எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.அய்.ஆர்.) ஆகியவை நெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகின்றன. இதில் வெற்றிபெற்று ஜெ.ஆர்.எஃப். (ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப்) தகுதி பெறும் முதுகலைப் பட்டதாரிகள் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள மாதம்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது.

தகுதியும் தேர்வுமுறையும்

இதேபோல, மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கிவரும் தேசிய உயர் கணித வாரியம்,  கணிதம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எம்.எஸ்சி. கணிதம் படிக்க மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது.

இந்த உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும். தகுதியான மாணவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.

2018-2019ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித் தொகை வழங்குவதற்குத் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பி.எஸ்சி. பட்டதாரிகளும் ஜூலை மாதம் படிப்பை முடிக்க இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முதல் வகுப்பு மதிப்பெண் அவசியம். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வில் கணிதப் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

தகுதியுடைய பி.எஸ்சி. கணிதப் பட்டதாரிகள் ஷ்ஷ்ஷ்.ஸீதீலீனீ.பீணீமீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூலை 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்தில் விளக்க மாக அறிந்துகொள்ளலாம்.

காகிதத் தொழில் சாதனையாளர்

வெளிநாட்டில் சென்று அறிவை விற்பதற்குப் பதிலாக அங்கிருந்தே ஒரு அறிவை, யோசனை யைப் பெற்று இந்தியா திரும்பியுள்ளார் ஒரு இளைஞர். அவர் திருச்சியைச் சேர்ந்த பிரவீன் குமார். அவர் கொண்டு வந்த அறிவு, சொந்தத் தொழில் செய்யும் யோசனை.

பிரவீன் குமார், 12ஆம் வகுப்புவரை திருச்சியில் படித்தார். அப்போதே அவருக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்குவது தான் விருப்பமாக இருந்தது. ஆனால், அவரது தந்தைக்கு மகன் லண்டனில் சட்டம் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பம். அதனால் தந்தை சொல்தட்டாமல் லண்டன் சென்றார். ஆனால், அங்கு அவரால் ஒழுங்காகப் படிக்க முடிய வில்லை. சொந்தமாகத் தொழில் தொடங்குவது குறித்து அங்கி ருந்தபடியே எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.

அப்படியான ஒரு நேரத்தில்தான் என்ன தொழில் தொடங் கலாம் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. அது, டிஷ்யூ காகிதம் தயாரிக்கும் தொழில். உணவகங்களில் கை துடைக்கத்தான் நாம் அதிகமாக டிஷ்யூ காகிதத்தைப் பயன் படுத்துகிறோம். ஆனால், லண்டனில் கழிவறைப் பயன் பாட்டுக்கும், முகம் துடைப்பதற்கும், உணவுப் பண்டங்களை கொண்டுவருவதற்கும் டிஷ்யூ காகிதம்தான் பயன்படுகிறது. அதனால் மாதாமாதம் மளிகைப் பொருள் வாங்குவதுபோல அங்கு டிஷ்யூ காகிதத்தை எல்லோரும் வாங்குகிறார்கள். இந்தியாவில் டிஷ்யூ பயன்பாடு இப்போதுதான் பெருகிவருகிறது. அதனால் இதையே தொழிலாகக்கொள்ளலாம் எனத் தீர்மானித்திருக்கிறார்.

இந்தியா திரும்பியதும் டிஷ்யூ தயாரிப்புக்கான முக்கியமான மூலப் பொருளான காகிதத்தைக் குறித்து தேடிக் கண்டடைந் திருக்கிறார். யூகித்தபடியே டிஷ்யூ காகிதத்தின் பயன்பாடு இந்தியாவில் பெருகத் தொடங்கியது. இனியும் காலம் கடத்தத் தேவையில்லை என உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

இந்தத் தொழில் வசப்பட ஒரு மாதக் காலம் ஆகி இருக்கிறது. இவரையும் சேர்த்து மொத்தம் பணியாளர்கள் நால்வர்தான் தொடக்கத்தில் இருந்துள்ளனர். அதன்பிறகு தொழில் பெருகப் பெருக அதற்குத் தகுந்தாற்போல் இயந்திரங்களையும் அதிகப் படுத்தி இருக்கிறார் பிரவீன்.

காகிதத்தைப் பொறுத்தவரை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் ஆகிய இரு வகையான காகிதங்கள் பயன்படுத்தப்படு கின்றன. நாங்கள் இரு வகையையும் பயன்படுத்துகிறோம். இவற்றில் மறுசுழற்சி காகிதத்தைப் பயன்படுத்துவதால் மரங்கள் காகிதங்களுக்காக வெட்டப்படுவது குறையும். இந்த வகை காகிதத்தின் பயன்பாடு இப்போது அதிகரித்து வருகிறது எனும் பிரவீன் இப்போது மாதம் 13 டன்வரை டிஷ்யூ காகிதம் உற்பத்தி செய்துவருகிறார்.

தொடக்கத்தில் 3 டன் மட்டுமே அவரால் உற்பத்திசெய்ய முடிந்தது. டன் ஒன்றுக்கு தோராயமாக ரூ. 10,000 வரை வருமானம் கிடைக்கும் என பிரவீன் சொல்கிறார். இப்போது 14 பேர் இவரால் வேலை பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களுக்கும் டிஷ்யூ காகிதத்தை மொத்த விற்பனைசெய்து வருகிறார். அவரது நிறுவனத்துக்கென வீ ஃப்ரெஷ்  என்ற பெயரில் டிரேட் மார்க்கையும் பெற்றுள்ளார். இப்போது டிஷ்யூ காகிதங்களை இலங்கை, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யத் தொடங்கியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கிப் பணி

இந்திய ரிசர்வ் வங்கி, கிரேட் பி அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெயிட்டிருக்கிறது. காலிப் பணியிடங்கள்: 166

வயது: 01.07.2018 அன்று குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளை நிலைப் பட்டம், முடித்திருக்க வேண்டும்; சில பணிகளுக்குப் பொருளாதாரத்திலும் சில பணிகளுக்குப் புள்ளியியலிலும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: இரு நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிறருக்கு ரூ. 850. விண்ணப்பக் கட்ட ணத்தை ஆன்லைன் மூலம் கட்ட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடையோர் ... ஷ்ஷ்ஷ்.க்ஷீதீவீ.ஷீக்ஷீரீ.வீஸீ  என்னும் இணையதளத்தில் 2018 ஜூலை 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.07.2018

முதல் நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 16.08.2018

இரண்டாம் நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 06.09.2018 அல்லது 07.09.2018. கூடுதல் விவரங்களுக்கு: : https://goo.gl/QYbwDn

காவல்துறைப் பணியிடங்கள்

தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (துணை ஆய்வாளர்) தொழில்நுட்பம் பிரிவில் 309  காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாநிலச் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட் டுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ படித்தவர்களும், இதே பாடத்தில் பட்டப் படிப்பு (பி.இ., பி.டெக்.) படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகுதி

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 28 ஆகவும், பி.சி., பி.சி.-முசுலிம், எம்.பி.சி. வகுப்பினருக்கு 30 ஆகவும், எஸ்சி, எஸ்.டி. வகுப்பினருக்கு 33 ஆகவும், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காவல்துறைப் பணியில் இருந்தால் வயது வரம்பு 45 ஆகும். மொத்தக் காலியிடங்களில் 20 சதவீதம் காவல் துறையில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெறும். இதில் பொது அறிவு பகுதியில் 60 வினாக்களும் தொழில்நுட்பப் பாடத்தில் 100 வினாக்களும் இடம்பெறும். 3 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு வினா வுக்கும் அரை மதிப்பெண் வீதம் எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்.

கூடுதல் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டு பங்கேற்பு ஆகியவற்றுக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண். ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண்.

எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தகுதிபெற முடியும். ஒரு காலியிடத்துக்கு 3 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள்.

உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடல் திறன் தகுதியும் உடையவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீusக்ஷீதீஷீஸீறீவீஸீமீ.ஷீக்ஷீரீ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.