எழுத்துரு அளவு Larger Font Smaller Font


என்ன படிப்பது, எப்படிப் படிப்பது, அடுத்து என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்வதிலிருந்து நட்பில், உறவில், உணர்ச்சி பூர்வமான தருணங்களில் சில தவறான முடிவு களை எடுத்தவர்கள் பெரும்பாலும் சொல்வது யாராவது எனக்கு அந்த நேரத்தில் சரியாக வழிகாட்டியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்பதாகத்தான் இருக்கும்.
இந்நிலையில் கிராமப்புறங்களில் பொரு ளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டுதல்கள் அவசியமாகவே உள்ளது. இதை உணர்ந்து தொடங்கப்பட்ட தன்னார்வ அமைப்புதான் வாழை.

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குழந் தைக்கும் ஒரு வழிகாட்டி அமர்த்தப்படுகிறார். அந்தக் குழந்தையின் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை அந்தக் குழந்தைக்கு உடன்பிறவா சகோதர சகோதரியாக மாறும் அந்த வழிகாட்டி, அந்தக் குழந்தையோடு தொலைபேசி, கடிதம் மூலமாகத் தொடர்பில் இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துக் குழந்தையின் தனித்திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களோடு உணர்வுபூர்வ மாகப் பேசுவதிலும் தனது நேரத்தைச் செலவழிக்கிறார்.

கற்பிக்கும் முறை: வாழையின் கற்பிக்கும் முறை செயல்வழிக் கற்றல், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் உத்திகளை அடிப் படையாகக் கொண்டது. எவ்வளவு கடினமான கருத்துகளையும் எளிதில் குழந்தைகள் புரிந்துகொள்ள இவர் கள் முறை உதவுகிறது. இங்குக் கல்வியல் திறன்களுக்குச் சமமாக வாழ்க்கை (அல்லது) வாழ்வியல் திறன்களுக் கும்  முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந் தைகளை முற்றிலும் முழுமையான மனிதனாக மாற்றும் வாழ்வியல் திறன்களை மட்டுமே மய்யமாகக்கொண்ட பிரத்யேகப் பயிற்சிப் பட்டறைகளும் நடத் தப்படுகின்றன.

2005இல் மாநிலக் கல்லூரியில் படித்த அன்புசிவம், அமுதரசன், ஞானவேல் உள் ளிட்ட அய்வரின் முயற்சியில் தொடங்கப்பட்ட அமைப்பு வாழை. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளை அளிக் கலாம் என்ற முடிவை இந்த இளைஞர்கள் எடுத்தனர். பேராசிரியர் பிரபா கல்விமணி, கல்வியாளர் பத்மாவதி ஆகியோரை ஆலோ சகராகக்கொண்டு இந்த அமைப்பு செயல் பட்டுவருகிறது.

20 குழந்தைகளுக்கு 20 வழிகாட்டிகள் என்ற அளவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து தற்போது விழுப்புரம், தர்மபுரி மாவட் டங்களில் 200 குழந்தைகளுக்கு 200 வழி காட்டிகள் என்ற அளவுக்கு வளர்ந்திருக் கிறது. சென்னையில் ஏறக்குறைய பத்து மாண வர்கள் பல்வேறு பிரிவுகளில் படித்துக்கொண்டி ருக்கிறார்கள். ஆனாலும், இழுத்துப் பிடித்துப் படிக்கவைத்தாலும், பத்தாவது, பிளஸ் டூ முடித்ததுமே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்துவிடும் சூழல்தான் இன்றுவரை கிராமங்களில் நிலவுகிறது. இரண்டு மூன்று பெண்கள் பி.எஸ்சி. நர்சிங் போன்ற படிப்புகளை விழுப்புரம் மாவட்டத் தைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் படித்திருக் கின்றனர். ஆனால் ஒரே வருத்தம், ஒரு பெண் ணைக்கூட உயர்கல்வி அளவுக்குப் படிக்க வைக்க முடியவில்லை. இதற்கு அந்தப் பகுதிகளில் இருக்கும் சமூகச் சூழலே காரணம் என்கிறார் வழிகாட்டிகளில் ஒருவரான அருண்குமார்.

வாழை அமைப்பில் வழிகாட்டியாக இணைய முன்வருபவர்களிடம் இவர்கள் எதிர்பார்ப்பது நேரத்தைத்தான். அவ்வாறு முன்வருபவர்களுக்கு மாணவர்களுக்கு வழிகாட்டத் தேவையான பயிற்சியும் இதே அமைப்பு அளித்துவருகிறது. தன்னார்வலர் களின் நன்கொடை, குழந்தைகளின் பெற் றோர்கள் அளிக்கும் ஊக்கம் போன்றவற்றால் தான் இது நடக்கிறது.

தினக்கூலிகள், வெளியூரில் சென்று வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகள் தாத்தா, பாட்டி போன்றவர்களின் அர வணைப்பில் வளர்வார்கள். அந்தக் குழந்தை களுக்கு அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்குக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பாலினச் சமத் துவம், பொதுச் சமூகத்தில் எப்படிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை அளிப்போம்.

விழுப்புரம் சுற்றியுள்ள 8 கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் இருந்து ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைத் தேர்ந் தெடுப்போம். குடும்பத்தில் முதல் குழந்தை, தாய், தந்தை இருவரில் ஒருவர் மட்டுமே இருக்கும் குழந்தை இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு பள்ளியில் 20 குழந்தைகளைத் தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு எங்களு டைய பயிலரங்கத்தில் கல்வியைத் தவிர்த்து இசை, நடனம் போன்ற துறைசார்ந்த நிபுணர் களைக் கொண்டு சில பயிற்சிகளும் அளிக் கிறோம். எங்களின் குழந்தைகள் கூகுள் டிராயிங் போன்றவற்றில் தங்களின் படைப்பு களை இடம்பெறச் செய்திருக்கின்றனர். தேசிய அறிவியல் மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வாகிறார்கள். கடந்த ஆண்டு தேசிய அளவில் ஒரு மாணவர் தேர்ந் தெடுக்கப்பட்டார் என்கிறார் அருண்குமார்

தொடர்புக்கு: http://www.vazhai.org

நபார்டு வங்கிப் பணி: மாதம் ரூ.61 ஆயிரம் சம்பளம்  

மத்திய அரசின் நபார்டு வங்கிக்கு (தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி) 92 உதவி மேலாளர்கள் (கிரேடு-ஏ) நேரடி நியமன முறையில் போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.

பொதுப் பணி - பொருளாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கணக்குத் தணிக்கை, வனவியல், சமூகப் பணி, சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம் முதலிய சிறப்புப் பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன. பொதுப் பணிப் பிரிவில் மட்டும் 46 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுப் பணிப் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 45 சதவீத மதிப்பெண்போதும். மற்ற சிறப்பு பிரிவுகளைப் பொறுத்தவரை, அந்தந்தப் பாடப் பிரிவில் இதே மதிப்பெண் தகுதியுடன் பட்டம் அவசியம்.  வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 30 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவின ருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப் படையில் உதவி மேலாளர்கள் தேர்வுசெய்யப்படு வார்கள். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு நிலையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இரண்டுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணினி அறிவு, பொது அறிவு, கணிதத் திறன், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இது அப்ஜெக்டிவ் முறை, விரிவாக விடையளிக்கும் முறை  இரண்டும் கலந்ததாக அமைந்திருக்கும்.

மெயின் தேர்வில் இரண்டு தாள்கள். முதல் தாளில் பொது ஆங்கிலம் தொடர்பான கேள்வி களுக்கு (கட்டுரை எழுதுதல், அறிக்கை எழுதுதல் போன்றவை) கணினி விசைப்பலகையைப் பயன் படுத்தி விடையளிக்க வேண்டும். தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரம்.

இரண்டாவது தாள் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். பொதுப் பணிக்குப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும், மற்ற சிறப்புப் பிரிவு பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் இருந்தும் 100 மதிப்பெண்ணுக்குக் கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் ஒன்றரை மணி.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 25 மதிப் பெண். இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண், நேர் முகத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீட்டு அடிப் படையில் பணி நியமனம் நடைபெறும். உதவி மேலா ளர்களுக்குத் தொடக்க நிலையிலேயே ரூ.61 ஆயிரம் சம்பளம். உரிய கல்வி, வயதுத் தகுதி உடைய பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தை (www.nabard.org) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 2, முதல்நிலைத் தேர்வு: மே 12, மெயின் தேர்வு: ஜூன் 6

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனில் வேலை

www.nlcindia.com/

காலியிடங்கள்: 50

கல்வித் தகுதி: சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி அல்லது காஸ்ட் அக்கவுண்டன்சி தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: ஷ்ஷ்ஷ்.ஸீறீநீவீஸீபீவீணீ.நீஷீனீஎன்ற இணைய தளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: இண் டர்மீடியட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படை யில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.

மேலும் விவரங்களுக்கு www.nlcindia.com/ என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner