எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள் முழுவதும் படி படி என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் வலியுறுத்துவதாலேயே பல குழந்தைகளுக்குப் படிப்பின் மீதான இயல்பான நாட்டம்கூடக் குறைந்துபோகிறது.

விருப்பம் இன்மையால் பள்ளியிலிருந்து இடைநின்று போகும் பல குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்துவருகிறது கடலூரில் உள்ள சங்கம் ஸ்போர்ட்ஸ் அண்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி.

மீண்டும் அவர்களை பள்ளிக்கு அனுப்பிப் படிப்பிலும் விளை யாட்டிலும் திறனை மேம்படுத்த முயல்கிறது. நானே பதினோராம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டவன்தான் என்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் மாஜி சிங்.

11ஆம் வகுப்பு இடைநிற்றலுடன், கராத்தே, ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை 15 ஆண்டுகள் கற்று நிபுணத்துவம் பெற்றேன். பீப்பிள்ஸ் வாட்ச் மனித உரிமை அமைப்பின் மண்டல ஒருங்கிணைப் பாளராக எட்டு மாவட்டங்களில் களப் பணியாற்றினேன். அந்த காலகட்டத்தில்தான் விளிம்புநிலை மக்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு செயல்பாடுகள் பற்றிய விசாலமான பார்வை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து எட்டாண்டுகள் நான் பணியாற்றிய ரோட் நிறுவனம், சங்க வளர்ச்சி சார்ந்த பணிகளைத் திட்டமிட உதவியது. இப்படியாகத் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவி, வழி காட்டுதலுடன் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக் கான பணிகளை செய்ய ஆரம்பித்தேன் என்கிறார் மாஜி சிங்.

எழுத்தறிவு மட்டும் போதாது என்ற புரிதல் ஏற்பட்டவுடன், விளையாட்டு, வாழ்திறன் வளர்ச்சிக்கு உதவிகள் செய்ய ஆரம் பித்திருக்கிறார் இவர். அதிலும் கல்வி, வேலைத்திறனில் பின்தங்கி இருப்பவர்களை விளையாட்டுத் திறன் மூலமாக முன்னேற்றலாம் என்ற யோசனை வந்தது. அதன் பின்னர் ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள், விளிம்புநிலையை மாணவர்களையும் விளையாட்டில் ஈடுபடுத்தப் பல்வேறு விளையாட்டு சங்கங்களுடன் கைகோத்தார்.

மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற் பதற்கான முயற்சிகளை எங்களுடைய சங்கம், அறக்கட்டளை மூலமாக எடுத்தேன். அதோடு மாநில விளையாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதித் தேர்வுகளில் பங்கேற்க மாணவர்களுக்குப் பயிற்சிக்கான ஏற்பாடு செய்தேன்.

இதன் விளைவாக தமிழ்நாடு ஜூடோ சங்கம், தமிழ்நாடு தடகளச் சங்கம், தமிழ்நாடு ஊரக விளையாட்டுச் சங்கம் ஆகியவற்றின் உதவி யாலும், தனிநபர்கள் நிதியுதவியாலும் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகளை தற்போது ஒருங்கிணைத்துவருகிறேன் என்கிறார்.

ரயில்வேயில் 9,739 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயின் காவல் படையான ரயில்வே போலீஸ் போர்ஸ் என்பது சுருக்கமாக ஆர்.பி.எப்., என அழைக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஆர்.பி.எப்.,பின் பணி மகத்தானது.

பெருமைக்குரிய இந்த காவல்படையில் கான்ஸ் டபிள் - எக்சிக்யூடிவ் மற்றும் உதவி  ஆய்வாளர் பிரிவில், 9,739 இடங்களை நிரப்புவதற்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ரயில்வே மண்டல வாரியாக நிரப்பப்பட உள்ளன.

காலியிட விபரம்: மண்டல அளவிலான ஆண் களுக்கான கான்ஸ்டபிள் (எக்சிக்யூடிவ்) பிரிவில் 4,403 இடங்களும், இதே பிரிவிலான பெண் களுக்கான பிரிவில் 4,216 இடங்களும், உதவி ஆய்வாளர் பிரிவில் ஆண்களுக்கு 819 இடங்களும், பெண்களுக்கு 301 இடங்களும் சேர்த்து மொத்தம் 9739 இடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதி : குறைந்தபட்ச உடல் தகுதிகள், ஆண்கள் உயரம் 165 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீ., மற்றும் உயரத்திற்கு நிகரான எடை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்.பி.எப்., பின் மேற் கண்ட இடங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.  கடைசி நாள் : 2018 ஜூன் 30.

விபரங்களுக்கு: www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,366,533,2015

கடல் சார்ந்த நிறுவனத்தில் பணி வாய்ப்பு

நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் கடல் சார்ந்த வளங்களை நிர்வகிக்கும் நிறுவனமாகும். என்.சி. எஸ்.சி.எம்., என அழைக்கப்படுகிறது.

காலியிட விபரம் : என்.சி.எஸ்.சி.எம்., நிறுவனத் தின் மேற்கண்ட இடங்கள் புராஜக்ட் அசோசியேட், புராஜக்ட் சயின்டிஸ்ட், ரிசர்ச் சயின்டிஸ்ட், அட்மினிஸ்டிரேடிவ் அசிஸ்டென்ட் என்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.

வயது : புராஜக்ட் அசோசியேட் பதவிக்கு அதிக பட்சம் 45 வயதும், புராஜக்ட் சயின்டிஸ்ட் பதவிக்கு அதிகபட்சம் 40 வயதும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவுக்கு அதிகபட்சம் 35 வயதும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

கல்வித் தகுதி : மல்டி டாஸ்கிங் அசிஸ்டென்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பும், இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2018 ஜூன் 1.

விபரங்களுக்கு: http://ncscm.res.in/cms/careers/careers.php

என்றென்றும் அறிவியல்!

கல்வியாண்டுதோறும் புதிது புதிதாக உயர்கல்விப் படிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. ஆனபோதும் ஒரு சில அடிப்படையான பாரம்பரியப் படிப்புகள், தலைமுறைகள் தாண்டியும் வரவேற்பு இழக்காமல் இருக்கின்றன. கணிதம், இயற் பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அந்த வரிசையில் சேரும். பிளஸ் டூ-வில் இவற்றை முதன்மைப் பாடங்களாகப் படித்தவர்கள், கல்லூரிகளில் இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண் ணப்பிக்கலாம்.

வாய்ப்பு நிறைந்த அறிவியல்

இயற்பியல், வேதியியல் உயர்கல்வித் துறைகள் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகளுக்கு அப்பால் அதிகக் கவனம் பெறாதிருக்கின்றன. பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்களுக்கு ஏரோ ஸ்பேஸ், எண்ணெய், எரிவாயு, பொறியியல், உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. முதுநிலையில் இயற்பியல் அல்லது அப்ளைய்டு பிஸிக்ஸ், ஆராய்ச்சிப் படிப்புகள், எம்.பி.ஏ. போன்றவை மூலம் உயர்கல்வித் தகுதியை மாணவர்கள் உயர்த்திக்கொள்ளலாம்.

பி.எஸ்சி. வேதியியல் படித்தவர்களுக்கு வேதிப்பொருள் ஆய்வகங்கள், மருந்துவ, மருந்து பரிசோதனைக் கூடங்கள், சுகாதாரம்-ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்கள், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு - ஆராய்ச்சி நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் காத்திருக்கின்றன.

தொடர்ந்து எம்.எஸ்சி.யில் பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, ஃபார்மாசூட்டிகல் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவற்றைப் படித்துப் பொதுத் துறை, தனியார் துறைகளில் பணிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளலாம்.

இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்குச் சில மாதங்கள் பயிற்சியளித்து அய்.டி. துறை பணியில் அமர்த்திக்கொள்கிறது. மருத்துவ சேவை, அழகுசாதனங்கள், மருந்துப் பொருள் தயாரிப்பு தொடர்பிலான பி.பி.ஓ. நிறுவனங்களும் இதேபோன்று இளம் அறிவியல் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளித்துப் பணியில் சேர்த்துக் கொள்கின்றன.

இளம் அறிவியல் படிப்புடன் முதுநிலையை மேற்கொள்ள விரும்புவோர், எம்.எஸ்சி. நேனோ டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் சென்னையில் உள்ள மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம்(https://www.clri.org/), காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு மய்யம் (http://www.cecri.res.in/), மொஹாலியில் உள்ள  (http://www.inst.ac.in/)ஆகிய மய்யங்களில் அவற்றைப் பயிலலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner