எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆசிரியப் பணி என்பதை அறப் பணி என் பார்கள். அதிலும் சிறப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராகும்போது, அந்த ஆசிரியப் பணி முழுமையடைகிறது. சிறப்புக் குழந்தைகள் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கான ஆசிரியராகும் தகுதியை வளர்த்துக்கொள்வோருக்குச் சிறப்பான ஊதியமும் மன நிறைவும் கொண்ட பணிவாய்ப்பும் காத்திருக்கின்றன.

காத்திருக்கும் வாய்ப்புகள்

மனம், உடல் பாதிப்பு அடிப்படையில் சிறப்புக் குழந்தைகள் மருத்துவ ரீதியாக அடையாளம் காணப்படுகிறார்கள். பெற்றோரால் கூடப் போதிய அரவணைப்பை வழங்க இயலாத இந்தக் குழந் தைகளைப் பராமரித்து, அவர்களின் தடுமாற்றங் களை உள்வாங்கி, திறன்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு சிறப்பு ஆசிரியரைச் சாரும்.

இதனாலேயே வெளிநாடுகளில் பொதுவான ஆசிரியர்களைக் காட்டிலும் சிறப்பு ஆசிரியர் களுக்கு ஊதியம் அதிகம். நம் நாட்டில் இந்த விழிப் புணர்வையும் சிறப்பு ஆசிரியர்களின் முக்கியத்துவத் தையும் நகரப் பகுதிகளில் உணரத் தொடங்கி உள்ளனர். இந்த வகையில் அதிகரித்து வரும் சிறப்புப் பள்ளிகள், அரசு சார்பிலான அதிகரிக்கும் பணி வாய்ப்புகள் ஆகியவற்றை உத்தேசித்து அவை தொடர்பான கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொள்வது விரைவில் பயனளிக்கும்.

தற்போதைக்குத் தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுத் துறைகள், பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியர்களுக்கான பணியிடங்கள், தனியார் சிறப்புப் பள்ளிகள், பராமரிப்பு மய்யங்கள், சிறப்புப் பயிற்சியாளர்கள், எனப் பரந்த பணி வாய்ப்புகள் சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்களுக்குக் காத்திருக்கின்றன.

டிப்ளமோ படிப்புகள்

பிளஸ் டூ முடித்ததும் ஆசிரியப் பணிக்கான D.T.Ed பட்டயப் படிப்பை மேற்கொள்வது போலவே, சிறப்புக் குழந்தைகளுக்கான D.S.E. (Diploma in Special Education)
எனப்படும் சிறப்புக் கல்விக்கான பட்டயப் படிப்பையும் பெறலாம். சிறப்புக் குழந்தைகளின் பல்வேறு பாதிப்புகளைப் பொறுத்து இந்தப் பட்டயப் படிப்புகளின் உட்பிரிவு களில் சேரலாம்.

உதாரணத்துக்கு, மனவளர்ச்சி குன்றியவர்கள், செரிபரல் பால்ஸி, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள், செவித்திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு எனத் தொடங்கி அவை நீளுகின்றன.

இரண்டாண்டுப் படிப்பில் முதலாமாண்டு அனைவருக்கும் பொதுவாகவும் இரண்டாமாண்டில் குறிப்பிட்ட பாடப் பிரிவைச் சார்ந்தும் பாடத்திட்டம் அமைந்திருக்கும். இந்தியப் புனர்வாழ்வு கவுன்சி லின் (Rehabilitation Council of India- http://www.rehabcouncil.nic.in/) அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இவற்றைப் படிக்கலாம். இவற்றில் பல்வேறு படிப்புகளைத் தொலைநிலைக் கல்வியாகவும் பெறலாம். ஆசிரியர் பணிக்குத் தங்களைத் தயார் செய்பவர்கள், வழக்கமான படிப்பு களுடன் கூடுதலாக இந்தப் பட்டயப் படிப்பையும் மேற்கொண்டு தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளலாம்.

பி.எட். படித்தல் சிறப்பு

பட்டயப் படிப்பைப் போன்றே பட்டப் படிப் பாகவும் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் தகுதியைப் பெறலாம்.  ,   என பி.எஸ்சி. பட்டமாகவும் இவற்றைப் பெறலாம். சிறப்பாசிரியர்களுக்கான பி.எட். பட்டத்தைப் பெறுவதில் ஆசிரியப் பணிக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்குக் கூடுதல் பயன் உண்டு. எந்தத் துறையில் பட்டப் படிப்பு முடித்த வர்களும் தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் வாயி லாகச் சிறப்பாசிரியருக்கான பி.எட். படிப்பில் சேரலாம். பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்.

அரசுப் பணி தாமதமானால் தனியார் பள்ளி அல்லது சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம்.

மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த சிறப்பாசிரியர் பணியிடங்களுக்குத் தொகுப்பூதியம் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. மற்றபடி சிறப்புப் பள்ளிகளில் தலா 2 ஆசிரியர் பணியிடங் களும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அரசுப் பணியிட மாகப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர் பணியிடமும் வாய்ப்புகளாக உள்ளன.

இந்தச் சிறப்பாசிரியர் பி.எட். சேர்க்கையில் மாற்றுத் திறன் அடைவைப் பொறுத்து முன்னுரி மைகள் உண்டு.  விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளி யாக இருந்தாலோ அவருடைய பெற்றோர் மாற்றுத் திறனாளி என்றாலோ 10 மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனப் பணியிடங்கள்

டி.ஆர்.டி.ஓ. என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 494 முதுநிலைத் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்  நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு பி.எஸ்சி. (விவசாயம், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், ஜியாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரிகளும், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் கெமிக் கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் உள்ளிட்ட பாடங்களில் டிப்ளமா முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 5  ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியா னோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது. இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் அடிப்படை கணிதம், ரீசனிங், பொது அறிவு, அடிப்படை ஆங்கிலம், பொது அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து 150 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 150. தேர்வு நேரம் 120 நிமிடம்.

முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில்  சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவார்கள். ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சாரத்தில் இந்த எண்ணிக்கை அமைந்திருக்கும்.

மெயின் தேர்வில், சம்பந்தப்பட்ட  பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகள் கேட்பார்கள். மொத்த மதிப்பெண் 100. தேர்வு நேரம் 90 நிமிடம். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர்  அறிவிக்கப்படும். முதுநிலைத் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு ஆரம்ப நிலையில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான  வாய்ப்புகள் அதிகம்.

தகுதியுடைய பி.எஸ்சி. பட்டதாரிகள், பொறியியல் டிப்ளமா முடித்தவர்கள் டி.ஆர்.டி.ஓ. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.பீக்ஷீபீஷீ.ரீஷீஸ்.வீஸீ) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 ஆகஸ்ட் 2018

பி.எஸ்சி., டிப்ளமா முடித்தவர்களுக்கான வாய்ப்பு இது.

பொறியியல் பட்டதாரிகளும், எம்.எஸ்சி. பட்டதாரிகளும் விண்ணப்பிக்க இயலாது.

அரிதான நரம்பு பாதிப்பு நோயாளிகளுக்கு ஆதரவுக் கருவி வடிவமைப்பு

சிவநாடார் அறக்கட்டளையின் முதல் முன்முயற்சியாக அரிதான நரம்பியல்நோயால் பாதித்து தசைகளின் இயக்கம் தடைபட்ட நோயாளிகளுக்கு (ஏ.எல்.எஸ்.,) குறைந்த விலையில், குறைந்த எடையிலான ஆதரவு கருவியை இதனை கல்வி நிறுவனத்தின் உயிரி மருத்துவ பொறியியல்துறை உதவி பேராசிரியர் எம்.தனலட்சுமி  தனது மாண வர்கள் எஸ்.விஸ்வநாதன்,  ஜி.பிரவீன்குமார் ஆகியோருடன் இணைந்து உருவாக்கியுள் ளார்.

ஏஎல்எஸ் எனப்படும் அரிதானநரம்பு பாதிப்புநோயானது, முளையில் உள்ள சிறு நரம்புகளின் இயக்கத்திலும், முதுகுத்தண்டு வடத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால், தலையானது நிமிர்ந்த நிலையில் இல்லாமல் தொங்கிய நிலைக்குச் செல்கிறது.

இதனைப் போக்க இப்போதுகருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கருவிகளின் மூலம் கழுத் தினை திருப் புதல் போன்ற செயல் பாட்டுகளை மேற் கொள்ள முடியும்.  ஆனால், இந்தக் கருவி களால் புழுக் கம், தோலில் எரிச்சல், அதிகம் சூடாவது, கழுத்தில் வலி போன்ற பல்வேறு பிரச்சினை கள் ஏற்படுகின்றன.

ஆனால், எஸ்எஸ் என் கல்விகுழுமம் வடிவமைத்துள்ள கருவியானது குறைந்த விலையுடன்,  எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதுடன் இப்போது சந்தையில் உள்ள கருவிகளால் ஏற்படும் பல்வேறு பிரச் சினைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது.

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி குறித்து, எஸ்எஸ்என் கல்வி நிறுவனத்தின் தலைவர் கலாவிஜயகுமார் கூறி யதாவது:- கல்லூரியில் மாண வர்கள் சேர்ந்த உடனே யே ஆராய்ச்சி தொடர்பான அவர் களது  அறிவை ஊக்குவிக்கும் வகை யில் வாய்ப்புகளை வழங்குகிறது.

சமூகத்துக்கு மிகவும் பயன் அளிக்கக் கூடிய வகையிலான தயாரிப்பு களை எங்களது மாணவ - மாணவிகள் தயாரித்து வருவது மனதுக்கு மிகுந்த நெகிழ்வையும், மகிழ்ச்சி யையும் தருகிறது. ஒருலட்சம் இந்தியர்களுக்கு இடையே 5 பேர் ஏஎல்எஸ்., எனப்படும் அரியவகை நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்காக, எஸ்எஸ்என் கல்வி நிறுவனம் கண்டறிந்துள்ள இந்தப் புதியகருவியானது விலையிலும், பயன்பாட்டிலும் ஏற்ற வகையில் இருப்பதுடன் நோயாளிகளின் வாழ்க்கையில் மிகுந்த பயனைத் தரும் என நம்புகிறோம் என்றார்.