எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவன், தடகளத்தில் உலகளிவில் சாதிக்க துடிக்கிறார். திருச்சியில் இருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது துறையூர் நாகலாபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தம்பதி காமராஜ்-செல்வி. விவசாய கூலி தொழில் செய்யும் இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன். மூத்த மகள் ப்ரவியா பிகாம் படித்துள்ளார்.

இளையவர் பிரதிபா எம்காம் படிக்கிறார். மகன் மணிகண்டன் (14) தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு

பிறவியிலேயே காது கேட்காது, வாய் பேசமுடியாது. வகுப்பில் சொல்லி கொடுப்பதை புரிந்து கொண்டு நன்றாக படிக்க, எழுத தெரியும். ஒரு முறை விளையாட்டில் பங்கேற்று பரிசு வாங்கினார். அப்போது கிடைத்த கைத்தட்டல், பாராட்டில் மனதை பறி கொடுத்தான். அன்று முதல் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டினார்.

பள்ளி சார்பில் அவ்வப்போது நடை பெறும் வட்ட, மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக பங்கு பெற்று பல பதக்கங்களை குவித்தார். மணிகண்டனுக்கு நன்றாக எழுத தெரிந்தாலும், தனது கருத்துக்கள், ஆசைகளை முழுமையாக வெளிப்படுத்த முடிய வில்லை. இதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கும் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நலமுன்னேற்ற சங்கத் தலைவராக உள்ள ரமேஷ்பாபுவிடம் மணிகண்டனை பெற்றோர் அழைத்து சென்றனர். அவர் மணிகண்டனுக்கு பயிற்சி யளித்தார்.  அப்போது அவருடைய விளையாட்டு ஆர்வத்தை தெரிந்து கொண்டு மணிகண்டனுக்கு அங்குள்ள ஒரு பள்ளி மைதானத்தில் தீவிர பயிற்சி அளித்து வந்தார்.

முதல், முதலாக சிவகாசி, கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில காதுகேளாதோர்  விளையாட்டுப் போட்டியில் மணிகண்டனை கலந்து கொள்ள வைத்தார். இதில் கேரம் போர்டு, உயரம் தாண்டுதல், தடகள போட்டிகளில் 6 தங்க பதக்கங்களும், 1 வெண்கல பதக்கத்தையும் மணிகண்டன் குவித்தார்.

இதையடுத்து ரமேஷ்பாபு, மணிகண்டனை ஒலிம்பிக் போட்டி வரை பங்கேற்க வைக்க  தீவிர பயிற்சி கொடுக்க முடிவு செய்தார். இதற்காக காதுகேளாதோர் மாவட்ட நலசங்கம் மூலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி உதவியுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து உதவி கேட்டார்.

இதைத் தொடர்ந்து மணிகண்டன் விடுதியில் தங்கி  அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெறவும், இலவச உணவு வழங்கவும் அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டன், தடகள பயிற்சியாளர் சுகந்தியிடம் 40 நாட்கள் தீவிர பயிற்சி பெற்றார்.

அவருடைய நம்பிக்கை வீண் போக வில்லை. பயிற்சி முடித்ததும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடை பெற்ற தேசிய காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகளில் தடகளப் பிரிவில் 100, 200 , 500 மீட்டர் ஓட்டப் போட்டிகள் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் தன்னம்பிக்கையுடன் பங்கேற்றார்.

அவருக்கு 3 தங்கப் பதக் கங்கள், 1 வெள்ளி பதக்கம் கிடைத்தது மட்டுமல்லாமல் காதுகேளாதோர் விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் முதல் முறையாக தங்கம் வென்றவர் என்ற சாதனை யும் படைத்தார்.

இதுவரை பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ள மணிகண்டன், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடை பெற உள்ள உலக காதுகேளாதோர் விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் களம் இறங்க உள்ளார்.

ஆனால்  மணிகண்டனுக்கு தரமான பயிற்சியும், அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க முடியாமல் நிதி பிரச்சினையால் பெற்றோர் திண்டாடி வருகின்றனர்.

மணிகண்டனின் பெற்றோர் கூறுகையில்,  மணிகண்டனுக்கு 2வயதில் தான் காதுகோளாறு என தெரிய வந்தது. மணிகண்டன் தேசிய அளவில் விளையாடுவதற்கு காரணம் ரமேஷ்பாபு சார் தான். பள்ளி முடிந்து மாலையில் மணிகண்டனுக்கு டியூசன் சொல்லி கொடுக்கிறார்.

இப்போதெல்லாம் 10ஆம் வகுப்பிலாவது, படிப்பு மற்றும் விளையாட்டில் தினமும் பயிற்சி கொடுக்கும் பள்ளியில் சேர்க்கும்படி மணிகண்டன் அடிக்கடி சைகையில் கூறும்போதுதான், பொருளாதார நிலையை நினைத்து வேதனைப்படுகிறோம்.

இதற்காக தமிழக அரசு உதவினால் உலக அளவில் இந்தியா வுக்காக விளையாடி மணிகண்டனால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்திடும் குழந்தையை

காப்பாற்றும் கருவியை கண்டுபிடித்த இளைஞர்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றும் எளிய கருவியை மதுரையை சேர்ந்த எலக்ட்ரீசியன் வடிவமைத்துள்ளார்.

மதுரை பீபீ குளத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (48). எலக்ட்ரீசியன்.  இவர் ஆழ்துளை கிணறுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்றி, மேலே கொண்டு வரும் எளிய நவீன குடைக்கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.

இதுகுறித்து அப்துல் ரசாக் கூறியதாவது:

பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளை பல அடி ஆழத்திற்குத் தோண்டி, தண்ணீரின்றி சரியாக மூடாமல் அப்படியே விட்டு விடுவதும், இதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதும் நடக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும், விழுந்த குழந்தையை காப்பாற்றுவதற்கான சிறந்த கருவி நம்மிடம் இல்லை. எனவேதான் இந்த குடைக் கருவியை வடிவமைத்தேன்.

டூவீலருக்கான  3 புட்ரெஸ்ட்களை கவிழ்ந்த குடை சுருங்கி விரிவதை போல தயார் செய்து, அவற்றை இயக்க ஒரு கயிறையும் இணைத்தேன். மேலே ஒரு ராடு, அதற்குள் கேமரா, விளக்கு, மேலே இழுப்பதற்கு ஒரு தனிக்கயிறு என எளிய கருவியாக உருவாக்கியுள்ளேன். ஆழ்துளையின் வட்ட வடிவ ஓர பரப்பிற்கும், விழுந்த குழந்தைக்கும் இடையில் ஏதோ ஓரிடத்தில் 3 இஞ்ச் இடைவெளி இருந்தாலே, அந்த ஓட்டை வழியாக மடங்கியதும் 2 இஞ்ச் அள விற்கான இக்குடைக் கருவியை குழந்தையின் காலுக் கும் கீழே கொண்டு போய் விடலாம். அதில் இணைத் துள்ள மெல்லிய கயிற்றை  தளர்த்த, கீழே குடைபோல விரிந்து, மற்றொரு கயிற்றால் முழு கருவியையும் மேல இழுக்க, விரிந்த குடை வடிவத்திற்குள் குழந்தை அமர்ந்த நிலையில், சிரமமின்றி மேலே கொண்டு வரலாம்.

குழந்தை தவறி விழாது. 5 ஆயிரம் செலவுக்குள் முழு கருவியையும் வடிவமைத்துள்ளேன். திடமான கயிற்றில் கருவியைக் கட்டி, மேலே ஆங்கிள் போட்டு இழுவை சக்கரம் உதவியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு, நேர விரயமின்றி, பாதிப்பின்றி குழந்தையை உயிருடன் மீட்கலாம்... என்கிறார்.

இக்கருவிக்கான அங்கீகாரம் வழங்கிட, குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் என பலருக்கும் கடிதங் களும் அனுப்பியுள்ளார்.

ஏழாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அப்துல் ரசாக், இதுவரை இருதலை மின்விசிறி, , ராணுவ வீரர் பனி கோட், ரயில்வே தண்டவாள விரிசல் கண்டறியும் கருவி, தபால் பசை தடவும் கருவி, குடிநீர் குழாய் அடைப்பு காணும் கருவி, கடலில் கொட்டிய எண் ணெய் உறிஞ்சும் கருவி  உள்ளிட்ட 49 கருவிகளை கண்டுபிடித்துள்ளார்.

இதில் சாதம்- குழம்பு - டூஇன் ஒன் குக்கர் கருவிக்கு குடியரசுத் தலைவரால் தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.

இஸ்ரோவில் பணியிடங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபு ணர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது விஞ்ஞானி, பொறி யாளர் பதவியில் 106 காலியிடங்கள் நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எலெக்ட் ரானிக்ஸ் பிரிவில் 32 காலியிடங்கள், மெக்கானிக்கல் பிரிவில் 45 இடங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 29 இடங்கள் உள்ளன.

பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். முதல் வகுப்புத் தேர்ச்சி அவசியம். நடப்புக் கல்வி ஆண்டில் (2017-2018) பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர் களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35. தகுதி யுடையோர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுக் கட்டணம், சம்பளம், சலுகைகள் உள்ளிட்ட இதர விவரங்களை இஸ்ரோ இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner