எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நபார்டு வங்கி எனப்படும் தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியில் வளர்ச்சி உதவியாளர்  பதவியில் 70 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்குப் பட்டதாரிகள் விண்ணப் பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம்.

தேவையான தகுதி: எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. வயது 18 முதல் 35-க் குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டு களும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது. இரண்டு வகையான எழுத்துத் தேர்வுகள் இடம்பெறும். இரு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் பொது ஆங்கிலம், அடிப்படை கணிதத் திறன், பகுத்தாராயும் திறன்  ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் அப்ஜெக்டிவ் (தேர்ந்தெடுத்தல்) முறையில் கேட்கப் படும். தேர்வுக்கான காலவரையறை 1 மணிநேரம்.

மொத்த மதிப்பெண் 100.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் 2ஆவது நிலை தேர்வெழுதத் தகுதிபெறுவர். இதில், ரீசனிங், அடிப்படைக் கணிதம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, வங்கியின் செயல்பாடு தொடர்பான பொது அறிவு, அடிப்படைக் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150. இதோடு கூடுதலாக 50 மதிப்பெண் ணுக்கு ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் உண்டு.

முதல் தேர்வு பகுதியை ஒன்றரை மணி நேரத் திலும், 2ஆவது பகுதியை அரை மணி நேரத்திலும் முடிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும். சரியான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

வளர்ச்சி உதவியாளர் பணிக்கு ஆரம்ப நிலையில் ரூ.31 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உரிய கல்வித் தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தைப் www.nabard.org பயன்படுத்திச் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


புள்ளியியல் துறையில் பட்டதாரிகளுக்கு பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புள்ளியியல் துறையில் ஆய்வாளர் பதவிகளுக்கான 13 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப் பை வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்கள் செப்டம்பர் 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி: 01.07.2018 அன்று, எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முசுலிம்கள், கண வனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை. இந்தப் பிரிவினரைத் தவிர பிறர் 30 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண் டும்.  மாற்றுத் திறனாளிகள் 40 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:  28.08.2018 அன்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் அல்லது கணிதத் தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: நிரந்தரப் பதிவு  செய்திருப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். பிறர் தேர்வுக் கட்டணத்துடன் நிரந்தரப் பதிவுக்கு ரூ.150 சேர்த்துச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந் ததியர், எஸ்.டி. ஆகிய பிரிவினருக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கும் விதவைகளுக்கும் கட்டண விலக்கு உண்டு. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி செல்லான் மூலமாகவோ கட்டலாம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்ப தாரர்கள் www.tnpscexams.net / www.tnpscexams.in என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நவம்பர் 24 அன்று சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.09.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner