எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கலை, வரலாறு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர் களுக்குச் சென்னையில் உள்ள தட்சிணசித்ரா, அருங்காட்சியகம் கலை மேலாண்மையில் ஓராண்டு பணிப் பயிற்சி அளிக்கவிருக்கிறது. அரும்பொருள் சேகரிப்பு மேலாண்மை, ஆவணப்படுத்துதல், கல்வியில் பாதுகாப்புக் கலை, நிகழ்ச்சி மேலாண்மை, நிர்வாகம், விருந் தோம்பல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அருங்காட்சியகத்தில் பணிபுரியும் நேரடி அனுபவம் மூலம் அவர்களுக்கு கிடைக்கும். இந்தியக் கலை, பண்பாட்டுத் தளங்கள் சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவதற்கான அறிவு, திறன், ஆற்றலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். உங்களுடைய பயோ டேட்டாவுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை . என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

தகுதி: பட்டதாரி

கால அவகாசம்: 18 ஜூலை 2018 தொடங்கி 11 மாதங்கள்

உதவித் தொகை: ரூ.10,000

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 2018 மே 31

கூடுதல் தகவலுக்கு: 9841425149, 9841436149.

மருத்துவர்களுக்கு
மத்திய அரசுப் பணி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2018ஆம் ஆண்டுக் கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வின் மூலம் மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள மொத்த இடங்கள் 454.

வயதுத் தகுதி: 2018 ஆகஸ்ட் 1 அன்று 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, 1986 ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவராக இருக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதித் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிறருக்குக் கட்டணம் ரூ. 200. ஆன்லைன் மூலமாகச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in 
என்னும் இணையதளத்தில்  25.05.2018 மாலை 6:00 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

இறுதி நாள்: 25.05.2018 மாலை ஆறு மணி.

எழுத்துத் தேர்வு: 22.07.2018

கூடுதல் விவரங்களுக்கு://www.upsc.gov.in/sites/default/files/Notification-CMSE-2018-Engl.pdf


வங்கிப் பணியிடங்கள்

இந்திய ஸ்டேட் வங்கி புரோபேஷனரி ஆபிசர்  பணிக்கு 2,000 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
தற்போது கல்லூரியின் இறுதியாண்டு படிப்ப வர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்தாம்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளைக் கொண்டது எழுத்துத் தேர்வு. இரண்டுமே ஆன்லைன் மூலமாக நடைபெறும்.

முதல்கட்டத் தேர்வான முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

இத்தேர்வில் அப்ஜெக்டிவ் முறை கேள்விகளும் கூடுதலாக விரிவாக விடையளிக்கும் வகையிலான வினாக்களும் இருக்கும்.

இதில் ரீசனிங், கணினி அறிவு, டேட்டா அனாலசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கிலம் ஆகியவற்றில் இருந்து 155 கேள்விகளும் (200 மதிப்பெண்) ஆங்கிலத்தில் விரிவாகப் பதிலளிக்கும் வினாக்களும் (50 மதிப் பெண்) இடம்பெறும்.

முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு இரண் டுக்குமே அனுமதிச்சீட்டு அஞ்சலில் அனுப்பப் படாது, விண்ணப்பதாரர்களே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். முதல் நிலைத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை ஜூன் 18ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

இலவசப் பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும், சிறுபான்மையினருக்கும் (கிறித்தவர்கள், முசுலிம்கள் போன் றோர்)  இந்திய ஸ்டேட் வங்கி சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே இது குறித்துக் குறிப்பிட வேண்டும்.

இலவசப் பயிற்சி ஜூன் 18 முதல் 23 வரை நடைபெறும். இதற்கான அனுமதிச்சீட்டை மே 28 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள் ளலாம்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் பாரத ஸ்டேட் வங்கி இணைய தளத்தின் (www.sbi.co.in/careers) மூலம் விண் ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை வங்கியின் இணைய தளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். நேரடி அதிகாரிப் பதவிக்கு ஆரம்ப நிலையிலேயே ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும்.
முக்கியத் தகவல்கள்

2,000 அதிகாரிப் பணியிடங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 13

முதல்நிலைத் தேர்வு: ஜூலை 1, 7, 8

முதல்நிலைத் தேர்வு முடிவு: ஜூலை 15 அன்று வெளியிடப்படும்.

மெயின் தேர்வு: ஆகஸ்டு 4

மெயின் தேர்வு முடிவு: ஆகஸ்டு 20 அன்று வெளியிடப்படும்.

மெயின் தேர்வில் வெற்றிபெறுவோருக்குக் குழு விவாதம், நேர்முகத்தேர்வு: செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறும்.

இறுதி தேர்வு முடிவு: நவம்பர் 11 அன்று

வெளியிடப்படும்.

வேளாண் பட்டதாரிகளுக்குத்
தமிழக அரசுப் பணியிடங்கள்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வின் மூலம் வேளாண் அதிகாரி (விரிவாக்கம்) பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக் கிறது.
183+7 காலியிடங் கள் நிரப்பப் பட உள்ளன. காலியிடங்கள் தற்காலிகமானவை.

வயதுத் தகுதி: பொதுப் பிரிவினரில், வேளாண் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் 30 வயதுக்குள்ளும், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

எஸ்.சி. எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., பி.சி, எம்.பி.சி., பிரிவினருக்கும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கும் உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு.

கல்வித் தகுதி: வேளாண் கல்வியில் இளநிலைப் பட்டம், தமிழில் போதுமான பயிற்சி.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் நிரந்தரப் பதிவு செய்யாதவர்களுக்கு ரூ.150. தேர்வுக் கட்டணம் ரூ.200.

எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., ஆதரவற்ற கைம்பெண் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. கட்டணத்தை ஆன் லைனிலும் வங்கி சலான் மூலமாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க: உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 03.05.2018 முதல் 02.06.2018வரை ஆன்லைனில் www.tnpsc.gov.in / www.tnpsc exams.net/www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப் பிக்கலாம்.

இறுதித் தேதி: 02.06.2018

எழுத்துத் தேர்வு: 14.07.2018

கூடுதல் விவரங்களுக்கு: http://tnpsc.gov.in/notifications/2018_09_AO_EXTENSION.pdf

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner