முன்பு அடுத்து Page:

உலகின் மிக வயதான தாத்தா காலமானார்

உலகின் மிக வயதான தாத்தா காலமானார்

டோக்கியோ, ஜன. 21- உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்சு நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகி றார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து....... மேலும்

21 ஜனவரி 2019 15:51:03

பிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்

பிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்

பாரிசு, ஜன. 21- பிரான்சில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 10-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட அரசின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 10-ஆவது வாரமாக சனிக் கிழமையும் தொடர்ந்தது. போராட்டத்தின் ஒரு பகுதி யாக, தலைநகர் பாரீசில் நூற் றுக்கணக்கானவர்கள் ஆர்ப் பாட்ட....... மேலும்

21 ஜனவரி 2019 15:49:03

பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

இஸ்லாமாபாத், ஜன. 21- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதி ஆவார். புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள அதி பர் மாளிகையில் நேற்று நடந்தது. புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கான் கோசாவுக்கு அதிபர்....... மேலும்

21 ஜனவரி 2019 15:48:03

அதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப் ஆர்வம்

அதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப் ஆர்வம்

வாசிங்டன், ஜன. 21- அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழு வில் இந்திய அமெரிக்கரான பிரேம் பரமேஸ்வரனை (50) நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர் வம் காட்டி வருவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில்,  ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்கள் குறித்த அதிபர் ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக எலைன் எல். சாவோவை நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த குழுவின் உறுப்பினர்களாக....... மேலும்

21 ஜனவரி 2019 15:46:03

டிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிரம்ப், கிம் ஜாங் அன் மீண்டும் சந்திப்பு - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாசிங்டன், ஜன. 20- இரு துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம் பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட் டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப் பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை....... மேலும்

20 ஜனவரி 2019 18:34:06

இலங்கையின் மன்னார் நகரில்

இலங்கையின் மன்னார் நகரில்

தமிழர்களின் எலும்புக்கூடுகள் குவியல் குவியலாக கண்டெடுப்பு கொழும்பு, ஜன. 20- இலங்கை ராணு வத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடந்த 2009ஆ-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப் பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராள மான பேரை ராணுவம் கொன்று குவித் ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந் தது. மன்னார்....... மேலும்

20 ஜனவரி 2019 18:29:06

இந்திய அமெரிக்கருக்கு "ரோசா பார்க்ஸ்" விருது

வாசிங்டன், ஜன. 20- அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த  கொள்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு "ரோசா பார்க்ஸ்' விருது வழங்கி அந்நாட்டு நாளிதழ் கவுர வித்துள்ளது. அமெரிக்காவில் இன்டியானாபோலிஸ் பகுதியைச் சேர்ந்த குரிந்தர் சிங், தொழில்முனைவோராகவும், சீக்கிய அரசியல் குழுவின் தலைவராகவும் உள்ளார். அவர் கடந்த 2007-ஆம் ஆண்டு விமானத்தில் பயணிக்க சென்றபோது, அவரது தலைப்பாகையை கழட்டிவிட்டு விமானத்தில் பயணிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்........ மேலும்

20 ஜனவரி 2019 18:29:06

வர்த்தகப் பேச்சுவார்த்தை: ஜன. 30-இல் சீன துணைப் பிரதமர் அமெரிக்கா பயணம்

பீஜிங், ஜன. 19- வர்த்தகப் போர் பதற்றத் தைத் தணிப்பதற்கான அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக சீன துணைப் பிரதமர் லியு ஹே தலை மையிலான குழு வரும் 30-ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளது. இதுகுறித்து சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அடுத்தக்கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் இந்த மாதம் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதற்காக, சீன துணைப் பிரதமர் லியு....... மேலும்

19 ஜனவரி 2019 16:30:04

ஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி

ஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி

லண்டன், ஜன. 19- பிரிட்டன் நாடாளுமன் றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப் பந்த மசோதாவை வரும் 21-ஆம் தேதி தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரசா மே உறுதியளித்துள்ளார். மேலும், பிரெக்ஸிட் நடவடிக்கை களை சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். பிரெக்ஸிட் தொடர்பாக அய்ரோப் பிய யூனியனுடன் அவர் மேற்கொண்ட ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்த பிறகும், அவர் மீது....... மேலும்

19 ஜனவரி 2019 16:26:04

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு

காபூல், ஜன. 19- ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான படகாஷனில் தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத் தில் நேற்று தொழிலாளர்கள், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டின் இரண்டாவது சுரங்க விபத்து....... மேலும்

19 ஜனவரி 2019 16:26:04

துபாயில் 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் ஆட்சியாளர்கள் அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாய், ஜன.11 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமய மாக்கப் படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலா ளர்களின் வேலை வாய்ப்பு களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

வளைகுடா அரபு நாடு களில் வேலைகள் தேசியமய மாக்கப்படும் விகிதம் அதி கரிப்பு  இந்திய தொழிலாளர் களுக்கு  நேரடி அச்சுறுத்த லாக உள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவற்றை தொடர்ந்தது  2019 ஆம் ஆண்டில் மேலும் வேலைவாய்ப்புகள் தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் எமிரேட் கூறியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளை தேசியமயமாக்குவது துபாயில் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமர்  ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இன்று நான் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். அதில் 2018 ஆம் ஆண்டின் விளைவு மற்றும் 2019க்கான திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளின் உள்ளூர்மயமாக்கல் 200 சதவிகிதம் அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் அதனை இரட்டிப்பாக்க நாங்கள் முயற்சி செய்வோம் என ட்விட்டரில் கூறி உள்ளார்.

அய்க்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 லட்சம்  இந்தியர்கள்  வாழ்க்கை மற்றும் வேலை செய்து வருகின்றனர். துபாயின் ஆட்சி யாளர்கள் 1999ஆம் ஆண்டில்  வேலைவாய்ப்பை தேசியமயமாக்கல்  ஆரம்பித் திருந்த போதிலும், அது பல ஆண்டுகளாக அது குறைந்தபட்சமாக இருந்தது.

இருப்பினும் 2008 நிதியியல் நெருக்கடி, பொருளாதாரத்தை பரவலாக்குவதற்கும், தனியார் துறைகளில் வேலைகளை தேர்ந் தெடுப்பதற்கும் அதிக விகிதம் வேலைவாய்ப்பு தேசியமயமாக்கப் பட்டது. வளைகுடா அரபு குடிமக்கள் குறைந்த  ஊதியங்கள் மற்றும் கடுமையான வேலை போன்ற காரணங்களால் தனியார் துறைகளில் சேர விரும்பவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner