எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல்பொருள் அங்காடிகள் முதல் பல்மருத்துவம் வரை எண்ணிடலங்கா துறைகளில் ரோபோக்கள் என்னும் இயந்திர மனிதனின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ரோபோ உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த எந்த விடயமென்றாலும், நமக்கு அமெரிக்கா மட்டுமே நினைவிற்கு வந்த காலம் மாறி தற்போது சென்னை போன்ற நகரங்களிலும்கூட ரோபோக்களை வடி வமைக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில், சென்னை, பெங்களூரு, அய்தராபாத் ஆகிய நகரங்களிலுள்ள வேறுபட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இணைந்து ‘ரோடியோ’ என்னும் போக்கு வரத்து விழிப்புணர்வையும், பணிகளையும் செய்யும் ரோபோவை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

துறைசார்ந்த வல்லுநர்களின் மேற்பார் வையில் முழுக்க முழுக்க ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோட்டை ஏற்கெனவே சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் ஏற்றுக் கொண்டு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த ரோபோ குறித்து மேலும் பல விடயங்களை தெரிந்து கொள்வதற்காக அதை உருவாக்கிய சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எஸ்பி ரோபோடிக்ஸ் என்னும் ரோபோடிக்ஸ் பயிற்சி நிறுவனத்தின் அணியினரிடம் பேசினோம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு பெங்களூரு, அய்தராபாத், மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற நாட்டின் பெருநகரங்களிலும், முக்கியமான மாவட்ட தலைநகரங்கள் என இந்தியா முழுவதும் 65 இடங்களிலும், ஆஸ்திரேலியாவிலும் செயல்படும் தங்களது நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக கூறுகிறார் ‘ரோடியோ’ என்னும் போக்குவரத்து சரிசெய்யும் ரோபோவை உருவாக்கிய பள்ளி மாணவர்களின் அணியின் வழிகாட்டியான சந்திரகுமார்.

“ஏழு வயது சிறுவர்கள் முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரை என எங்களிடம் முப்பது ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயின்று வருகிறார்கள்.

ரோபோடிக்ஸ் மட்டு மின்றி,  என்னும் பொருட்களின் இணையம்,  என்னும் மெய் நிகர் தொழில்நுட்பம் போன் றவை குறித்து அடிப்படை முதல் சமீபத்திய மேம்பாடுகள் வரை சொல்லி தருகிறோம்.

ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் தங்களாவே கற்றுக்கொள்ளும் வகையில் அனிமேஷன் காணொளிகளை அடிப் படையாக கொண்ட அமைப்புமுறையுடன் செயல்முறை விளக்கத்துடன் கூடியதாக எங்களது பயிற்சி முறை வடிவமைக்கப் பட்டுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

குறைந்தபட்சம் எத்தனை வயதானவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம் என்றும், இதன் மூலம் மாணவர்களது எதிர்காலத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும் அவரிடம் கேட்டபோது,

“11 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரோபோடிக்சை கற்றுக்கொள்வதற்கு நாங்கள் பரிந்துரைத்தாலும், எங்களது மய்யத்தில் 7 வயது குழந்தைகள் கூட பயின்று வரு கின்றனர். ரோபோடிக்சை பொறுத்தவரை ஒருவரால் அனைத்தையும் செய்யவியலாது”

“ ஒருவர் மென்பொருள் உருவாக்கம், வடிவமைப்பு, தயாரிப்பு என ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக் கக்கூடும்.

எனவே, எங்களிடம் சேர்ந்தவுடன் மாணவர்களின் திறனை குறிப்பிட்ட காலம் ஆய்வு செய்து அவர்களுக்கு எத்துறையில் திறமை தென்படுகிறதோ அதை கற்பிப்ப துடன், அதை மாணவர்களை எதிர்காலத்தில் கல்லூரியில் சேர்க்கும்போது கவனத்தில் கொள்ளுமாறு பெற்றோரையும் கேட்டுக் கொள்கிறோம்“ என்று சந்திரகுமார் கூறுகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner