எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கன்னியாகுமரி மாவட்டம், முள்ளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் எம். வேலையன். இவரால் கடந்த 2003-இல் தொடங்கப்பட்டதுதான் குமரி அறிவியல் பேரவை.

குமரி மாவட்ட கிராமப்புற பள்ளி மாணவர்கள் இயற்கை மற்றும் அறிவியல் கல்வியில் விழிப்புணர்வு பெறும் பொருட்டு அறிவியல் கண்காட்சி, விஞ்ஞானிகள்-மாணவர்கள் கலந்துரையாடல், அறிவியல் முகாம், அறிவியல் களப்பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது குமரி அறிவியல் பேரவை.

ஆண்டுதோறும் இந்த அமைப்பு நடத்திவரும் “இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சி’ மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இது குறித்து எம்.வேலையன் கூறியதாவது:

“இயற்கை சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை பொத்தாம் பொதுவாக பேசுவதால் பெரிய பயன் இருக்காது என்பதால், அதை ஆர்வமும், துடிப்பும் மிக்க மாணவர்கள் மூலம் சமுதாயத்துக்கு கொண்டு சேர்க்க நினைத்து தொடங்கப்பட்டதுதான் குமரி அறிவியல் பேரவை. இதன் இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சிக்காக ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறையில் ஆய்வுப் பொருள் திட்டமிடப்படுகிறது. பிறகு அது குறித்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் மாதம் தகவல் அனுப்பப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெறும் கருத்தரங்குக்கு பள்ளிகளில் இருந்து 8 ஆம் வகுப்பில் பயிலும் அறிவியல் நாட்டமுள்ள 5 மாணவ, மாணவிகளை அனுப்பிவைக்குமாறு கேட்கிறோம். இதன்மூலம் சுமார் 120 பள்ளிகளில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். இவர்களில் இருந்து இளம் விஞ்ஞானிகளாக 55 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான தேர்வுமுறை சற்று கடினமானது.

ஜூலை முதல் அக்டோபர் வரை 9 தேர்வு முறைகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும். பேசும் திறன், வாசிப்புத் திறன், மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை நடுவது, மரக்கன்று நடுவது, சமூகப் பிரச்னை குறித்து வரைபடம் உருவாக்கி அதை விளக்குவது, தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, விவாதங்களில் பங்கேற்பது, காந்தியம் குறித்து பேசுவது, திட்ட அறிக்கை தயாரித்து விஞ்ஞானிகள் மத்தியில் வெளிப்படுத்துவது, இந்திய மருத்துவம்-உணவுப் பழக்கம் குறித்து கருத்தரங்கில் பேசுவது, அறிவியல் செயல்விளக்கம், நூல் திறனாய்வு என இந்தத் தேர்வுமுறை அமைந்திருக்கும்.

இதில் தேர்வுபெறும் இளம் விஞ்ஞானிகள் 55 பேரும், 5 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் அணிக்கும் வண்ணச் சீருடை, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த 5 அணிகளுக்கும் 5 ஆய்வுப் பொருள்கள் வழங்கப்  படுகிறது. ஒவ்வோர் அணிக்கும் அனுபவம் மிக்க 10 ஆலோசகர்கள் இருப்பார்கள். இவர்கள் எந்த நேரத்திலும் இளம் விஞ்ஞானிகளுக்கு உதவி செய்வார்கள். இவர்  களோடு ஓர் அணித் தலைவர் இருந்து அணியின் செயல்பாடுகள் குறித்து அமைப்பாளருக்கு தெரிவித்து வருவார்.

இளம் விஞ்ஞானிகள் நிகழ்ச்சிக்கான நிகழாண்டு தலைப்பு, “பூமியை காப்பாற்றுங்கள்’  என்பதாகும். இதில் “உயிரி மீட்பு’ என்ற துணை தலைப்பில், நுண்ணுயிரிகளை மீட்பது, கடற்கரை வளங்கள், உயிரி ஆதாரங்களில் மனிதத் தலையீடு உள்ளிட்டவை குறித்தும், “உணவு மற்றும் விவசாய மீட்பு’   என்ற துணைத் தலைப்பில், தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள், உணவுப் பழக்கத்தில் நவதானியங்களின் முக்கியத்துவம், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது, கலப்பின -மரபணு மாற்ற உணவுகளால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்தும், “நீர் மீட்பு’  என்ற துணைத் தலைப்பில், தண்ணீரின் முக்கியத்துவம், பழங்கால நீர் மேலாண்மை-நீர் பகிர்வு, நிலையான நீர்வரத்துக்கு காடுகளின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மேலாண்மையில் முகத்துவாரங்களின் முக்கியத்துவம், நீர் மாசுபடுதல் குறித்தும், “வளிமண்டல மீட்பு’ என்ற துணைத் தலைப்பில், வளிமண்டல அடுக் குகள்-அதன் முக்கியத்துவம், வானிலை மேலாண்மை, உயிரி வேதியியல் சுழற்சி, பசுமை இல்ல விளைவு, பூஜ்ஜிய உமிழ்வு-பூஜ்ஜிய மாசு, வளிமண்டல கண்காணிப்பில் துணைக் கோள் தொழில்நுட்பம் குறித்தும், “காடு மீட்பு’  என்ற துணை தலைப்பில் வன தாவரங்கள், வன விலங்குகள், வேட்டையாடுதல் - வனத்தில் அதன் தாக்கம், மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு, வனவிலங்கு மறுவாழ்வு, விலங்குகள் - மனித மோதல், மூலிகைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளன.

இதற்காக பல்வேறு கல்லூரிகள், கல்வி நிலையங் களுக்குச் செல்வது, பெரியகுளம், புத்தேரிகுளம், தேரிகுளம் உள்ளிட்ட 42 கடலோர கிராமங்களில் கள ஆய்வு, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் விஞ்ஞானிகள் உட்பட பல்துறை விற்பன்னர்களோடு கலந்துரையாடல், கோதையாறு பயணம், மார்த்தாண்டம் விப்ரோ டெக்னாலஜிஸ் வளாகத்தில் பெங்களூர் செயற்கைக் கோள் மய்ய விஞ்ஞானிகளுடன் அறிவியல் நிகழ்வு, மேற்கு தாமிரவருணி நீர் உப்புநீராக மாறியதற்கான காரணம் கண்டறியும் பயணம் என நிறைய களப் பயணங்களைச் செய்துள்ளனர். இவர்கள் ஆய்வு செய்த பொருள்களை நூல் வடிவில் உருவாக்கி வரும் மே மாதம் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் விருது மே மாத இறுதியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது. குமரி அறிவியல் பேரவை மூலம் இதுவரை 800-க்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள் உரு வாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வருங்காலத்தில் பூமியை மீட்டெடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடு வார்கள் என்பதோடு, அவர்களைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கானோருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்’’ என்றார் வேலையன்.

தென்னக ரயில்வேயில்
2,652 காலியிடங்கள்

தகுதி: ஃபிட்டர்/ மெக்கானிஸ்ட்/ டர்னர்/ மெக்கானிக் (டீசல்) மெயின்டெனன்ஸ்/ அட்வான்ஸ் வெல்டர்/ எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்ஸ், பெயிண்டர், கார் பென்டர், பிளம்பர் உள்ளிட்ட 19 பிரிவுகளில் அய்டிஅய் / என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24 வயதுக்குள் இருக்க வேண்டும். புதிதாக அய்டிஅய் தேர்ச்சி பெற்ற வர்களின் அதிகபட்ச வயது 22. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

மேலும் விவரங்களுக்கு: http://www sr.indianrailways.gov.in/cris//uploads/files/1521004068059-ptj-act-apprentice-notification-2018-revised-1.pdf    என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 11-04-2018.

தேசிய அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியிடங்கள்

பதவி: சிறப்புக் கல்வி ஆசிரியர் (நிலை-6 ) (ஓ.பி.சி)

காலியிடம்: 1

தகுதி: சிறப்புக் கல்வியியல் டிப்ளமோ/ பி.எட். (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: ஹோம் விசிட்டர்/ டீச்சர் (நிலை-6) (எஸ்.சி)

காலியிடம்: 1

தகுதி: ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சோசியல் வொர்க்கில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: ஜூனியர் ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர் (நிலை -5)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: சிறப்புக் கல்வியில் பட்டப்படிப்பு/ டிப்ளமோவுடன் மனநிலை சரியற்ற குழந்தைகளுடன் இரண்டாண்டுகள் பணியாற்றிய அனுபவம் (அல்லது) பி.எட். - சிறப்புக் கல்வி (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: சுருக்கெழுத்தாளர் (நிலை-4)

காலியிடம்: 1

தகுதி: எஸ்.எஸ்.எல்.சி முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், ஆங்கில சுருக்கெழுத்து நிமிடத்துக்கு 100

வார்த்தைகளும் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.niepid.nic.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி:  Director, NIEPID, Manovikasnagar, Secunderabad - 500009.. - 500009.. மேலும் விவரங்களுக்கு: http://www.niepid.nic.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 09-04-2018.


உருவாக்குகிறார்கள்... இளம் விஞ்ஞானிகளை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner