எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலை வாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

இளைஞர்களும் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு நிழற்படம்-5, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் நகல்களுடன் நேரில் பங்கேற்று பயன் பெறலாம். இதன்மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படாது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் திறன் மேளா நடத்தப்படும். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இம்மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் திறன் மேளாவில் வேலைநாடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படவுள்ள தொழில் நுட்ப சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிறப்பு வல்லுநர்கள் உதவி யுடன் வரும் 28ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் மின் பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவில் 28 வயதுக்கு உள்பட்டவர்களும், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் 30 வயது வரையும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 33 வயதுக்கு உள்பட்டவர்களும் இதில் கலந்து கொள் ளலாம்.  பயிற்சி வகுப்பும், பாடக் குறிப்புகளும் இலவச மாக வழங்கப்படும்.

வாரம் தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். தற்போது காவலர் பணியில் 5 ஆண்டு களுக்கு மேலாக பணிமுடித்த காவலர்களும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் கூறப் பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை தரும் உயர்கல்வி

உயர் கல்வியில் இயற்பியல், வேதியியல் போன்ற பாரம்பரியமான அறிவியல் படிப்பு களின் வரிசையில் தாவரவியல், விலங்கியல் குறித்தான இளம் அறிவியல் பட்டப் படிப்புகளும் அடங்கும். பிளஸ் 2-வில் உயிரியல், அறிவியல், பயின்ற மாணவர்கள் அதற்கேற்ற மாதிரி இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரத் தகுதி பெறுகிறார்கள்.

தாவரவியல்

உயிர் மண்டலத்தில் நம்மைச் சூழ்ந்தி ருக்கும் பூஞ்சைகள், பாசிகள், தாவரங்கள் ஆகியவற்றைப்பற்றித் தாவரவியலில் படிக்கலாம். தாவரத்தின் இயற்பியல், வேதி யியல் பண்புகள், வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, பரவல், கட்டமைப்பு, பாதிக்கும் நோய்க் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்களைச் செயல்முறை அறிவுடன் இப்படிப்பு போதிக் கிறது. சிறப்புப் பாடங்களாக சூழலியல், உயிர் இயற்பியல், உயிர் வேதியியல், உயிரணுவியல், மரபியல் உள்ளிட்ட பல்வேறு வளரும் துறைகளைப் பற்றியும் படிக்கலாம். தொடர்ந்து முதுநிலை மேற்படிப்பு முதல் ஆராய்ச்சி நிலை வரை பயின்றால், தனித்துவமான வேலைவாய்ப்புகள் நிச்சயமாகும்.

விலங்கியல்

விலங்கியல், இதர உயிரியல் படிப்புகளில் சேர்ந்து ஆராய்ச்சி நிலைவரை தங்களை உயர்த்திக்கொள்வதன் மூலம், மருத்துவத் துறைக்கு ஈடான துறைசார் ஆழ்ந்த அறி வையும் பணி திருப்தியையும் அதிகச் செல வின்றிப் பெறலாம். விலங்கியல் மாணவர்கள் முதுநிலைப் படிப்புகளில் பல்லுயிர்ப் பெருக் கம், உயிர்த் தகவலியல், சூழலியல் கண் காணிப்பு, காட்டுயிர்ப் பாதுகாப்பு, சூழலியல் மேலாண்மை உள்ளிட்ட வளரும் துறை களிலும் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம்.

இளம் அறிவியல் நிலையில் விலங்கியல் படித்தவர்கள், மேற்கொண்டு முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பாக விலங் கியல், அப்ளைடு ஜூவாலஜி, லைஃப் சயின்ஸ் போன்றவற்றைப் பயிலலாம். மேலும் பயோ டெக்னாலஜி, ஃபார்மா, டெய்ரி, கிளினிக்கல் ரிசர்ச் உள்ளிட்ட பிரிவுகளில் எம்.பி.ஏ. பயில் வதன் முதல் அத்துறையின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் துறைகளின் உயர் பணியிடங்களைக் குறிவைக்கலாம்.

உயிரியல் தொழில்நுட்பம்

உயிரியலும் தொழில்நுட்பவியலும் இணைந்த இளம் அறிவியல் பட்டப் படிப்பே உயிர் தொழில்நுட்பவியல். மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், உயிர்நுட்பம் எனப் பல சுவாரசியமான துறைகளின் கலவை இது. உயிரிகளின் செல், மூலக்கூறு அள விலான ஆராய்ச்சி, பரிசோதனைகள் மூலம் நோய்களுக்கான மருந்துப் பொருட்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாய உற்பத்திக்கான நுட் பங்கள் ஆகியவை மூலம் மனிதனின் வாழ்க் கைத் தரம் உயர இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது.

இதன் முதுநிலைப் படிப்பாக விவசாயம், மருத்துவம், கால்நடை சார்ந்த பல்வேறு பயோடெக்னாலஜி பிரிவுகளில் சேர்ந்து பயிலலாம். எம்.எஸ்சி. பயோடெக்னாலஜியை அய்ந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாகவும் சில கல்லூரிகள் வழங்குகின்றன. பயோடெக்னாலஜியை பி.எஸ்.சி., என்ற மூன்று ஆண்டு இளம் அறிவியல் படிப்பைப் போன்றே, பி.டெக்., என்ற நான்கு வருடப் பொறியியல் படிப்பாகவும் படிக்கலாம்.

மைக்ரோபயாலஜி

நம்மைச் சூழ்ந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளிட்ட நுண் ணுயிரிகள் குறித்தும் அவை நமது ஆரோக் கியம், உணவு, விவசாயம் உள்ளிட்டவற்றில் ஏற்படுத்தும் நன்மை தீமைகள் குறித்தும் படிப்பதே மைக்ரோபயாலஜி. மருத்துவ ஆராய்ச்சி, இயற்கையாகவும் செயற்கை யாகவும் தயாரிக்கப்படும் உணவு ரகங்கள், அழகு-ஆரோக்கியத்துக்கான பொருட்கள், விவசாயப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் மைக்ரோபயாலஜி துறையின் பங்கு அதிகம். கூடுதலாக முதுநிலைப் பட்டம் அல்லது பட்டயம் படித்தோ, ஆராய்ச்சி மேற்படிப்பு மூலமாகவோ பாக்டீரியாலஜிஸ்ட், வைரால ஜிஸ்ட், பயோகெமிஸ்ட், செல் பயாலஜிஸ்ட் போன்ற பணிகளைப் பெறலாம். மருத்துவத் துறையில் மரபியல் பொறியியல் மூலம் மரபு நோய்கள், அச்சுறுத்தும் புதிய தொற்று நோய்களுக்கான மருந்துப் பொருள் தயாரிப் பிலும், தடுப்பூசிகள் தயாரிப்பிலும் வியத்தகு வளர்ச்சியை மைக்ரோபயாலஜி கொண் டுள்ளது.

பயோடெக்னாலஜிக்கு இணையான இளம் அறிவியல் படிப்பாக பி.எஸ்சி., உயி ரியல் பட்டப்படிப்பைப் பல கல்லூரிகள் வழங்குகின்றன. ஆனபோதும் பாடத் திட்டத்தில் இந்த இரண்டுக்கும் இடையில் அடிப்படையான சில வேறுபாடுகள் உண்டு. பி.எஸ்சி. உயிரியல் அறிவியல் பாடமாகும். பயோடெக்னாலஜி தொழில்நுட்பப் பாட மாகும். வகைப்பாட்டியல், வாழும் உயிரி னங்கள், அவற்றின் வளர்ச்சி, மரபியல், செயலாக்கம், பயன்பாடுகள் குறித்து உயிரியல் படிப்பு கற்றுத் தருகிறது. இளநிலையில் தாவரவியல், உயிரியல், விலங்கியல் பாடங் களைப் பயின்று முதுநிலையில் பயோடெக் னாலஜி, மைக்ரோபயாலஜி போன்றவற்றைப் பயில்வதும் பலரது தேர்வாக இருக்கிறது.

ஆசிரியர் பணி முதல் அய்.எஃப்.எஸ். எனப்படும் இந்திய வனப் பணிவரை பலவிதமான வேலைவாய்ப்புகளுக்கு இந்தப் பட்டப் படிப்புகள் உதவும்.

தாவரவியலைப் பயின்றவர்களுக்கு வேதியியல் தொழிற்கூடங்கள், எண்ணெய் வயல்கள், தேசியப் பூங்காக்கள், பள்ளி-கல்லூரி- பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தாவரவியல் ஆய்வுக் கூடங்கள், உயிர் நுட்பவியல் ஆராய்ச்சி எனப் பல துறைகள் சார்ந்த பணிகள் காத்தி ருக்கின்றன.

விலங்கியல் பட்டப்படிப்பை முடித்த வர்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர், சூழலியல் அலுவலர், ஆய்வக உதவியாளர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 158 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன் லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:   Forest Apprentice - 148  (Regular)

பணி:   --Forest Apprentice -10 (Shortfall vacancies for SC applicants only)

சம்பளம்: மாதம் ரூ. ரூ.37,700 முதல் ரூ.1,19,500

தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அறிவிப்பை பார்த்து முழுமையான தகுதி விவரங்களை தெரிந்துகெள்ளவும்.

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு சலுகை வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.08.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_12_notfy_Forest_Apprentice.pdf 
லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.