Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மய்யத்தில் காலியாக உள்ள பிளான்ட் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கப் படும். ஓபிசி பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பணி விவரம்: பிளான்ட் ஆபரேட்டர்-10, பேசிக் சயின்ஸ் (ஹெல்த் பிசிக்ஸ்)-8. தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ்2 தேர்ச்சி. மில்ரைட்-8, இன்ஸ்ட்ருமென்டேஷன்- 10. தகுதி: பிளஸ் 2வில் இயற் பியல், வேதியியல்,கணிதம் ஆகிய பாடங்களில் 60 சதவிகித தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் அய்.டி.அய் அல்லது என்.சி.வி.டி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது: 26.12.2011ன்படி 18இல் இருந்து 25க்குள். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது முதல் ஆண்டில் மாதம் ரூ.6,200, இரண்டாம் ஆண்டில் ரூ.7,200 ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிற்சியை முடித்த பின் ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000-2,400. சம்பள விகிதத்தில் டெக்னீஷியன் பி அல்லது சி கிரேடு அந்தஸ்தில் பணியில் அமர்த்தப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 15.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்