எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கூலித் தொழிலாளியின் மகன் கடின உழைப்பால் முன்னேறி பெரிய நிறுவனத்தை நடத்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குபவர்தான் பி.சி. முஸ்தபா.

கேரள மாநிலம், வயநாடு கல்பட்டா அருகேயுள்ள சென்னலோடு கிராமத்தைச் சேர்ந்தவர். முஸ்தபாவின் தந்தை அங்குள்ள காபி தோட்டத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார்.

முஸ்தபா தொடக்கத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாதவராக இருந்தார். 6 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த அவர், அவரது தந்தையின் விருப்பப்படி அவருடன் தினக்கூலி வேலைக்குச் சென்றார். ஆனால், முஸ்தபாவின் கணித ஆசிரியர் அவரின் தந்தையிடம் பேசி முஸ்தபாவை மீண்டும் பள்ளியில் சேர்த்தார்.

10 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றாலும், கல்லூரியில் சேர முடியாமல் பொருளாதார நிலை தடுத்தது. அவரது தந்தையின் நண்பர் ஒருவர், கோழிக்கோடு ஃபாரூக் கல்லூரியில் உள்ள தொண்டு விடுதியில் இலவச உணவுத் திட்டத்தின் மூலம் முஸ்தபாவை கல்லூரியில் சேர்த்துவிட்டார். பலரின் ஏளனப் பார்வைக்கு இடையே, பல அவமானங்களைத் தாங்கிக் கொண்டு, கடினமாக உழைத்து கல்லூரி படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றார் முஸ்தபா.

பொறியியல் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் மாநிலத்தில் 63ஆவது இடம் பெற்று, மண்டல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அதிலும், அவர் விரும்பிய கணினி அறிவியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, கல்வி உதவித்தொகை, கல்விக்கடன் ஆகியனவும் கிடைத்தன.

1995-இல் படிப்பை முடித்த முஸ்தபாவுக்கு பெங்களூருவில் மான்ஹாட்டன் நிறுவனத்தில் உடனடியாக வேலை கிடைத்தது. சில நாட்களிலேயே மோட்டரோலா நிறுவனத்தில் வேலை கிடைக்க, அயர்லாந்து அனுப்பப் பட்டார். அங்கு சென்ற 3 மாதங்களில் சிட்டி பேங்க்-இல் வேலை கிடைத்து துபைக்கு இடம்பெயர்ந்தார்.

1996-ஆம் ஆண்டிலேயே அவருடைய ஊதியம் லட்சத்தில் மாறியது. கடந்த 2003-இல் பணியில் இருந்து விலகி இந்தியாவுக்கு திரும்பினார்.

கேட்- தேர்வில் வென்று பெங்களூரு அய்அய்எம்-இல் எம்பிஏ சேர்ந்த முஸ்தபா, அதேநேரத்தில் தன்னுடைய நெருங்கிய உறவினர்களோடு சேர்ந்து தொழில் தொடங் குவது குறித்து ஆலோசித்தார்.

அவர்களின் ஆலோசனையின்படி, இட்லி,  தோசை மாவு தயாரித்து விற்பது என முடிவானது. முஸ்தபா 50 சதவீதம், மற்ற 4 உறவினர்கள் சேர்ந்து 50 சதவீதம் என மொத்தம் ரூ. 25 ஆயிரம் முதலீட்டில்  இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்தனர்.

நாள்தோறும் 10 பாக்கெட் என்ற அளவில் தொடங்கி, வாடிக்கையாளர்களின் வரவேற் பால், அது 100 பாக்கெட்டாக உயர்ந்தது. இதையடுத்து, ரூ. 6 லட்சத்தை முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்திய முஸ்தபா, 2008-இல் மேலும் ரூ. 40 லட்சம் முதலீடு செய்து அமெரிக்காவில் இருந்து புதிய கிரைண் டர்களை தருவித்தார். இன்று பல வகையான மாவுகளைத் தயாரிக்கும்  நிறுவனம், அதில் பதப்படுத்துவதற்கான எந்த உபப் பொருள் களையும் சேர்க்காமல், இயற்கை மாறாமல் வழங்கி வருவதால், பல நாடுகளில் வரவேற் பைப் பெற்றுள்ளது.

2012இல் சென்னை, மங்களூரு, மும்பை, புனே, அய்தராபாத் என விரிந்த தொழில், 2013-இல் துபையிலும் கால்பதித்தது.

2015-இல் ரூ. 4 கோடி முதலீட்டில் நாள் தோறும் 50 ஆயிரம் கிலோ மாவு உற்பத்தி, விற்பனை என ரூ. 100 கோடி வருவாயை இந்த நிறுவனம் எட்டியது. 2005-இல் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கொண்டு தொடங் கப்பட்ட  நிறுவனத்தில் 2015-இல், அதாவது 10 ஆண்டுகளில் 1100 பேர் பணி யாற்றினர்.

கிராமப்புறங்களில் இருந்து வருவோருக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்குவதாகக் கூறும் முஸ்தபா, ஈடுபாட்டோடு உழைப் பவர்களுக்கு மாதம் ரூ. 40 ஆயிரம் வரை ஊதியம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-இல் ரூ. 150 கோடி வருவாயுடன் இயங்கி வரும் இந்நிறுவனம், அமெரிக்கா, அய்ரோப்பா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடு களிலும் கால் பதித்துள்ளது.

வரும் 2021-இல் ரூ.1000 கோடி வருவாயை எட்ட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வரும் முஸ்தபா, தற்போது உள்ளதைப் போல 6 மடங்கு மாவு (தினமும் 3 லட்சம் கிலோ) உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் இந்தியா விலும், துபையிலும் அமைக்கப்படும்.

இதன் மூலம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலை அளிப்போம் என்கிறார் நம்பிக்கையுடன்.

இந்திய ஸ்டேட் வங்கிப் பணியிடங்கள்

இந்திய ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பதவியில்  8,301 பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின் படி, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த மாநிலத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப் பிக்கிறார்களோ அம்மாநில மொழியில் எழுதவும் வாசிக்கவும் பேசவும் புரிந்துகொள்ளவும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தத் திறன்களைச் சோதிக்கும் விதமாக எழுத்துத் தேர்வு முடிந்ததும் மொழித்திறன் தேர்வு நடத்தப்படும்.

இரண்டு விதமான தேர்வு

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படு வார்கள். நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வு என்பது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய தேர்வுகளை உள்ளடக்கியது. அப்ஜெக்டிவ் முறையில் இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன்வழியில்தான் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில், பொது ஆங்கிலம், அடிப்படைக் கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 100. ஒரு மணி நேரத்தில் விடை அளிக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டத் தேர்வான முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக் கப்படுவார்கள். இதில், பொது அறிவு மற்றும் நிதி அறிவு, ஆங்கிலம், கணிதம், ரீசனிங் மற்றும் கணினி அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து 190 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் 200. தேர்வு நேரம் 2 மணி 40 நிமிடம்.

முதன்மைத் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு மொழித் திறன் தேர்வு நடத்தப்படும். எழுத்தர் பதவிக்கு சம்பளம் தோராயமாக ரூ.24 ஆயிரம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும் சிறுபான்மையினருக்கு (கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்றோர்) இந்திய ஸ்டேட் வங்கி சார்பில் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இது குறித்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது குறிப்பிட வேண்டும்.தகுதியுடைய பட்டதாரிகள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தைப் பயன் படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

‘காகித தொழில்நுட்பம்’ படிக்கலாமே!  

காகிதம் என்பது எங்கும் நிறைந்திருக்கும் பொருளாகும். பல்வேறு துறைகளுக்குத் தேவை யான, அடிப்படை பொருளாக அது திகழ்கிறது. என்னதான் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், காகிதத்தின் பயன்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.

மரங்கள் வெட்டப் படுவதைத் தவிர்க்க காகிதத் தின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

என்றாலும், பேப்பரின் பயன்பாடு பெரிய அளவில் குறையவில்லை. அத்தகைய காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்த படிப்புகளைப் படித்தால் அது தொடர்பான தொழிலைத் தொடங்கவும், காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை யில் பணிபுரியவும் வாய்ப்பு உள்ளது.

பேப்பரின் தேவை அதிகமாக இருப்பதால், அத்தொழிலுக் கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது.

காகிதத் தொழில்நுட்ப படிப்பை “இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி’ ரூர்கீ (அய்அய்டி) நடத்தி வருகிறது. இதற்கென தனியாக ஒரு துறையே இயங்கி வருகிறது.

மேலும் தெரிந்து கொள்ள: https://www.iitr.ac.in/departments/DPT/pages/People+Students.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner