முன்பு அடுத்து Page:

ரூ.26,630 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: இந்திய நிறுவனம் உதவி

ரூ.26,630 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: இந்திய நிறுவனம் உதவி

கொழும்பு, மார்ச் 26- இந்திய நிறுவனமான அக்கார்டு குழுமம் மற்றும் ஓமன் நாட்டின் ரூ.26,630 கோடி நிதியுதவியுடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70ஆவது பிறந்த தினமும் (மார்ச் 24) அன்றைய தினமாக அமைந்தது. ரணில் கூறுகையில், "இந்தியா, ஓமன், சீனா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிதியுதவி கிடைத்து வருகிறது. இலங் கையின் அம்பாந்தோட்டம் பகுதி பன்னாட்டு....... மேலும்

26 மார்ச் 2019 16:13:04

தாய்லாந்து பொதுத்தேர்தல்: நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்குப்பதிவு

தாய்லாந்து பொதுத்தேர்தல்: நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்குப்பதிவு

பாங்காக், மார்ச் 26- தாய்லாந்தில் 1932 ஆ-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவம் அரியணை ஏறுவது தொடர்கதையாக இருந்து வரு கிறது. அப்படி கடந்த 90 ஆண்டுகளில் 12 முறை ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் சினவத்ரா, தனது அதிகாரத்தை தவறாக....... மேலும்

26 மார்ச் 2019 16:13:04

மாலி: பெண்கள், குழந்தைகள் உள்பட 134 பேர் படுகொலை

மாலி, மார்ச் 26- மேற்கு ஆப்பி ரிக்க நாடான மாலியில் டோகோன் இனக் குழுவைச் சேர்ந்த ஆயு தப் படையினர், மற்றொரு இனக் குழு மீது கடந்த சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பெண் கள், குழந்தைகள் உள்பட 134 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய மாலியின் ஒகோ சோகு கிராமத்தில் வசிக்கும் புலானி முஸ்லிம் சமூகத்தைச்....... மேலும்

26 மார்ச் 2019 16:13:04

பிரெக்ஸிட் விவகாரம்: தெரசா மே பதவி விலக நெருக்கடி

பிரிட்டன், மார்ச் 26- பிரெக்ஸிட் விவகாரத்தில் நெருக்கடி முற்றி வருவதால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக கோரி அவரது கட்சியினரே போர்க் கொடி உயர்த்தி வருவதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பிரிட்டன் ஊடக தகவல்கள் தெரிவிப்ப தாவது: அய்ரோப்பிய யூனியனிலி ருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே ....... மேலும்

26 மார்ச் 2019 16:13:04

வட கொரியா மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகள்: டிரம்ப் திரும்பப் பெற்றார்

வாசிங்டன், மார்ச் 25- வட கொரியா மீது அமெரிக்க நிதியமைச்சகம் அறிவித்த கூடுதல் பொருளாதாரத் தடைகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட்டார். வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னை அதிபர் டிரம்ப்புக்கு "பிடித்துள் ளதால்' இதுபோன்ற பொருளாதாரத் தடைகள் தேவையில்லை என்று அவர் கூறிவிட்டதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது: வட கொரியா மீது தற்போது விதிக் கப்பட்டுள்ள பொருளாதாரத்....... மேலும்

25 மார்ச் 2019 15:32:03

போதிய ஆதரவு இல்லாமல் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்யப்படாது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரசா மே திட்…

போதிய ஆதரவு இல்லாமல் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்யப்படாது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரசா மே திட்டவட்டம்

லண்டன், மார்ச் 25- போதிய ஆதரவு கிடைப்பது உறுதியாகும் வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப் போவதில்லை என்று அந்த நாட்டு நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரசா மே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட்டுக்கான இறுதி தேதியை வரும் மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென்றால், அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒரு வாரத்துக்குள் பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அய்ரோப்பிய யூனியன்....... மேலும்

25 மார்ச் 2019 15:06:03

பாகிஸ்தான் நாட்டில் மலேசிய பிரதமருக்கு மிக உயரிய விருது அளித்து கவுரவம்

பாகிஸ்தான் நாட்டில் மலேசிய பிரதமருக்கு  மிக உயரிய விருது அளித்து கவுரவம்

இசுலாமாபாத், மார்ச் 25- பாகிஸ்தான் நாட்டின் தேசியநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு மலே சிய பிரதமர் மகதிர் முகம்மதுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையேற்ற மகதிர் முகம்மது நேற்று இஸ்லாமாபாத் வந்தார். பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற தேசியநாள் விழாவில் மலேசிய பிரதமர் மகதிர் முகம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் ‘நிஷான் - இ- பாகிஸ்தான்’ எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்....... மேலும்

25 மார்ச் 2019 15:06:03

வளைகுடா பகுதியில் வான் துளை

துபாய், மார்ச் 24 அய்க்கிய அரபு எமிரேட்ஸின் அல் ஐன் மற்றும் ஓமன் நாட்டின் பைருமி எல்லை வான் பகுதியில்    திடீ ரென சுழல்போன்ற  பெரும் துளை தென்பட்டது. மேக கூட்டங்களின் நடுவே பெரிய பள்ளம் போன்று காணப் பட்டது. இப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது இதனை பலர் மற்றொரு உலகிற்கான....... மேலும்

24 மார்ச் 2019 17:17:05

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு

வாசிங்டன், மார்ச் 24, அமெரிக்க அரசு மனித உரிமை பாதுகாப்புத்துறை ஆண்டறிக்கையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் வெளிவராமல் ஊடகங்கள் தடுக்கப்பட்டது குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமெ ரிக்க அமைச்சகமே குறிப்பிட்டு கண்டிக்கும் சம்பவங்களில் தூத்துக்குடி சம்பவமும் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் தாண்டி இந்தியா முழுதும் எதிரொலித்தது. தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய இந்த....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

மனிதர்களுக்கு பதிலாக சீனாவில் காவலாளி பணியில் ரோபோ..!

மனிதர்களுக்கு பதிலாக சீனாவில் காவலாளி பணியில் ரோபோ..!

பீஜிங், மார்ச் 24 சீன தலைநகர் பெய் ஜிங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில், காவலாளி பணியில் முதல்முறையாக அதிநவீன ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள் இரவு நேரத்தில் காவலாளி பணியில் ஈடுபடுவதை குறைக்கும் வகை யில், இந்த ரோபோ பணியமர்த்தப் பட்டுள்ளது. சீன விண்வெளி துறையின் கீழ் இயங்கும் பெய்ஜிங் விண்வெளி கட்டுப்பாட்டு நிறுவனத் தின் மூலம்....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார் ஷேக் ஹசீனா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, ஜன. 9- வங்கதேசத்தின் பிரதம ராக அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை பதவியேற்றார்.

அவருடன், 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டது.

வங்கதேசத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற 11-ஆவது பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஆளும் அவாமி லீக் கூட்டணி 288 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் அந்தக் கூட்ட ணிக்கு 82 சதவீத வாக்குகள் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து, வங்கதேச நாடாளுமன்றத் தலைவராக ஷேக் ஹசீனா கடந்த வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தலை நகர் டாக்காவில் திங்கள்கிழமை நடை பெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், வங்க தேச அதிபர் முகமது அப்துல் ஹமீது, ஷேக் ஹசீனாவுக்குப் பதவிப் பிரமா ணம் செய்து வைத்தார்.

அவருடன் 24 அமைச்சர்களும், 22 இணையமைச்சர்களும் பொறுப்பேற் றுக் கொண்டனர்.

46 பேர் அடங்கிய அமைச்சரவையில், 31 பேர் புதுமுகங்கள் ஆவர். பெரும் பாலான மூத்த தலைவர்களுக்கு அமைச் சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. மேலும், அவாமி லீக் கட்சியுடன் கூட் டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சி களுக்கு அமைச்சரவையில் பிரதமர் ஷேக் ஹசீனா இடமளிக்காதது, அக்கட்சிக ளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள் ளது. அமைச்சரவை முழுவதும் அவாமி லீக் கட்சியின் உறுப்பினர்களே இடம் பெற்றுள்ளனர்.

முக்கியத் துறைகளான பாதுகாப்பு போன்றவற்றை பிரதமர் ஷேக் ஹசீனா தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். முஸ்தபா கமல் நிதியமைச்சராகவும், அப்துல் மோமேன் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள னர்.

ஏற்கெனவே, கடந்த 1996, 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடா ளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று, ஷேக் ஹசீனா பிரதமரானார். தற்போ தைய வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா பொறுப்பேற் றுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவாமி லீக் கூட் டணி 263 இடங்களைப் பெற்றிருந்ததே சாதனையாகக் கருதப்பட்டு வந்த நிலை யில், தற்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் 288 இடங்களை வென்று அந் தச் சாதனையை அவாமி லீக் கூட்டணி முறியடித்தது.

எதிர்க்கட்சிகளான ஜாட்டியா ஒக்கியா முன்னணி - தேசிய அய்க்கிய முன்னணிக்கு (என்யூஎஃப்), ஏழு இடங்களே கிடைத்தன. மொத்தம் பதி வான வாக்குகளில் இந்தக் கட்சிகளுக்கு 15 சதவீத வாக்குகளே கிடைத்தன. இதர கட்சிகள் மூன்று இடங்களில் வென்றன.

ஒரு தொகுதியில் மட்டும் வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டது. மற்றொரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந் ததன் காரணமாக தேர்தல் முடிவு அறி விக்கப்படவில்லை.

இத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற வன்முறைகளில் 17 பேர் உயிரிழந்தனர். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், எனவே மறுதேர் தல் நடத்த உத்தரவிட வேண்டும் என வும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணை யத்தை வலியுறுத்தின. ஆனால், இந்தக் கோரிக்கையை வங்கதேச தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner