எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போக்குவரத்து அதிகம் நிறைந்த மெட்ரோ நகரங்களில், பொது மக்களின் தலையாய தேவையாக மாறிவருவதுதான் மெட்ரோ ரயில் எனப்படும் நவீன ரயில் போக்குவரத்து சேவை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள

பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இடங்கள் பி.ஜி., டிப்ளமோ இன் மெட்ரோ ரயில் டெக்னாலஜி & மேனேஜ்மென்ட் படிப்பாக துவங்கி பின்னர் வேலை வாய்ப்புடன் முடியும் என்று தெரிகிறது.

காலியிட விபரம்: சிவில் பிரிவில் 5, எலக்ட்ரிகலில் 10, எலக்ட் ரானிக்சில் 8, மெக்கானிகலில் 2ம் சேர்த்து மொத்தம் 25 பொறியியல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 மே 27அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மேற்கண்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 70 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை : மாதம் ரூ.20 ஆயிரத்தை பயிற்சிக் காலத்தில் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி நாள் : 2018 ஜூன் 16.

விபரங்களுக்கு: https://chennaimetrorail.org/wp-content/uploads /2018/05/Advertisement_No.CMRL-HR-04-2018.pdf

புதிய சாதனை... ஹைட்ரஜன் எரிபொருள்!

சூரிய ஒளியில் இருந்து ஒருமணி நேரத்தில் கிடைக்கக்கூடிய ஆற்றல், இன்று மனிதகுலம் ஓராண்டு பயன்படுத்தும் ஆற்றலுக்கு இணையானது. ஆனால், இயற்கை அளித்துள்ள இந்த கொடையை நமக்குத் தேவையான ஆற்றல் மூலங்களாக இன்றைய சாதனங்கள் மூலம் மாற்றுவது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.

அதேநேரத்தில், யு.கே.வில் உள்ள  பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானி கோவிந்தர் சிங் பவாரின் சூரிய சக்தி எரிபொருள் குறித்த ஆராய்ச்சி ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனையும், ஆக்சிஜனை யும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி பிரித்து எடுத்து, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் பவார் குழுவினரின் மேம்படுத்தப்பட்ட புதுமையான ஆய்வு முறை குறித்து கடந்த பிப்ரவரி மாதம்   என்ற அறிவியல் ஆய்விதழில் விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

சுத்தமான ஹைட்ரஜன் வாயு, காற்றில் எரியும்போது, காற்றிலுள்ள ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து தண்ணீராக மாறுவதோடு ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

இந்த ஹைட்ரஜன் பூஜ்ய உமிழ்வு எரிபொருள் என்பதோடு, இதன் உப உற்பத்தியாக தண்ணீர் மட்டுமே வெளியாகிறது. ஆனால், சுத்தமான ஹைட்ரஜனைப் பெறுவது சவாலாகவே உள்ளது. இது பூமியில் இயற்கை யாகக் கிடைப்பதில்லை. எனினும், இந்த எளிய மூலக்கூறு தண்ணீர் வடிவில் எங்கும் காணப்பட்டாலும், அதிலிருந்து ஹைட்ரஜனை மட்டும் தனியாகப் பிரித்தெடுப்பது கடினமாகவே இருந்து வருகிறது.

ஆனால், இந்த வகையிலான ஓர் இயற்கை நடைமுறை பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை நிகழ்வுதான். தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர், இலைகளுக்குச் சென்ற பிறகு, அதிலுள்ள பச்சையம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளை பிரித்து உணவாக எடுத்துக் கொள்கிறது.

இந்த வகையிலேயே கோவிந்தர் சிங் பவாரின்ஆய்வில் செயற்கையாக தண்ணீரில் ஒளியை செலுத்தி மின்னாற் பகுப்பு மூலம் அதிலுள்ள ஹைட்ரஜன் பிரிக்கப்படுகிறது. அதாவது, தாவர ஒளிச்சேர்க்கை முறையைப் பின்பற்றி ஒளிமின்முனைகளைக்  கொண்டு தண்ணீரில் உள்ள ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் பிரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையின் திறனை தீர்மானிப்பதில் ஒளிமின் முனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ஒளி மின்னாற்பகுப்பில், வெப்ப இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அளவுகோல்களின்படி, நிலையான, குறைந்த செலவிலான குறைகடத்திகளாக செயல்படும் ஒளிமின்முனைகளை உருவாக்குவதிலேயே இதன் வெற்றி உள்ளது. அது அவ்வளவு எளிதானதாக இல்லை.

இதுபோன்ற மலிவான, மேம்பட்ட தெளிப்பு வெப்பச் சிதைவு முறையில் பயன்படும்படியான ஒளிமின்முனை குறைகடத்தியைதான் கோவிந்தர் சிங் பவார் தற்போது உருவாக்கியுள்ளார். இந்த ஒளிமின்முனைக்கான குறை கடத்தி லேந்தனம், இரும்பு, ஆக்சிஜன் ஆகிய தனிமங்கள் அடங்கிய நானோ துகள்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதுமையான குறைகடத்தி வேறு வெளிப்புற பொருள்கள் எதையும் பயன்படுத்தாமல், தன்னிச்சையாக தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கக்கூடியது. இது இப்போது 30 சதவீத செயல்திறனை வெளிப் படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களில் உண்மையான மாற்றத்துக்கான நிலையான பாதையை அளிப்பதில் கோவிந்தர் சிங் பவார் குழுவின் ஆய்வு அடிப்படையாக அமையும் என கருதப்படுகிறது.

தற்போது நாம் செலவுமிக்க, படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலம் கிடைக்கும் 85 சதவீத ஆற்றலைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், லேந்தனம் இரும்பு ஆக்சைடு குறைகடத்தி கண்டுபிடிப்பு மூலம் போக்கு வரத்துக்கும், சேமித்து வைப்பதற்கும் உகந்ததுமான சுத்தமான எரிசக்தி ஆற்றலை நாம் பெறமுடியும்.

செயற்கை ஒளிச்சேர்க்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கடுமையான கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன், இது கிட்டத்தட்ட வரம்பற்ற ஆற்றல் மூலமாக உள்ளது என  பல்கலைக்கழகம்

தெரிவித்துள்ளது. ஒளிமின் வேதியியல்  தண்ணீர் பிளவு, இயற்கை ஒளிச்சேர்க்கையை விஞ்சும் அளவில் கார்பன் (கரி) இல்லாத ஹைட்ரஜன் பொருளாதாரமாகவும் பார்க்கப் படுகிறது. மேலும், இதில் பயன்படுத்தப்படும் பொருள்கள் 21 மணிநேர தொடர் ஆய்வுக்குப் பிறகும் சிதையாது, சிறந்த உறுதிப்பாட்டுடன், நீர் பிளவு பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளன.

கோவிந்தர் சிங் பவார் மற்றும் அவரது தலைமையிலான குழு ஹைட்ரஜன் தயாரிப்புக்கான இந்தப் பொருள் களின் உறுதிப்பாட்டை மேலும் உயர்த்தும் பொருட்டு தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வு முழு வெற்றிபெறும்பட்சத்தில் இது ஓர் உலக சாதனையாக அமையும். எப்படியோ, பெட்ரோலுக்குப் பதிலாக வாகனங்கள் தண்ணீரில் ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

 

வேலைவாய்ப்புகள் நிறைந்த ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்

எந்தத் தொழில் வளர்கிறதோ இல்லையோ மருத்துவத்துறை வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. புதிய புதிய நோய்கள் மனிதர்களை வாட்டி வதைக்கின்றன. இதனால் மருத்துவத் தொழில் மிக வேகமாக வளர்ந்து மிகப்பெரிய துறையாக பரந்து விரிந்துள்ளது. மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியாவிற்கு வந்து செல்கின்றனர்.  வளரும் எந்தத்துறையும் பெரிதாக, பெரிதாக அதை நிர்வகிக்க தனித்துறையே செயல்பட வேண்டியுள்ளது. மருத்துவத் துறையை மேலாண்மை செய்ய ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் என்ற துறை உருவாகியிருக்கிறது. அத்துறையில் வேலை செய்ய அதற்கான கல்வியைக் கற்க வேண்டியது அவசியமாகும். எம்பிஏ படிப்பில் அதற்கென தனியாக ஹெல்த்கேர் படிப்பே உள்ளது. இத்துறை மிகப்பெரிய துறையாக விளங்குவதால் வேலை வாய்ப்புகள் அதிமாக உள்ளன.

ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் சம்பந்தமான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :

Hinduja Institute  of  Healthcare Management } http://www. hindujagroup.com/hinduja}foundation/healthcare.html,  Indian Institute Of Health Management Research } https://www.iihmr.edu.in/, Institute of Health Management Research } http://www. bangalore.iihmr.org/, ICRI India} H

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner