எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படைப் பிரிவுகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங் களை இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை ராணுவப் படைப் பிரிவான மத்திய ரிசர்வ் காவல் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 21 ஆயிரத்து, 569 வீரர்கள் பணியிடம், எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்பட, 54 ஆயிரத்து, 963 பணியிடங்களை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நிரப்பப்படவுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 23 வயதுடையவர்கள் விண் ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.   விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு,  உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப் படுவர்.  எழுத்துத் தேர்வு ஆன்லைன் லழியில் நடத்தப்படும்.

இதில், பொது நுண்ணறிவுத் திறன், ரீசனிங், பொது அறிவு, அடிப்படை கணிதம், பொது ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய 4 பகுதிகளில் இருந்து  தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 100. தேர்வு நேரம் 90 நிமிடங்கள். ஒரு காலியிடத்துக்கு 10 பேர். எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்கள், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதைத் தொடர்ந்து, உடல்தகுதித் தேர்வு நடைபெறும்.

தகுதியுள்ளவர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தை (www.ssc.nic.in) பயன்படுத்தி ஆகஸ்டு மாதம் 20ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

சேவை தரும் வேலை

சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனிதர்கள் அனைவருக்கும் உண்டு. அந்த எண்ணத்தின் உந்துதல் மாணவப் பருவத்தில் சற்று தீவிரமாக இருக்கும். பணத்தின் தேவை காரணமாக, சேவை மீதான ஈடுபாடு படிப்புடன் சேர்ந்தே முடிந்துவிடுகிறது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது.

சமூகப் பணி இப்போது ஒரு தொழில்துறையாக மாறிவிட்டது. இன்று தனது சேவையைச் சேவையாற்று பவர்களுக்கும் அது அளிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கைநிறையச் சம்பளம் அளிக்கும் பல வேலைவாய்ப்பு களைச் சமூகசேவை இன்று அளிக்கிறது.

ஏன் படிக்க வேண்டும்?

சமூகசேவைக்கு உதவும் முனைப்பும் நல்லதை நினைக்கும் மனமும் மட்டும் போதாது. உதாரணத்துக்கு, சாலை நடுவில் கிடக்கும் கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதும் ஒரு சமூகசேவைதான். ஒருமுறை மட்டும் நிகழும் நிகழ்வாக அது இருந்தால், அதை இயல்பாக எந்த மெனக்கெடலுமின்றிச் செய்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால், நாடு முழுவதும் இருக்கும் அனைத்துச் சாலை களிலும் இருக்கும் கற்களை அகற்றுவதாக இருந்தால், அதற்கு முறையான பயிற்சியும் திட்டமிடலும் தேவை.

கல்லைத் தூக்கி ஓரமாகப் போடுவதற்கு எதற்குப் பயிற்சியும் திட்டமிடலும் என்று சிலர் ஏளனமாக நினைக்கலாம். ஆனால், அவை எந்த அளவு இன்றிய மையாதவை என்பதைக் கீழே பார்ப்போம். இங்கு நாம் விவாதிக்க இருப்பது வெறும் கல்லாக இருக்கலாம். ஆனால் அதே அளவுகோலை எதனுடனும் பொருத்திப் பார்த்து சமூகசேவைத் துறையின் வீச்சை விளங்கிக் கொள்ள முடியும்.

முதலில் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளில் எவற்றில் எல்லாம் கற்கள் நடுவில் கிடக்கின்றன என்பதை அறியவேண்டும். பின்பு அந்தக் கற்களை அகற்றுவதற்கு நம்மைப் போன்று சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை நாம் இனம் காண வேண்டும். பின் அவர்களுக்கு, அந்தக் கல்லை எப்படி அகற்ற வேண்டும் எனப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது அகற்றிய கல்லை வீட்டின் முன்னோரக் கடையின் முன்னே போடாமல், யாருக்கும் தொந்தரவு அற்ற முறையில் எங்கே போட வேண்டும் எப்படிப் போட வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சுமூகமாகப் பேசுதல்

கற்களைச் சிலர் வேண்டும் என்றே, தங்கள் பயன் பாட்டுக்காகச் சாலையில் வைத்திருக்கலாம். அந்தக் கற்களை அகற்றும்போது அவர்கள் பிரச்சினையும் பண்ணலாம். அவர்களிடம், அந்தக் கல் வேண்டு மானால் உங்களுக்குச்சொந்தமானதாக இருக்கலாம், ஆனால், அது இருக்கும் சாலை அனைவருக்கும் சொந்தமானது என்பதை அவர்களுக்குப் புரியும் மொழியில் சினம் ஊட்டாமல் எவ்வாறு சொல்வது எப்படி என்பதைத் தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

சரி கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டுச் சென்றால் மட்டும் போதுமா? கண்டிப்பாகப் போதாது. ஏனென்றால், நீங்கள் கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டு விட்டுச் சென்ற மறு நிமிடமோ மறு நாளோ மீண்டும் ஒரு கல் சாலையின் நடுவில் வருவதற்குச் சாத்தியம் உண்டு, அதைத் தவிர்ப்பதற்கு, சாலையின் நடுவில் இருக்கும் கற்களால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து களையும் இடைஞ்சல்களையும் பற்றிய விழிப்புணர்வை அங்கு வசிக்கும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் ஏற்படும் விழிப் புணர்வே சமூக சேவையின் உச்சம்.

ஒருங்கிணைப்பு

ஒரே நபரால் இவை அனைத்தையும், கண்டிப்பாக செய்ய முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நபரின் திறமையும் மாறுபடும். சிலர் கல்லை அகற்றுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிலர் மக்களிடம் சுமுகமாகப் பேசுவதில் இயல்பாகவே திறன் மிகுந்தவர் களாக இருப்பர். சிலர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் அனைவரிடம் இருந்தும் சிறந்த முறையில் வேலை வாங்க நல்ல மேலாளர் தேவை. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மேலாளர் தேவைப்படுவார். அந்த மேலாளர்களை எல்லாம் ஒருங்கிணைக்க ஒரு ஒருங்கிணைப்பாளர் தேவைப்படுவார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

கல்லை அகற்றும் ஒரு சின்ன முயற்சி, நாடு முழுவதற்கும் என்றாகும்போது, அதற்காகத் தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கையாலும் திட்டமிடலாலும்  பயிற்சி யாலும் எப்படி மலைப்பூட்டும் விதமான பெரும் முயற்சி ஆகிறது என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். ஒரு சிறு முயற்சி பெரு முயற்சி ஆகும் இடத்தில்தான் -க்கள் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உருவா கின்றன.

என்ஜிஓ-க்களின் நோக்கம் உண்மையாகவும் உன்னத மாகவும் இருந்தால், அவர்களை நம்பி தேவைக்கும் அதிகமாக நன்கொடைகளைக் கொடுக்கப் பலர் இன்று உள்ளனர். இதனால் என்ஜிஓ-க்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகமாகி விட்டது. பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. திட்டத்தின் வெற்றியே அவர்களுக்கு முக்கியம். இதனால், அவர்களுடைய திட்டத்தைச் செயல்படுத்தும் தகுதியான நபர்களுக்கு அய்.டி துறைக்கு இணையான சம்பளத்தை அவர்கள் வழங்குகிறார்கள்.

என்ன படிக்க வேண்டும்?

சமூக சேவையிலோ உளவியலிலோ பட்டம் (ஙி.ஷிநீ றிsஹ்நீலீஷீறீஷீரீஹ், ஙிணீநீலீமீறீஷீக்ஷீ ஷீயீ ஷிஷீநீவீணீறீ கீஷீக்ஷீளீs) பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளநிலையில் வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள், ஆன்லைனில் இருக்கும் இலவச வகுப்புகளில் படித்துப் பட்டம் பெற்று சமூக சேவையில் குதிக்கலாம்.

எங்குப் படிக்கலாம்?

https://www.coursera.org/courses?query=social%20work
https://www.udemy.com/learn-social-psychology-fundamentals/
https://www.udemy.com/learn-psychology/
https://www.class-central.com/tag/social%20work
https://academicearth.org/social-work/
http://www.open.edu/openlearn/search-results?as_q=social+works
http://learningpath.org/articles/Free_Online_Social_Work_Courses_from_Top_Universities.htm

பெல் நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக பெல் என அறியப்படுகிறது.  இத் துறையில் பல்வேறு பொருட்களைத் தயாரித்தல், மேம்படுத்துதல் மற்றும் சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனமாக வளர்ந்துவருகிறது. இதில் பயிற்சியாளர் பிரிவில் ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பெல் நிறுவனத்தின் இத்திட்டம் நீம் (என்.இ.இ.எம்.,) என்ற அடிப்படையில் இருக்கும். வயது: 2018 செப்., 1 அடிப்படையில் விண் ணப்பதாரர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பார்ம், பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிப்ளமோ படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்த வர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஸ்டைபண்டு: பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.10,775, ஸ்டைபண்டாகப் பெற முடியும்.

விபரங்களுக்கு: http://bel-india.in/Documentviews.aspx?fileName=NEEM-Advertisement-details.pdf