முன்பு அடுத்து Page:

ரஷ்யாவில் மார்ச் 18 அதிபர் தேர்தல்: 4ஆவது முறையாக புதின் போட்டி

 ரஷ்யாவில் மார்ச் 18 அதிபர் தேர்தல்: 4ஆவது முறையாக புதின் போட்டி

மாஸ்கோ, டிச. 16- ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஷ்ய நாடாளுமன்ற மேல வையில் இது தொடர்பான தீர்மானம் நேற்று (டிச. 15) நிறைவேற்றப்பட்டது. தீர்மான நிறைவேற்றம் ஒரு சம்பிரதா யமான வழக்கம் என்றாலும் கூட, அந்நாட்டு அதிபர் தேர்த லுக்கான பிரசாரம் அதிகாரபூர் வமாகத் தொடங்கியதற்கு இது அறிகுறியாகும். அதிபர் பதவிக்கான தேர் தலில் போட்டியிடப் போவ தாக....... மேலும்

16 டிசம்பர் 2017 16:56:04

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணை வழங்கியுள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு

 ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணை வழங்கியுள்ளது: அமெரிக்கா குற்றச்சாட்டு

வாசிங்டன், டிச. 16- அய்.நா. பாது காப்பு கவுன்சில் தடைகளை மீறி ஏமன் கிளர்ச்சியாளர்க ளுக்கு ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை ஈரான் வழங்கிய தாக அமெரிக்கா குற்றம் சாட்டி யுள்ளது. அய்.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி வாசிங்ட னில் உள்ள ராணுவ தளத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஏவுகணையின் வடிவ மைப்பிலிருந்து இது ஈரானில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த உண்மையை உலகில் அனை வரும் ஏற்றுக் கொள்வார்கள். அய்.நா........ மேலும்

16 டிசம்பர் 2017 16:56:04

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஜகார்த்தா, டிச. 16- இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவானது. 20 வினாடிகள் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத் தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் இதில் 2 பேர்....... மேலும்

16 டிசம்பர் 2017 16:56:04

மியான்மா வன்முறையில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்கியா முசுலிம்கள் கொல்லப்பட்டனர்: ஆய்வுக்குழுத் தகவல…

 மியான்மா வன்முறையில்  ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்கியா முசுலிம்கள் கொல்லப்பட்டனர்: ஆய்வுக்குழுத் தகவல்

யாங்கன், டிச.15  மியான்மாவில் ஆகஸ்டு இறுதியில் ராணுவத்தின் கடும் நடவடிக்கையால் ஒரே மாதத்தில் 6 ஆயிரத்து 700 ரோஹிங்கியா முசுலிம்கள் கொல்லப்பட்டு உள்ளனர். மியான்மா நாட்டில் கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி ரோஹிங்கியா முசுலிம்கள் மீது ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதில் ஏற்பட்ட வன் முறையை தொடர்ந்து அங்கிருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தப்பி வங்காள தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். அய்.நா. சபை மற்றும் அமெரிக்கா, ராணுவத்தின் இந் நடவடிக்கையை....... மேலும்

15 டிசம்பர் 2017 15:50:03

30ஆண்டுகள் கழித்து சொந்தநாடு திரும்பிய அகதிப் பெண்: அரசு ஆதரவு

 30ஆண்டுகள் கழித்து சொந்தநாடு திரும்பிய அகதிப் பெண்: அரசு ஆதரவு

ஆப்கானிஸ்தான், டிச.15   30 ஆண்டுகள் கழித்து சொந்த நாட் டுக்கு திரும்பியுள்ள அகதிக்கு ஆப்கான் அரசு வீடு வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் ஆப் கானிஸ்தானில் நடந்த சோவியத் படையெடுப்பின் போது அந் நாட்டை விட்டு பலர் வெளி யேறினர். அப்போது தன் உடன் பிறப்புகள் மற்றும் பாட்டியுடன் இணைந்து நடைபயணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து அகதியாக குடியேறியவர், சர்பட் குலா. 1985-ஆம் ஆண்டு வெளி வந்த....... மேலும்

15 டிசம்பர் 2017 15:50:03

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரசா மேவுக்கு தோல்வி

 இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரசா மேவுக்கு தோல்வி

லண்டன், டிச.15  அய் ரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக் கைகளை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மேற்கொண்டு வரு கிறார். சமீபத்தில் இதற்கான பிரிவினை உடன்படிக்கையை அவர் ஏற்படுத்தினார். இதற்காக 4555 பில்லியன் ஈரோ (சுமார் ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதல் ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் கோடி வரையில்) தருவதற்கு இங்கிலாந்து முன்வந்துள்ளது. இந்த நிலையில் அய்ரோப்பிய யூனியனில் இருந்து முறைப்படி இங்கிலாந்து விலகுவதற்கான மசோதா, அந்த....... மேலும்

15 டிசம்பர் 2017 15:50:03

நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்குரைஞராக இந்திய வம்சாவளி சீக்கியர் நியமனம்

 நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்குரைஞராக இந்திய வம்சாவளி சீக்கியர் நியமனம்

வாசிங்டன், டிச. 14- அமெரிக்கா வில் உள்ள  நியூஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்குரை ஞராக இந்திய வம்சாவளி சீக்கியரான குர்பிர் எஸ் கிரே வால் நியமிக்கப்பட்டு உள் ளார். இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைமை வழக்குரைஞராக பணியாற் றும் இந்திய வம்சாவளி நபர் என்ற சிறப்பிடத்தை இவர் பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2004--2007ஆ-ம் ஆண்டுகளில் அமெரிக் காவின் நியூயார்க் மாநிலத்தின் உதவி தலைமை வழக்கு....... மேலும்

14 டிசம்பர் 2017 17:03:05

யூ டியூப் மூலம் 70 கோடி ரூபாய் சம்பாதித்த 6 வயது சிறுவன்

  யூ டியூப் மூலம் 70 கோடி ரூபாய் சம்பாதித்த 6 வயது சிறுவன்

நியூயார்க், டிச. 13- இணைய தளங்களில் வெளியிடப்படும் வீடியோ மூலம் பலர் பிரபலமாகின்றனர். அவ்வாறு யூ டியூப் மூலம் பிரபலமானவர்களின் பட்டியலில் பல கோடி ரூபாய் சம்பாதித்த சிறுவன் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ரியான் பெற்றுள்ளான். ரியான் மூன்று வயது முதல் தனது விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடும்போது பெற்றோர் அதனை வீடியோ எடுத்து யூ டியூபில்  பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது........ மேலும்

13 டிசம்பர் 2017 14:49:02

வடகொரியாவுக்கு பதிலடி: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டாக போர் ஒத்திகை

 வடகொரியாவுக்கு பதிலடி: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டாக போர் ஒத்திகை

சியோல், டிச. 12- வடகொரியா வின் தலைவரான கிம் ஜாங் அன், தனது அண்டை நாடுக ளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அவ்வப் போது அணுகுண்டு, அணு ஏவு கணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹவா சோங்-15 என்னும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை அமெரிக்கா வின் அனைத்து பகுதிகளையும் தாக்கும்....... மேலும்

12 டிசம்பர் 2017 15:21:03

சிரியாவில் உள்ள ரஷ்ய படைகள் குறைப்பு

  சிரியாவில் உள்ள ரஷ்ய படைகள் குறைப்பு

லடாகியா, டிச. 12- சிரியாவில் உள்ள ரஷ்ய படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள ஹமைம் போர் விமான தளத்திலிருந்த ரஷ்ய விமானப் படை வீரர் களிடையே நிகழ்த்திய உரையில் அவர் தெரிவித்ததாவது: சிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய படையினர் எண்ணிக் கையைக் குறைக்க உத்தரவிட்டிருக்கிறேன். படிப்படியாக படைக் குறைப்பு நடைபெறும். முதல் கட்டமாக கணிசமான வீரர்கள் நாடு திரும்புவார்கள். பயங்கரவாதிகளை அழிப்பதில் உங்களது....... மேலும்

12 டிசம்பர் 2017 15:12:03

Banner
Banner