எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பொதுத் தேர்வுகளை எழுதியிருக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கோடை விடுமுறையைச் சுவாரசியமாகத் திட்டமிடலாம். இசை பழகுதல், ஓவியம் தீட்டுதல், நீச்சல் பழகுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பயனுள்ள பொழுதுபோக்குகளைத் தாண்டி உயர்கல்விக்கு உதவும் வகையிலும் விடுமுறை காலத்தைத் திட்டமிடலாம்.

வேற்று மொழிகள், ஒளிப்படக் கலை போன்றவற்றைக் கற்பது எதிர்காலத்தில் நம் பணிவாழ்க்கையாக மாறவும் கூடும். இது தவிர நுழைவுத் தேர்வுகளுக்கு இப்போதிருந்தே தயாராவது போன்ற பாடம் சார்ந்த சாத்தியங்களும் உண்டு. இந்த வரிசையில் பெரும்பாலானோரின் ஆர்வம் கம்ப்யூட்டர் கோர்ஸ்.

இணையத்தில் இணையலாமே!

பொதுத் தேர்வு எழுதியவர்கள் மட்டுமன்றிப் பள்ளி மாணவர்கள் அனைவரும், கணினி சார்ந்த அடிப்படையைக் கற்றுக்கொள்வது அவசியம். இதற்குத் தனியாகக் கணினிப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டுமென்பதில்லை. கடும் கோடையில் அவதியடைவதைத் தவிர்ப்பதற்காகவே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, நண்பர்களாக நான்கைந்து பேர் கூடி, ஒருவர் இல்லத்தில் இருக்கும் கணினியில் பெரியவர்களின் அனுமதி யுடன் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இணைய இணைப்புகளை செல்போன் மூலமே எளிதாக அமைத்துக்கொள்ளலாம். இதற்கெனத் தனியாகப் பாடநூல்களும் அவசியமில்லை. இணையத்திலேயே அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிமையான வழிகாட்டுதல் பயிற்சிகள், வீடியோக்கள் கிடைக்கின்றன.

கூடுதலாக உள்ளூர் நூலகத்தின் உதவியை நாடலாம். மாவட்ட மய்ய நூலகங்கள் ஏராளமான பயனுள்ள நூல்களைக் கொண்டிருப்பதுடன், மாணவர்கள், போட்டி தேர்வர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் இணைய வசதியுடனான கணினிகளை அனுமதிக்கின்றன.

தட்டச்சுக்கான செயலி

முதல் கட்டமாகக் கணினியை இயக்குதல், விசைப் பலகையில் தட்டச்சு செய்தல் போன்ற அடிப்படைகளைப் பழகலாம். இணைய இணைப்புடன் கூடிய கணினி வீட்டிலிருந்தால் தட்டச்சு கற்க வெளியே அலைய வேண்டியதில்லை.

முறைப்படி தட்டச்சு பயிலவும், திருத்திக்கொள்ளவும், வேகம் பழகவும் பிரத்யேக இணையதளங்கள், செயலிகள் உள்ளன. ஆங்கிலத்தில் தட்டச்சு பழகியவர்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு எனத் தனியாகக் கற்க வேண்டியதில்லை. தட்டச்சு பயிற்சிக்கான  குறுவட்டுகள் ரூ.50இல் தொடங்கிக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம்.

தட்டச்சுக்கு அடுத்தபடியாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் கூறுகளில் வேர்ட், பவர்பாயிண்ட், எக்ஸல் போன்றவை குறித்து அறிந்துகொள்ளலாம். புராஜெக்ட் சிக்ஷா என்ற திட்டத்தின் கீழ் மைக்ரோசாஃப்ட் அங்கீகாரம் பெற்ற வழிகாட்டி நூல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எளிமையான, பெரிய படங்களுடன் கூடிய இந்த வழிகாட்டி உதவியுடன் கணினிசார் அடிப்படைகளைப் பழகலாம்.

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருட்களுடன் மின்னஞ்சல் அறிமுகம், பயன்பாடு குறித்தும் அறிந்து கொள்ளலாம். இவற்றுடன் தேடுபொறிகளை முறையாகப் பயன்படுத்துவது, தேவையான தலைப்புகளைக் குறை வான நேரத்தில் சரியாகத் தேடிப் பெறுவது குறித்தும் கற்றுக்கொள்ளலாம். மேலும் பாடம் சார்ந்த பயனுள்ள இணையதளங்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

திட்டமிட்டுத் தேர்ந்தெடுப்போம்

வழக்கமாக 3 முதல் 6 மாதங்கள்வரை குறுகியகாலக் கணினிப் பயிற்சிகள் பள்ளிப் பாட வேளைகளைப் போல முழு நாள் வகுப்புகளாக நடத்தப்படும். இவை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அயர்ச்சி அளிக்கலாம். எனவே, காலை அல்லது மாலை என ஒருவேளையாகப் பயிற்சி வகுப்புகளைத் திட்டமிடுவதுடன், எஞ்சிய வேளையில் பாடம் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளைப் பயிற்சி நிலையத்திலோ வீட்டுக் கணினியிலோ பழகுவது புத்திசாலித்தனம்.

இந்த வகையில் பள்ளி திறந்த ஓரிரு மாதங்களுக்குக் கணினிப் பயிற்சியை மாலை வகுப்பாகவோ வாரயிறுதி விடுமுறை கால வகுப்பாகவோ பெற வேண்டியிருக்கும். முறையான சான்றிதழ் அல்லது டிப்ளமோ பயிற்சிகள் எனில் இந்த அவகாசம் மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

இந்தியன் வங்கியில் மென்பொருள் நிபுணர்களுக்கு பணியிடங்கள் 


முன்னணிப் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி, சிறப்பு அலுவலர் பதவியில் 145 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர், முதுநிலை மேலாளர், மேலாளர் எனப் பல்வேறு பணி நிலைகளில் இந்தப் பதவிகள் இடம்பெற்றுள்ளன.

சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், டேட்டா அனலிட்டிக், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு, சாப்ட்வேர் டெஸ்டிங், நெட்வொர்க் நிபுணர், சைபர் செக்யூரிட்டி நிபுணர் உள்ளிட்ட சாப்ட்வேர் தொடர்பான பிரிவுகளுக்கும், ரிஸ்க் மேனேஜ்மென்ட், பாதுகாப்பு மற்றும் எலெக்ட்ரிக்கல், சிவில், ஆர்க்கிடெக்ட் முதலிய பொறியியல் பிரிவுகளுக்கும் இந்தச் சிறப்பு அலுவலர்கள் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.

தேவையான தகுதி: கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவை பணிக்குப் பணி மாறுபடும். சாஃப்ட்வேர் துறைகளில் பணியாற்றுவோருக்கு நிறைய பதவிகள் உள்ளன. வயது வரம்பு பணிக்குத் தக்கவாறு அதிகபட்சம் 35, 38, 40 என வெவ்வேறு நிலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். உரிய கல்வித் தகுதி, பணி அனுபவம் உடையவர்கள் இந்தியன் வங்கியின் இணையதளத்தைப் பயன்படுத்தி (ஷ்ஷ்ஷ்.வீஸீபீவீணீஸீதீணீஸீளீ.நீஷீ.வீஸீ) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, பணி அனுபவம், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு - 60 கேள்விகள், 60 மதிப்பெண்

எழுத்துத் தேர்வுக்கான கால அவகாசம்: 1 மணி நேரம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2018 மே 2

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியிடங்கள்

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன.  இதில் சென்னை உயர்நீதி மன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 82 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: நீதிபதிகளுக் கான தனி உதவியாளர் பிரிவுக்கு, பட்டப்படிப்புடன், முதுநிலை ஆங்கில தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* பதிவாளருக்கான தனி உதவியாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலை தட்டச்சு மற்றும் சுறுக்கெழுத்து பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதனுடன் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* இதே தகுதியே, துணைப் பதிவாளருக்கான தனி உதவியாளர் பிரிவுக்கும் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ‘ஸ்கில் டெஸ்ட்’ மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி யிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். இதனை ‘டிடி’யாக செலுத்த வேண்டும்.

கடைசி நாள் : 2018 மே 4.

விபரங்களுக்கு :www.hcmadras.tn.nic.in/Notf56of2018.pdf