சென்னை, பிப்.22-வேலை வாய்ப்பு பதிவு விவரங்களை, இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகங் களில் மேற் கொள்ளப்படும் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும், தற்போது இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான இணைய தள முகவரி வவயீ://வஎநடயஎயயயீ யீர.படிஎ. ஆகும். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய் வதுடன் மட்டுமல்லாமல், தங் களின் பதிவு விவரங்களையும் இணையதளம் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளலாம். பதிவுதாரர்கள் தங்களின் பதிவு விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந் தால், அதைச் சரி செய்து கொள்ள உரிய சான்று களுடன் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தை அணுகி, பதிவு விவரங்களை சரிசெய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.