எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அமெரிக்காவில் படிக்கச் செல்ல வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பயிற்சி கிடைத்தால் போதும் என்று தோன்றலாம். இந்த இரண்டு வாய்ப்புகளுமே அமெரிக்கக் குடிமகன்களுக்கு எளிமையாகக் கிடைத்துவிடலாம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த கன்னிகா குழந்தைவேலுவுக்கும் அப்படி இரு வாய்ப்பும் ஒருசேர கிடைத் திருக்கிறது என்பது ஆச்சரியம்தான். அந்த வாய்ப்பு கன்னிகாவுக்கு எப்படிக் கிடைத்தது?

அமெரிக்காவில் மேற்படிப்பு

கன்னிகாவுக்குக் கோவைதான் சொந்த ஊர். ஈரோட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர். 2006இல் படிப்பை முடித்த பிறகு பெங்களூ ருவில் ஸ்டீல் டிசைனிங் வேலையில் சேர்ந் தார். அங்கே நல்ல சம்பளம், பதவி உயர்வு என்று கன்னிகாவுக்கு வாழ்க்கை முன் னேறிக் கொண்டிருந்தது.

ஆனாலும், அவருக்குள் ஓர் உறுத்தல். ஒரே மாதிரியான வேலை; ஒரே மாதிரியான பணிச் சூழல் என எத்தனை ஆண்டுகளுக்குச் செல்வது என நினைத்தார். குறிப்பிட்ட வயதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது என்பதால், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றால் என்ன என்று தோன்றியிருக்கிறது.

திருமண வயதில் இருந்தபோதும் பெற் றோரை சம்மதிக்க வைத்து வெர்ஜினியா வுக்குப் பறந்துவிட்டார். அங்கு சென்றதும் புவி இயற்பியல் (ஜியோ பிசிக்ஸ்) படிக்கத் தொடங்கினார். பி.இ. சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எப்படி புவி இயற்பியல் படிக்க முடிந்தது?

சின்ன வயசிலேர்ந்தே பூமி சார்ந்த விஷயங்கள் பிடிக்கும். பி.இ. படிக்கும்போதே ஜியாலாஜியும் சேர்த்துதான் படித்தேன். இந்தியாவிலிருந்து இன்ஜினீயரிங் படித்து விட்டு வருபவர்கள் கணிதம், அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளில் அறிவுத் திறனோடு இருப்பார்கள் என்ற எண்ணம் அமெரிக்காவில் இருக்கு.

இதுபோன்ற காரணங்களால் அமெரிக் காவில் சுலபமாக புவி இயற்பியல் மேற் படிப்புக்கு இடம் கிடைத்தது. அதோடு ஆறு ஆண்டுகள் வேலை அனுபவமும் இருந்த தால் நாசாவில் பயிற்சிக்கு இடம் கொடுத் தார்கள். ஒரு திட்டத்தில் என்னை சேர்த்து மூன்று மாத காலம் நாசாவில் பயிற்சி கொடுத்தார்கள். அந்தத் திட்டத்தில் இப் போதும் இருக்கிறேன். ஆனால், அந்தப் பணியை நாசாவுக்கு வெளியே இருந்து செய்கிறேன்  என்கிறார் கன்னிகா.

வேலை செய்தபடி படிப்பு

2015இல் புவி இயற்பியல் முதுகலை படிப்பை முடித்த உடனே புவி இயற்பியல் பிரிவில் ஆய்வுப் படிப்பிலும் சேர்ந்து விட்டார் கன்னிகா. ஆய்வுப் படிப்பில் கடலுக்கடியில் எரிமலைகள் எவ்வளவு வெப்பத் துடன் நெருப்பைக் கக்குகின்றன, அந்த வெப்பம் கடலையும் பூமியையும் எப்படிப் பாதிக்கிறது என்பது பற்றி ஆய்வில் ஈடுபட்டார்.

நான் இப்பவும் ஸ்டூடண்ட் விசாவில்தான் இருக்கிறேன். ஸ்டூடண்ட் விசாவில் இருக் கிறதால் ஒரு வாரத்துக்கு 20 மணி நேரம்வரை பல்கலைக்கழக வளாகத்தில் வேலை செய்யலாம். இளங்கலை மாணவர் களுக்கு பாடம் எடுக்கவும் அனுப்புவார்கள் அல்லது ஆய்வுக்காகவும் பயன்படுத்திக் கொள் வார்கள். எந்த வேலையைச் சொல்கிறார் களோ அதில் ஈடுபடுறது எனக்கு வழக்கம். இதற்காக எனக்கு ஊக்கத் தொகை கொடுத் திருக்கிறார்கள் என்கிறார்.

சரி, நாசாவில் பயிற்சி பெற விரும்பும் இந்திய இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்குமா கேட்டால், நாசாவில் வேலை செய்ய வேண்டுமென்றாலோ பயிற்சி பெற வேண்டுமென்றாலோ முதலில் அமெரிக்கக் குடியுரிமை இருக்க வேண்டும். பொதுவாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர் களுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான்.

ஒரு சில படிப்புகளை வைத்து பெரிய அளவில் நிபந்தனைகள் இல்லாமல் பயிற்சியும் கொடுப்பது உண்டு. அப்படித் தான் எனக்கு கிடைச்சது. என்னைப் போல பூமியைப் பற்றி படிக்க விரும்பினாலோ அல்லது வேறு ஏதாவது வாய்ப்புகள் கிடைத்தாலோ நாசாவில் பயிற்சி எடுக்க விண்ணப்பிக்கலாம். தகுதியை வளர்த்துக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும். என்கிறார் கன்னிகா குழந்தைவேல்.

பழக்கம் அவசியம்

இந்த ஆய்வை அக்டோபரில் முடிக்க விருக்கிறார். அடுத்து பேராசிரியர் ஆகும் கனவோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வரும் மாணவர்களுக்கு சில அறிவுரை களையும் சொல்கிறார். அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தால், இங்கே வந்த பிறகு எல்லாரிடமும் சகஜமாகப் பழக வேண்டியது முக்கியம். இந்தியர்களிடம் மட்டும் நட்பு வைத்துக்கொள்ளாமல் எல்லோரிடமும் பழகினால்தான் தகவல் தொடர்பு வளரும். அதேபோல பிடித்த எந்தத் துறை சார்ந்த தகுதிகளையும் வளர்த்துக்கொள்ளலாம்.

இங்கே சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கலாம். நிறைய துறைச் சார்ந்த கிளப்புகளும் உள்ளன. எந்த கிளப்பில் ஆர்வம் இருக்குதோ அங்கே சேரலாம். அந்த கிளப்புகளுக்கு வருவோராலும் நமக்கு நல்ல தொடர்புகள் கிடைக்கும். அவர்கள் மூலமும் நமக்கு ஏதாவது வழி கிடைக்கும். என்கிறார் கன்னிகா