தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் முதுநிலைத் தொழில்நுட்ப உதவியாளர், இளநிலைத் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளில் 19 காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
தகுதி: முதுநிலை உதவியாளர்: பி.எஸ்சி. (ஜவுளித் தொழில்நுட்பம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 ஆண்டு பணி அனுபவத்துடன் கைத்தறித் தொழில்நுட்பம் அல்லது ஜவுளித் தொழில்நுட்பம் பாடப் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.
இளநிலைத் தொழில்நுட்ப உதவியாளர்: கைத் தறித் தொழில்நுட்பம் அல்லது ஜவுளித் தொழில் நுட்பத்தில் டிப்ளமா படிப்பு போதும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 28. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு முறை: மேற்கண்ட இரு பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பாடத்தில் 200 வினாக்களும் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 70 மதிப்பெண். தகுதியுடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தைப் (www.tnpsc.gov.in) பயன்படுத்தி விண் ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டத்தை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6 பிப்ரவரி 2019
எழுத்துத் தேர்வு: 2019 ஏப்ரல் 20
நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை.