எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏர் இந்தியா போக்குவரத்து சேவை நிறுவனத்தில் நிரப்பப்பட பாதுகாப்பு முகவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Agents

காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ.17,654

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 28 வயதிற் குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 3 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். என்சிசியில் பி,சி சான்றிதழ், தீயணைப்புத் துறை பயிற்சி, பாதுகாப்பு பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பயிற்சி பெற்றி ருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.02.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:    Devidutt Dalmiya College of Physical Education,Keshav Vidhyapeeth, Jamdoli, Jaipur - 302031

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.500. இதனை டில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். டி.டி.யின் பின்புறம் விண்ணப்ப தாரர் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் டி.டி, தேவையான அசல் மற்றும் சுய சான்று செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களுடன் நேர் முகத் தேர்வில் கலந்துகெள்ள வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.airindia.in/writereaddata/Portal/career/698_1_Advertisement-AIATSL-2019-JAIPUR.pdf

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner