. ஹேக்கர்கள் எனப்படும் இவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் நமது கணினி அல்லது மொபைலை ஊடுருவி அதன் நிதி பரிமாற்றங்களையோ தனிப்பட்ட தகவல் களையோ களவாடிச் செல்கிறார்கள். இதுவே பெரும் நிதி, தகவல் களைக் கையாளும், பரிமாறும் நிறுவனங்கள் எனில் ஹேக்கர்களின் தாக்குதல்கள் பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதைத் தடுக்க நிறுவனங்கள் எதிக்கல் ஹேக்கர்ஸ் உதவியை நாடுகின்றன. இந்த ஹேக்கர்கள் தீவிரவாதப் பின்னணியுடன் இயங்கும் போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இணையத் தொடர்புகள் இலக்காகின்றன. அத்தகையத் தாக்குதல்களைத் தடுப்பதிலும் எதிக்கல் ஹேக்கர்களின் பணி முக்கியமானது.

வளரும் புதிய துறை

இணையம் இன்றி இணைப்பு சாத்தியமில்லை என்ற அளவுக்கு இன்று ஆன்லைன் வழி சேவைகள் நீக்கமற நிறைந்துவருகின்றன. இதைக் கணித்தே பெரும் பாலானோர் கணினித் துறைப் படிப்புகளை நம்பிக் கையுடன் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இந்தி யாவில் அய்.டி. துறை வேலைவாய்ப்புகள் முன்பு போல இல்லை. அதேநேரம் அய்.டி. படிப்புகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மாற்று வாய்ப்பாக எதிக்கல் ஹேக்கிங் தொடர்பான பணிவாய்ப்புகள் வரத் தொடங்கி விட்டன.

சைபர் செக்யூரிட்டி தொடர்பான ஆய்வின்படி ஹேக்கர்களின் தாக்குதலால் 2014இல் மட்டும் கிட்டத்தட்ட 400 கோடி டாலர் இழப்பை இந்திய நிறுவனங்கள் சந்தித்திருக்கின்றன. கடந்த அய்ந்தாண்டு களாக அதிகரித்து வரும் ரான்ட்சம் வேர் தாக்குதலில் நிதியைக் கையாளும் நிறுவனங்கள் மட்டுமன்றி, கடந்த ஆண்டு தனிநபர்களும் அதிஅளவு பாதிக்கப்பட்டிருக் கின்றனர். இதையொட்டி 2015இல் நாஸ்காம் வெளியிட்ட ஆய்வறிக்கை, இந்தியாவில் மட்டும் 77 ஆயிரம் எதிக்கல் ஹேக்கர்ஸ் தேவை ஆனால், தற்போது 15 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று தெரிவித்தது.

சைபர் தாக்குதல்கள், குற்றச் செயல்களைச் சட்டப்படி அணுகுவதற்காக 2013இல் மத்திய அரசு தேசிய சைபர் செக்யூரிட்டி கொள்கையைக் கொண்டுவந்தது. தேசிய சைபர் செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளரான குல்ஷன் ராய், அடுத்த 5 ஆண்டுகளில் சைபர் செக்யூரிட்டி துறையில் பயிற்சி பெற்ற 5 லட்சம் பணியாளர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால், தரமான கல்வி நிறுவனங்கள் இல்லாதது, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வின்மை காரணமாக இந்தக் குறிக்கோளை இன்னும் எட்டியபாடில்லை.

என்ன படிக்கலாம்?

கணினித் துறை சார்ந்த இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது பொறியியல் பட்டம் படித்தவர்கள், கூடுதலாக எதிக்கல் ஹேக்கிங் தொடர்பான சான்றிதழ் படிப்புமுதல் முதுநிலைப் பட்டயப் படிப்புவரை படிக்கலாம். முதுநிலை பட்டப் படிப்புகளாக எம்.எஸ்சி. சைபர் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு, எம்.டெக். சைபர் செக்யூரிட்டி மற்றும் தகவல் பாதுகாப்பு போன்றவையும் கிடைக்கின்றன. கேட் நுழைவுத் தேர்வு எழுதி இவற்றில் சேரலாம்.

எங்கே படிக்கலாம்?

கணினித் துறை சார்ந்த அடிப்படைக் கல்வியாக எதைப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்து எதிக்கல் ஹேக்கிங் சார்ந்த கூடுதல் படிப்புகளைத் திட்ட மிடலாம்.

அலகாபாத்தில் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர் மேஷன் டெக்னாலஜி, கோழிக் கோட்டின் நேசனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலெக்ட் ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி  போன்ற நிறுவனங்களில் முழுமையான எதிக்கல் ஹேக்கிங் படிப்பு களைப் பெறலாம். இதற்கென்றே புகழ்பெற்ற கொல்கத்தா இந்தியன் ஸ்கூல் ஆஃப் எதிக்கல் ஹேக்கிங், டில்லி எதிக்கல் ஹேக்கிங் டி ரெயினிங் இன்ஸ்டிடியூட் போன்றவற்றில் சைபர் இணைய பாதுகாப்பு மய்யமாகக் கொண்டு பல்வேறு தொழிற்படிப்புகள் வழங்கப்படு கின்றன. இந்தியாவின் புகழ்பெற்ற எதிக்கல் ஹேக்கர் களான அன்கிட் ஃபாடியா உள்ளிட்டோர் கட்டணத்துக்கு ஏற்ப சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறார்கள். மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் பலவும் ஏராள மான சான்றிதழ் படிப்புகளை இணையம் வாயிலாகவே வழங்குகின்றன.

கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகள், மத்திய-மாநிலப் புலனாய்வு அமைப்புகள், தடவியல் துறை, அரசு ஏஜென்சிகள் போன்றவை நேரடியாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சைபர் செக்யூரிட்டிக்கான பணி வாய்ப்பை வழங்குகின்றன. தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றிலும் எதிக்கல் ஹேக்கர்ஸ் பணிவாய்ப்பு பெறலாம்.

எதிக்கல் ஹேக்கிங் துறை எதிர்காலத்தில் மேலும் வளர்வதற்கும், கூடுதல் படிப்புகள், வேலைவாய்ப்பு களைக் கொண்டதாக மாறவும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்புடன் இத்துறைக்குள் வரும் புதியவர்கள் ஆண்டு வருமான மாக ரூ.3- 5 லட்சங்களில் ஊதியம் பெறுகிறார்கள்.

கூடுதல் கல்வியுடன் துறை அனுபவமும் பெற்றவர்கள் இன்ஃபர் மேசன் செக்யூரிட்டி அனலிஸ்ட், எதிக்கல் ஹேக்கிங் எக்ஸ்பர்ட்ஸ் போன்ற பதவிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம்வரை ஊதியம் பெறுகிறார்கள்.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற எதிக்கல் ஹேக்கர்ஸில் பெரும்பாலானோர் தங்களது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் விளையாட்டாக ஹேக்கிங் குறித்து ஆராயத் தொடங்கி, இன்று முழுநேர வேலையாக அத்துறையில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அடிப்படைக் கல்வியுடன் ஆர்வம், படைப்பாற்றல், உற்று நோக்குதல், தர்க்கரீதியான உடனடி முடிவெடுக்கும் திறன், உத்வேகம் உள்ளிட்ட திறன்கள் இத்துறையினருக்கு அவசியம்.

லிட்டருக்கு 200 கி.மீ ஓடும் வகையில் வாகனம் வடிவமைப்பு

வேலூர் விஅய்டி பல்கலைக்கழக பி.டெக்., மாணவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 கி.மீ. ஓடும் வகையில் “ஈ.டி. 18’ என்ற நவீன பந்தய வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து விஅய்டி பல்கலைக்கழகத்தின் “ஈகோ டைட்டன்ஸ்’ குழுவில் இடம் பெற்றிருந்த பி.டெக்., மாணவர்கள் சுபாங் கரே, சித்தார்த் பத்ம நாபன். நிலேஷ் குமார், ஹிமான்சு  உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருப் பதாவது: ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 கி.மீ., தூரம் வரை  செல்லும் காரை, விஅய்டி பல்கலைக்கழக பி.டெக்., மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

முன்புறம் இரண்டு சக்கரங்களுடனும், பின்புறம் ஒரு சக்கரத்துடனும் உள்ள இதன் பெயர் “ஈ.டி.18’. எரிபொருளை சிக்கனப்படுத்த இ.எஃப்.திஅய். என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இதை இயக்க 2 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி பொருத் தப்பட்டுள்ளது. வாகனத்தின் மொத்த எடை 56 கிலோ. என்ஜின் 50 சிசி திறன் கொண்ட ஹோண்டா இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த காரில்  அதிகபட்சம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இந்த காரின் சேசிஸ், அதிக திறன் கொண்ட அலுமினி யத்தால் செய்யப்பட்டுள்ளது. . எளிதில் கையாளப் படும் இலகு பிரேக்குகள் இதன் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அய்ந்து மாதங்களாகப் பணியாற்றி ரூ.15 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட “ஈ.டி.18’ வாகனம் சிங்கப்பூரில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள செல் ஈகோ மாரத்தான் போட்டி யில் கலந்து கொள்கிறது.

அந்த ரேஸ் 11 சுற்றுகள் கொண்டது என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு வாகனத்தில் 250 மி.லி. பெட்ரோல் மட்டுமே நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டருக்கு சுமார் 200 கி.மீ. தொலைவுக்கு இதை இயக்க முடியும். “ஈ.டி.18’ வாகனத்தை மொத்தம் 10 பேர் இணைந்து வடிவமைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்த இளைஞர்!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதுவரை 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ள துடன் காயமடையும் காட்டு விலங்கு களான யானைகள், புலிகள், குரங் குகள் பேன்றவைகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்.

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உத்தாணி நுவாகான் என்கிற ஊரைச் சேர்ந்த கிருஷ்ண சந்திர கோச்சாயத் என்கிற இளைஞர் பாம்புகளைக் கண்டு அஞ்சுவதில்லை. எத்தகைய கொடிய நஞ்சுள்ள நாகமாக இருந்தாலும் வெறுங் கையால் அவற்றைப் பிடித்து விடுகிறார். சுற்று வட்டாரத்தில் எந்த வீட்டில் பாம்பு புகுந்தாலும் அதைப் பிடிக்க இவரையே அழைக்கின்றனர்.

இவர், பாம்பு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு காட்டுபவராக உள்ளார். காடுகளில் காயம்பட்டுத் துன்புறும் விலங்குகளைக் கண்டால் அவற்றுக்கும் மருந்திட்டுச் சிகிச்சை அளித்து வருகிறார். மான், புலி, யானை, சிறுத்தை, குரங்கு ஆகிய விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சிகிச்சை அளித்து அவற்றைக் காப்பாற்றுவதுடன் அதனை மீண்டும் காட்டில் விடுப்பது தனக்கு மன நிறைவைத் தருவதாக அவர் தெரிவிக்கிறார். தோல்கள் மற்றும் விலங்குகளின் பிற பாகங்களை விற்க விரும்பும் வேட்டைக்காரர்களிடமிருந்து அனைத்து வகையான விலங்குகளையும் காப்பாற்றி வனத்துறையை உதவி வருகிறார்  கிருஷ்ணச் சந்திர கோச்சாயத்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner