எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வரும் ஆண்டுகளில் நம் நாட்டில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகவிருக்கும் துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்று. இத்துறையைக் குறிவைத்துத் தங்களைத் தகுதிபடுத்திக்கொள்பவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்தியாவின் சேவைத் துறைகளில் முதலிடத்தில் இருப்பது பயணம், சுற்றுலாத் துறை. 90-களில் இத்துறை இந்தியாவில் முக்கிய கவனம் பெறத் தொடங்கியது. நாட்டின் பண்பாட்டுச் சின்னங்கள், கொட்டிக் கிடக்கும் இயற்கையழகு ஆகியன இந்தி யாவில் சுற்றுலாத் துறையை வளர்த்துக் கொள்ள இயற்கை தந்த அன்பளிப்பு. இவற் றுடன் பெருகிவரும் மருத்துவச் சுற்றுலாவும் அந்நியச் செலவாணியை அதிகம் ஈட்ட கை கொடுக்கிறது. அதற்கேற்ப வியத்தகு இந்தியா, மகிழ்வூட்டும் தமிழ்நாடு என மத்திய, மாநில அரசுகள் சுற்றுலாத் துறையை ஊக்குவித்து வருகின்றன. ஆனால், அத்துறை தகுதியான பணியாளர்கள் இன்றித் தத்தளிக்கிறது.

விரவிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்

உலகப் பயணம் மற்றும் சுற்றுலா அமைப் பின் 2016ஆம் ஆண்டு தகவலின்படி, 2025-க் குள் கிட்டத்தட்ட 4.6 கோடி வேலை வாய்ப்புகள் இந்தியச் சுற்றுலாத் துறையில் உருவாக இருக்கின்றன. அதற்கான பாதையில் மத்திய அரசும் சுற்றுலாத் துறை சார்ந்த தங்கும் விடுதிகளுக்கு 100 சதவீத அந்நிய முதலீட்டைத் திறந்துவிட்டிருக்கிறது. குறிப் பிட்ட நாடுகளின் பயணிகளுக்கு இந்தியாவை அடைந்த பிறகும் விசா வழங்கும் நடை முறைத் தளர்வுகள் அமலில் உள்ளன. அரசின் வழக்கமான வேலை வாய்ப்புகளுக்கு அப் பால், வளர்ச்சியை முன்கூட்டியே கணித்த தனியார் நிறுவனங்கள் இத்துறையில் அதிக ளவில் இறங்கி உள்ளன.

சுற்றுலாச் சந்தை மேம்பாடு, விற்பனைப் பிரதிநிதிகள், நிர்வாகிகள், சுற்றுலா திட்டமிடு வோர், ஆலோசகர்கள், வழிகாட்டிகள், தகவல் உதவியாளர்கள், முன்பதிவு அலு வலர்கள், பணப் பரிமாற்ற அலுவலர்கள், அனைத்து மார்க்கப் பயணங்களுக்குமான உதவியாளர்கள், விருந்தோம்பல்-விடுதி தொடர்பான அனைத்துப் பணியாளர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள், பாதுகாவ லர்கள் என மிகப் பெரும் வேலைவாய்ப்புக் கான சந்தை சுற்றுலாத் துறையை மய்யமாகக் கொண்டுள்ளது.

சுற்றுலாவிலேயே மருத்துவம், ஆன்மிகம், பண்பாடு, கல்வி, சாகசம் எனப் பலவகைகள் இருப்பதால் அவற்றின் பொருட்டும் நிபுணத் துவம் அடிப்படையிலான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அயல் நாட்டுப் பயணிகளுக்கு அப்பால் பன்மைத்துவம் அடங்கிய நாட்டின் உள்நாட்டுப் பயணிகள் தங்கள் தேசத்தின் வேறுபட்ட இடங்களைப் பார்வையிட விரும்புவதாலும், விடுமுறைத் தேவைகள், ஆன்மிக அடிப்படையிலும் தனியான உள்நாட்டுச் சுற்றுலாச் சந்தையும் விரிவடைந்துள்ளது.

தொடர்புடைய உயர்கல்விப் பிரிவுகள்

இளநிலைப் பட்டப் படிப்புடன் சுற்றுலாத் துறை தொடர்பான சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பை முடித்தவர்களே இன்று சுற்றுலாத் துறை சார்ந்த தனியார் நிறுவ னங்களில் கணிசமாகப் பணியாற்றுகின்றனர். நேரடிப் பட்டம், தொலை நிலைப் பட்டம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்குப் பணி வாய்ப்பு உள்ளது.

உயர் பணியிடங்களில் எம்.பி.ஏ. டூரிசம் அண்டு ஹாஸ்பிடாலிடி முடித்தவர்கள் பணியாற்றுகின்றனர். நொய்டா, குவாலியர், புவனேஸ்வர், நெல்லூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்  கல்வி நிறுவனங்களில் பயிலலாம். சுற்றுலாத் துறையைக் குறிவைத்து உயர்கல்வியைத் தீர்மானிப்பவர்கள், இந்த எம்.பி.ஏ.வுக்கு மாற் றாக எம்.டி.ஏ எனப்படும் சுற்றுலா நிர்வாகம் தொடர்பான முதுநிலைப் படிப்பையும் பல கல்லூரிகள் வழங்குகின்றன.

ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன்  றிநிஞிவி எனப்படும் சுற்றுலாத் துறை முதுநிலைப் பட்டயப்படிப்பை மிமிஜிஜிவி, அய்தராபாத்தில் உள்ள ழிமிஜிபிவி,  கேரளாவில் உள்ள  ரிமிஜிஜிஷி ஆகிய கல்வி நிறுவனங்களில் பயிலலாம். இளநிலைப் பட்டப் படிப்பாகச் சுற்றுலாத் துறையைத் தேர்வு செய்ய விரும்புவோர், பிளஸ் டூ அறிவியல் பிரிவில் அடிப் படை மதிப்பெண் தகுதி களுடன் பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி அண்டு டூரிசம் படிக்கலாம்.

முதுநிலையிலும் இதே பிரிவில் எம்.எஸ்.சி பெறலாம். பிளஸ் டூ தகுதியுடன் பட்டப் படிப்புக்கு மாற்றாக ஓராண்டு பட்டயப் படிப் பைப் பல்வேறு முன்னணி தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வழங்குகின்றன.

உதாரணத் துக்கு :லீttஜீ://ளீuஷீஸீவீணீநீணீபீமீனீஹ்.நீஷீ.வீஸீ/ போன் றவை சுற்றுலா, பயணம், விருந் தோம்பல் தொடர்பான பல்வேறு படிப்பு களைத் தொலை நிலைக் கல்வியாகவும் வழங்குகின்றன. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படித்தவர்களும் இத்துறையில் பணி வாய்ப்பு களைப் பெறலாம்.   நுழைவுத் தேர்வின் அடிப்படையில் முதன்மையான ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு இளம் வயதி லேயே அதிகச் சம்பளத்துடன் பணிவாய்ப்பு காத்திருக்கிறது.

சவாலை வெல்லலாம்

செய்யும் பணியில் சவாலையும் புதிய அனுபவங்களையும் விரும்புவோர் இத் துறையில் சேர்ந்து சாதிக்க முடியும். மொழி, நாடு, கலாச்சார அடிப்படையில் வேறுபடும் புதுப்புது மனிதர்களுடனான சந்திப்பு, அவர்களைக் கையாளுதல், விரைந்து செய லாற்றுதல், அடிப்படையான கணினி, அர சியல், புவியியல், சமூகம், வரலாற்று அறிவு ஆகியவற்றை இத்துறையினர் வளர்த்துக் கொண்டால் தொடர்ந்து சாதிக் கலாம். சொந்தமாகச் சுற்றுலா ஏஜென்சி நடத்துவது, பேக்கேஜ் அடிப்படையில் உள்நாடு, வெளி நாடு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது என சுயமாகவும் இத்துறையில் ஜொலிக்கலாம்.

சுற்றுலா சொல்லித்தரும் நிறுவனங்கள்:

IITTM - http://www.iittm.ac.in/
NITHM - http://nithm.ac.in/
KITTS - http://www.kittsedu.org/

மீன்வளப் படிப்புகள் நீங்களும் படிக்கலாம்


உணவு சார்ந்த தொழில்களுக்கு எந்தக் காலத்திலும் அழிவு இருந்ததில்லை. அந்த வகையில், ஆதி காலத்தில் ஈட்டியால் குத்தி மீன் பிடிக்கத் தொடங்கியதிலிருந்து தூண்டிலில் மீன்பிடிக்கும் இந்தக் காலம்வரை மீன்பிடித் தொழில் சீரான வளர்ச்சி அடைந்துவருகிறது. உலக அளவில் மீன்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதிலிருந்து மீன்பிடித் தொழிலின் வளர்ச்சியை அறியலாம். எனவே, மீன் பிடித்தல் சார்ந்த படிப்புகளின் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தாராளமாக தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

மீன் உற்பத்தியைப் பெருக்கிப் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும், வேலை யற்ற இளைஞர்கள், மீனவ மகளிர், கிராமப்புற மக் களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், மீன் வளம் சார்ந்த பல்வேறு பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் இன்று மீன் வளப் படிப்பு முக்கி யத்துவம் பெற்றுவருகிறது. இதற்காகவே நாகையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகமும் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் மீன் வளப் படிப்புகள் வழங்கப்படு கின்றன. இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) என மூன்று நிலைகளில் படிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சிப் படிப்புகளாக மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்புப் பொருளா தாரம், மீன் பதப்படுத்தும் தொழில் நுட்பம், மீன் வள மேலாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின் றன. முதுகலைப் படிப்பான எம்.எஃப்.எஸ்சி. பிரிவில் மீன்வளர்ப்பு, நீர்வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை, மீன் உயிரித் தொழில் நுட்பம், மீன் வளர்ப்புப் பொருளாதாரம், மீன்வளப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மீன் பதப் படுத்தும் தொழில் நுட்பம், மீன்வள மேலாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர இளங்கலைப் படிப்பான பி.எஃப்.எஸ்சி. பிரிவில் நான்காண்டு பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பி.எஃப்.எஸ்சி.யில் சேர பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்தப் படிப்புகளில் சேரவும், கல்வித் தகுதி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு ஆகிய வற்றைப் பற்றி அறிவ தற்கும் லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tஸீயீu.ஷீக்ஷீரீ.வீஸீ/  அணுகலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியிடங்கள்

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறு வனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் நிறுவனத்தின் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென்பிராந்திய அலுவலகங்களில் விற்பனை பிரிவில் ஜுனியர் ஆபரேட்டர் (கிரேடு-1  மற்றும் ஏவியேஷன்) பதவியில் 97 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப் பட உள்ளன. கிரேடு-1 பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி.-க்குப் பிறகு 2 ஆண்டு அய்.டி.அய். பயிற்சியை (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென் டேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ்) முடித்திருக்க வேண்டும். ஓராண்டு கால பணி அனுபவமும் அவசியம்.
அதேபோல், ஏவியேஷன் பிரிவு ஜுனியர் ஆபரேட்டர் பதவிக்கு பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓராண்டு கனரக வாகனத்தை ஓட்டிய அனுபவமும் தேவை. இரு வகை பதவிகளுக்கும் வயது வரம்பு 18 முதல்
26-க் குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவின ருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு  அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கான தேர்வில், சம்பந்தப்பட்ட தொழில்பிரிவு பாடம், பொது அறிவு, அடிப்படை கணிதம், ரீசனிங், அடிப்படை ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 100 கேள்விகள் இடம்பெறும். அதேபோல், ஏவியேஷன் பணிக்கான தேர்வில் தொழில் பிரிவு பாடம் தவிர்த்து எஞ்சிய பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். தகுதியுடையோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தை (ஷ்ஷ்ஷ்.வீஷீநீறீ.நீஷீனீ) பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner