எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்திய ராணுவத்திலும் கடற் படையிலும் விமானப் படையிலும் 383 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு [National Defence Academy & Naval Academy Examination (II), 2018] குறித்த அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கல்வி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 02.01.2000 முதல் 01.01.2003 வரையான காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குக் கட்டண மில்லை. பிறருக்குக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி சலான் மூலமோ கட்டலாம்.

உரிய உடல், கல்வி, வயதுத் தகுதி கொண்டோர் 06.06.2018 முதல் 02.07.2018 மாலை 6:00 மணிவரை : https://upsconline.nic.in// என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: 02.07.2018 | தேர்வு நாள்: 09.09.2018

கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/NdKrgt

வங்கியில் காலிப் பணியிடங்கள்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பதவிக் கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாகப் பணியமர்த்தப்படுவார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ. 3,45,000. வங்கிக் கடன் பெற்று பயிற்சிக் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

காலிப் பணியிடங்கள்: 600

வயது: 02.07.2018 அன்று குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோர் 50 சதவீத மதிப்பெண்களும், பிறர் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிறருக்கு ரூ. 600. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் www.bankofbaroda.com என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் 2018 ஜூலை 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் வெளியாகத் தொடங்கிய நாள்: 12.06.2018.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 02.07.2018

எழுத்துத் தேர்வு: 28.07.2018 (மாறுதலுக்குட்பட்டது)

கூடுதல் விவரங்களுக்கு:https://goo.gl/p9tfzH

பிளஸ் 2வுக்குப் பிறகு: கல்வி உதவித்தொகைகள்!

பிளஸ்டூவுக்குப் பிறகு எடுக்கும் முடிவுதான் பெரும் பாலான நேரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வியை நம்முடைய பொருளாதாரத் தடைகள் தீர்மானிக்க விடலாமா? நிச்சயமாகக் கூடாது.

ஒரு காலத்தில் வசதியானவர்கள் மட்டுமே படிக்கக் கூடியதாகக் கருதப்பட்ட உயர்கல்வி இன்று எல்லாத் தரப்பு மக்களும் படிக்கக்கூடிய கல்வியாக மாறி உள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் அரசு அளிக்கக்கூடிய கல்வி உதவித்தொகைகளும் சலுகைகளும்தான். அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம்  ‘பிரகதி’ என்ற திட்டத்தின் மூலம் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாணவிகள் இலவச மாகப் பொறியியல் கல்வி பயிலக் கல்வி கட்டணம் முழுவதையும் கல்லூரிகளுக்கே செலுத்திவிடுகிறது. இதற்குப் பிளஸ் டூ வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

இசுலாமிய, கிறித்தவ மாணவர்கள் பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தால் சிறுபான்மை துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.25 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். ஆண்டுதோறும் உதவித்தொகையைப் பெற அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். கல்லூரியில் படிக்கும்போது அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைய வேண்டும். இந்த உதவித்தொகையைப் பெற  Indian Oil Academic Scholarship’, ‘HDFC Scholarship’, ‘North South Foundation’  இல் விண்ணப்பிக்க வேண்டும்.

மாநில அரசானது முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவ - மாணவியர்களுக்கு ரூ.25 ஆயிரம் கல்விக் கட்டணமாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கே அரசு சார்பில் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசு ஒதுக்கீட்டில் சேரக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. பொறியியல் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகக் கலந்தாய்வில் கலந்துகொண்டு முதல் தலைமுறைப் பட்டதாரிச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். முதல்தலைமுறைச் சான்றிதழை தாலுகா அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

பட்டியலின மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை உள்ள கல்லூரிகளைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

மேலும் சில அரசு, தனியார் அமைப்புகளும் கல்வி உதவித்தொகைகளை வழங்கிவருகின்றன. அதில்   கல்வி உதவித்தொகை, Indian Oil Academic Scholarship’, ‘HDFC Scholarship’, ‘North South Foundation’
கல்வி உதவித் தொகை,   ‘‘Fair and Lovely Scholarship for Women’  போன்ற வற்றை பெற அவற்றின் இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிக் கடனைப் பெற விரும்புவோர் ‘www.vidyalak shmi.com’ என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் வங்கியில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். மாணவர், பெற்றோரின் பான் கார்டு, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், தேர்ந்தெடுத்த கல்லூரியில் பெறப்பட்ட   போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்தால் வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். எனவே, உயர் கல்விக்குப் பொருளாதாரச் சூழ்நிலை என்பது எந்த வகையிலும் தடை இல்லை என்பதைப் பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

விமான நிலையங்களில் காலிப் பணியிடங்கள்

மத்திய அரசின் முன்னணிப் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய விமான நிலையங்கள் ஆணை யத்தின் தென்பிராந்தியம் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு பணி) பதவியில் 147 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப உள்ளது.

தேவையான தகுதி

எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு மூன்றாண்டுகள் பொறியியல் டிப்ளமா (பாலிடெக்னிக்) முடித்த அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்களும், பெண்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். அதோடு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது லகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டாண்டுகள் பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும். நல்ல பார்வை அவசியம். உயரம் ஆண் களுக்கு 167 செ.மீ., பெண்களுக்கு 157 செ.மீ. அவசியம்.

வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவி னருக்கு அய்ந்து ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு மூன்று ஆண்டு களும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப் படும்.

என்ன கேட்பார்கள்?

எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது. ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி. நிலை அடிப்படைக் கணிதம், அடிப்படை அறி வியல், அடிப்படை ஆங்கிலம், இலக்கணம் ஆகியவற்றில் தலா 25 கேள்விகளும், பிளஸ் டூ நிலை பொது அறிவு பகுதியில் 25 கேள்விகளும் (மொத்தம் 100 கேள் விகள்) இடம்பெறும்.

தேர்வு 2 மணி நேரம். மொத்த மதிப்பெண் 100. உடல் திறன் தேர்வில் 100 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், கம்பி ஏறுதல், ஏணி ஏறுதல், கூடுதல் எடையை வைத்துக்கொண்டு 60 மீட்டர் ஓட்டம் ஆகியவை இடம்பெறும்.

எழுத்துத் தேர்வு சென்னை, பெங் களூரு, கொச்சி, அய்தராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். உரிய கல்வித் தகுதி, வயது வரம்புத் தகுதி, உடல் திறன் தகுதி உடையவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

ஜூலை 15

இணையதளத் தகவல்:www.aai.aero

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner