எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஒளியால் இந்த உலகம் இயங்கி வரும் நிலையில், இன்றைய அறிவியல் அந்த ஒளியை வைத்து உலகுக்கு மறுவடிவம் கொடுத்து வருகிறது என்றால், அது மிகையில்லை. இயற்பி யலின் ஓர் உட்பிரிவான ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் தான் இந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒருகாலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு தந்தியை பயன்படுத்தி வந்த நாம், பிறகு கம்பியில்லா தந்தி, தொலைபேசி, செல்லிடப்பேசி, இணையம் என எண்ணற்ற மாற்றங்களைப் பெற்று, இன்று நொடிக்கும் குறைவான நேரத்தில் புவியின் எந்த இடத்துக்கும் தகவலை அனுப்பி வருகிறோம். குறிப்பாக, ஒரு மயிரிழை அளவில் உள்ள கண்ணாடி நாரிழை வழியாக ஒரே நேரத்தில் 30 கோடிக்கும் அதிக மான தொலைபேசி அழைப்புகளை அனுப்பியும், பெற்றும் வருகிறோம். இவையெல்லாம், ஒளியில் உள்ள ஃபோட்டான் என்ற அடிப்படை ஒளித்துகளை உருவாக்குவது, கண்டறிவது, கட்டுப்படுத்துவது என்ற அறிவியல் வழியாகவே சாத்தியமாகியுள்ளது. இதுவே ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் மின்னணுவியல் என்றால், 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம்  ஆகும். இது மின்னணுவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றின் தொழில்நுட்ப இணைவு. தொலைத்தொடர்பு, மருத்துவம், பாதுகாப்புத்துறை, ஒளி மற்றும் மின்னணுவியல் போன்றவற்றில்  கண்டுபிடிப்புகள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி நாரிழை வழியாக தகவல்களை எடுத்துச் செல்வது, கதிரியக்க ரேடார் மற்றும் பிற உணர் கருவிகள் மூலமாக தகவல்களை மீட்டெடுப்பது, கதிரியக்க அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றில் ஃபோட்டான் துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மின்னணுவியல் உள்ளிட்ட அதிநவீன பயன்பாடுகள், கதிரியக்க அறுவைச் சிகிச்சை, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் குடும்ப விடியோ எடுக்கப் பயன்படும் சிலீணீக்ஷீரீமீபீ-சிஷீuஜீறீமீ ஞிமீஸ்வீநீமீs (சிசிஞி), புதிய கோள்களைக் கண்டுபிடிப்பது, உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியியல் போன்றவற்றில் ஃபோட்டா னிக்ஸின் பங்கு மிக அதிகம். மிகச் சிறப்பான, அதிவேக செயல்பாடு காரணமாக ஃபோட் டானிக்ஸ் உலகம் முழுவதற் குமான அடிப்படை தொழில்நுட்பமாக மாறி யுள்ளது. ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் பயின்ற திறமையான மாணவர்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இவர்கள் விஞ்ஞானியாக, பொறியாளராக, தொழில்நுட்ப வல்லுநர்களாக பல்வேறு நிறுவனங்களிலும், அரசுத் துறைகள், பல்கலைக் கழகங்களில் தொழில்முறை அலுவலர்களாகவும் பணியாற்றலாம். இயற்பியல், கணிதம் முடித்த இளநிலை பட்டதாரிகள் சேரலாம். முதுகலை இயற்பியல், ஃபோட்டானிக்ஸ் முடித்தவர்கள் எம்.டெக்., எம்.பில்., பி.எச்டி ஆகியவற்றில் சேரலாம்.

இந்தியாவில் ஃபோட்டானிக்ஸ் படிப்பு மிகச் சில கல்வி நிறுவனங்களிலேயே உள்ளது. அவற்றில், கேரளத்தில் உள்ள  சிஹிஷிகிஜி என்பது குறிப்பி டத்தக்கது. மேலும், அய்.அய்.டி-சென் னை, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் ஃபோட்டானிக்ஸ் படிப்பு உள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல்       ஃபோட்டானிக்ஸ்  சார்ந்த துறை செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு 18 மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். மேலும், இயற்பியல், மின்னணுவியலில் முது நிலை பட்டம், முடித்தவர்கள் 2 ஆண்டுகள் கொண்ட படிப்பில்  சேரலாம்.

அதேபோல, முதுநிலை இயற்பியல், மின் னணு அறிவியல் பயின்ற மாணவர்கள் ஓராண்டு படிப்பில் சேரலாம். அதோடு, இயற்பியல், மின் னணுவியல், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், மின்னியல் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் கொண்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி திட்டத்தில் சேரலாம்.

5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்ஸி., ஃபோட்டானிக்ஸ் கோர்ஸ் பயில ஒரு செமஸ் டருக்கு கல்விக் கட்டணம் மட்டும் சுமார் ரூ. 22 ஆயிரம். ஃபோட்டானிக்ஸ் கோர்ஸ் முடித்த வர்கள் இந்தியாவில் தொடக்கநிலை ஊதியமாக இதர பலன்கள் மற்றும் சலுகைகள் தவிர்த்து மாதத்துக்கு ரூ. 20-35 ஆயிரம் பெறலாம். அதே சமயம், அனுபவம், திறமைக்கேற்ப ஊதியம் அதிகரிக்கும். அமெரிக்கா, கனடா, யு.கே. போன்ற நாடுகளில் ஆண்டு ஊதியமாக ரூ. 24-75 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

விண்வெளி சம்பந்தமான படிப்புகள்!  

விண்வெளி அறிவியல் சம்பந்தமான படிப்பு களைப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

விண்வெளி அறிவியல் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த படிப்பாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் விண்வெளி ஆராய்ச் சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன் கூட்டியே அறிந்து கொள்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சித் துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

இத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அதனால் அது சம்பந்தமான படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.

மத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறு வனம் துவக்கப்பட்டு பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
விண்வெளித்துறை தொடர்பான படிப்பு களை மாணவர்கள் படிக்கலாம்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

பதவி: டிரேட் அப்ரண்டீஸ் (ஃபிட்டர்/ எலெக்ட்ரிசியன்/ எலெக்ட்ரானிக் மெக்கானிக்/ இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக்/ மெக்கா னிஸ்ட், அக்கவுண்டன்ட் பிரிவுகள்)

காலியிடங்கள்: 350

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் அய்டிஅய் முடித்தி ருக்க வேண்டும். டிரேட் அப்ரண்டீஸ்-அக்கவுண் டண்டாகப் பணியாற்ற ஏதேனும் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். (எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு)

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com (Careers->  Latest  Job  Opening->  Engagement  of  Apprentices  in  Southern  Region (Marketing Division)-FY 2017-18 என்ற இணையதளத்துக்குச் சென்று தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:http://180.179.13. 165 IOCLSRMDTDAP Live18/Images/Advt_SRO_Apprentice_FY_2018_2என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.02.2018.

பொறியியல் மற்றும் டிப்ளமோ
படித்தவர்களுக்கான பணியிடங்கள்

பதவி: இளநிலை ஆலோசகர்

கல்வித் தகுதி: மெக்கானிக்கல்/ ஆட்டோ மொபைல்/ எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூ மெண்டேசன் / எலெக்ட்ரிக்கல்/சிவில் இன்ஜி னியரிங் படிப்புகளில் பி.ஈ./ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி தேவை.

பொறியியல் சாராத பணிகள்:

ஃபேசன்/ ஆபேரல் டிசைன்/ காஸ்ட்யூம் டிசைன்/ டிரெஸ் மேக்கிங்/ கார்பெண்ட் ஃபேப்ரிகேசன் டெக்னாலஜி படிப்புகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. மேற்கண்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர் களுக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை :www.atichennai.org.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல் களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:The Director, Advanced Training Institute, 10, Alandur Road, Chennai - 600032.

மேலும் விவரங்களுக்கு: http://www.atichennai.org.in/mediawiki116/index.php/Announcement#ENGAGEMENT_OF_JUNIOR_CONSULTANT_AT_ADVANCED_TRAINING_INSTITUTE_CHENNAI என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 20.02.2018.