எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கான படிப்புகளை படித்தவர்கள் எந்த துறையிலும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி மேம்பாடு அடையலாம்.

ஒரு நிறுவனம், தொழிற்சாலை, அமைப்புகள் என அனைத்து துறைகளிலுமே நிர்வாகிகளுக்கு தலைமை பண்புகள் அவசியம் இருக்க வேண்டும். அப்போது தான் தங்களுடைய நிர்வாகத் திறமை மூலம் அந்தந்த அமைப்புகளை சரிவர இயக்கிச் செல்ல முடியும்.

தலைமைப் பண்புள்ள ஒருவரே தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் முழுத் திறமைகளையும் வெளிக் கொண்டு வர முடியும். அதைப் பயன்படுத்தி அவர் சார்ந்துள்ள நிறுவனத்திற்கு லாபம் தேடித் தர முடியும். அதன் மூலம் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்த முடியும். தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள அது சம்பந்தமான படிப்புகளைப் படிக்க வேண்டும். பல்வேறு கல்வி நிறுவனங்களால் அவை நடத்தப்படுகின்றன.

தலைமை பண்புகள் குறித்த கல்வி வழங்கும் நிறுவனங்கள் :

Indian Institute of Democratic Leadership - http://www.iidl.org.in/
Rajiv Gandhi National Institute of Youth Development - http://www.rgniyd.gov.in/content/post-graduate-diploma-political-leadership-pgdpl
MIT SCHOOL OF GOVERNMENT - http://www.mitsog.org/
National School of Leadership  - http://www.nsl.ac.in/
Ashoka University - https://www.ashoka.edu.in/page/politicsandsociety-programme-16
The Institute of Political Leadership - http://www.iplindia.in/
India School Leadership Institute  - http://www.indiaschoolleaders.org/

ஃபர்னிச்சர் டிசைனிங் படிக்கலாமே!

தொழிற்சாலை, அலுவலகம், வணிக நிறுவனங்கள், வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அங்கு ஃபர்னீச்சர் எனப்படும் நாற்காலி, மேஜை, சோபா உள்ளிட்டவை அவசியம் இருக்கும். அத்தகைய ஃபர்னீச்சர்கள் தான் ஒரு வீட்டையோ, வணிக, தொழில் நிறுவனங்களையோ அழகுபடுத்துபவையாகும்.  மிக அழகாகவும் சிறந்த வடிவமைப்புகளுடனும் அவை தயாரிக்கப்படு கின்றன. பர்னீச்சர்கள் அவசிய தேவையாக இருப்பதால் அவற்றைத் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலிலும், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பும் காத்திருக்கின்றன. சிறந்த முறையில் ஃபர்னீச்சர்களை வடிவமைக்க அது தொடர்பான படிப்புகள் நடத்தப்படுகின்றன.  ஃபர்னீச்சர் டிசைனிங் குறித்த கல்வியை வழங்கும் நிறுவனங்கள்: http://www.mitid.edu.in/Interior-Space-and-Furniture-Design-Courses.html,NATIONAL INSTITUTE OF DESIGN  - http://www.nid.edu

Srishti Institute of Art, Design and Technology  - http://srishti.ac.in/about-us

Indian Institute of Crafts & Design, Jaipur  - https://www.iicd.ac.in/hard -material -design -hmd/

நீங்களும் எச்.ஆர். ஆகலாம்

நீங்கள் உளவியல் படிக்க விரும்புகிறீர் என்றால், உளவியல் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது இளங்கலையிலும் உளவியல் பட்டம் எதிர் பார்க்கப்படும். சொல்லப்போனால், எம்.எஸ்சி. உளவியல் படிக்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் ஏதோ ஓர் அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை படித்திருப்பது அவசியம். சில கல்வி நிறுவனங்கள் பி.எஸ்சி. சைக்காலஜி பட்டதாரிகளை மட்டுமே முதுநிலை உளவியல் படிக்க அனுமதிக்கின்றன.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் நீங்கள் உங்களை அடையாளம் காண வேண்டும். சமூகச் சேவையில் ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் எம்.எஸ்.டபிள்யூ எனப்படும் சமூகப்பணி முதுநிலைப் பட்டத்தைப் படிக்கலாம். அதன் பின்னர் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரியலாம்.

இந்தப் படிப்பில் Community Development, Human Resources,

ஆகிய பிரிவுகளைப் படித்தால் தொழிற்சாலை களில் எச்.ஆர்., தொழிலாளர் நல அலுவலர் போன்ற பணிவாய்ப்புகள் உள்ளன. அத்துடன் பி.ஜி.டி.எல்.ஏ.,  எனப்படும் Post Graduate Diploma in Labour Law and
Administrative Law

படித்தால் பணிவாய்ப்பு விரிவடையும்.

இன்றைய வணிக உலகின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எம்.பி.ஏ. படிக்கலாம். இதில் 60-க்கும் அதிகமான பாடப் பிரிவுகளில் சிறப்புப் படிப்புகள் நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றை உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இன்றைய தேதியில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 400 கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

ஆனால், இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது, தரம் வாய்ந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே வளாகத் தேர்வில் பணிவாய்ப்புப் பெற இயலும். அத்தகைய முதன்மையான மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திட CAT, XAT, SNAP, NMAT, AIMA MAT, AIMCET  உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதி உயர் மதிப்பெண் பெற வேண்டி இருக்கும்.  நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்.

உதவிக்கரம் நீட்டும் கட்செவி (வாட்ஸ் அப்) குழுவினர்

ஒருவருக்கு ஒருவேளை உணவை வாங்கிக் கொடுப்பதில் கிடைக்கும் திருப்தியைவிட, ஒருவரது கல்விக்கு உதவுவதில் கிடைக்கும் திருப்தியே தனி. முன்னது உடனடி விளைவு. உடனடி சந்தோஷம். இரண்டாவதில் கொஞ்சகாலம் பொறுத்திருக்க வேண்டும். படிப்புக்கான உதவியைப் பெற்றவர்கள் அதைப் பயன் படுத்திக்கொண்டு தேர்வு முடிவுகளில் பிரகாசிப்பதிலேயே உதவியவர்களுக்கு மனம் குளிர்ந்துவிடும். அந்தப் படிப்பின் மூலமாக நல்லதொரு வேலையும் கிடைத்து விட்டால், உதவியவர்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும். அப்படியொரு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் ஏ.பி.ஜே. விஷன் இந்தியா 2020 எனும் பெயரில் இயங்கும் தன்னார்வக் குழுவினர்.

படிக்க உதவும் கட்செவி குழு (வாட்ஸ் அப்)

2017ஆம் ஆண்டில் 250 ஆதரவற்ற குழந்தைகளுடன் விழாவை தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் கொண்டாடினர். பிரியும்போது, தனி ஒரு மனிதரின் வாழ்க்கையில் அவரை மட்டும் அல்லாமல் அவருடைய குடும்பத்தையும் உயர்த்த வேண்டும் என்று தோன்றியது. உயர்ந்த கருவியாக இருக்கும் கல்வியைத் தங்களால் முடிந்த அளவுக்கு வசதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கலாம் எனும் முடிவோடு பிரிந்தனர்.

தாய், தந்தை இல்லாமல் வறுமையில் படிப்பவர்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்து படிப்பவர்கள், படிப்பைப் பாதியில் கைவிடும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம் என்கிறார் கனவு மெய்ப்பட அறக்கட்டளையின் நிறுவனரான தினேஷ் ஜெயபாலன்.

ஆறு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் மூலம் இதுவரை 18 மாணவர்களுக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதற்காக ஏறக்குறைய 2 லட்சத்து 80 ஆயிரம்வரை உதவி இருக்கின்றனர். குழுவில் இல்லாதவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் பேரிலும் மாணவர்களின் குடும்பப் பின்னணி, படிப்பில் மாணவர் களுக்கு இருக்கும் ஆர்வம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உதவுகிறது இந்த அமைப்பு.

முதன்முதலாக ஒரு கல்லூரி மாணவிக்கு 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்தோம்.

மூன்றே நாட்களில் அந்தத் தொகையைக் குழுவில் இருப்பவர்களின் உதவியோடு கட்ட முடிந்தது.

அந்த உதவியைப் பெற்ற மாணவி கண்ணீரோடு அதை ஏற்றுக்கொண்டு நன்றியைக் கண்களில் காட்டியபோது, இன்னும் நிறையப் பேருக்கு உதவ வேண்டும் என்னும் உத்வேகம் பிறந்தது என்கிறார் அறக்கட்டளையின் செயலாளர் கல்யாணகுமார் வீரபாண்டியன்.