Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

அரசியல்

இலங்கை ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகாவை விடுதலை செய்ய அமைச்சரவை ஒப்புதலாம்

கொழும்பு, மே 18- சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை விடு தலை செய்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தத் தகவலை அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்தார்.

பொன்சேகா எப்போது விடுவிக்கப் படுவார், அவரது மனைவி அனோ மா கூறியதைப் போல விடுதலை நிபந்தனையற்றதாக' இருக்குமா என்று கேட்டபோது, அவை தொடர்பாக இன்னும் முடி வெடுக்கப் படவில்லை. இப்போ தைக்கு அமைச்சரவையின் ஒப்பு தலை மட்டும் அதிபர் பெற்றிருக் கிறார்'' என்றார் ஜெயசேகர.

பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக அனோமாவை அதிபர் ராஜபக்சே புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரன் அலஸ் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. பொன்சேகாவை விடுவிப்பதற்காக அரசு தரப்பிலான நிபந்தனைகள் பற்றி அப்போது எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அலஸ் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய பொன்சேகா, ராஜபக்சே உள்ளிட் டோர் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளைக் கூறினார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக் சேவை எதிர்த்து நின்று தோல்வி யடைந்தார்.

இதையடுத்து, அரசுக்கு எதிராகச் செயல்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2010, பிப்ரவரி 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ராணுவ மற்றும் மக்கள் நீதிமன்றங்களில் இது தொடர்பாக நடந்த வழக்குகளில் அவருக்கு ஒட்டுமொத்தமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பொன்சேகாவோ, அவரது மனைவி, மகள் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினரோ கோரினால் கருணை அடிப்படையில் அவரை விடுவிப்பது பற்றிப் பரிசீலிக்கப் படும் என்று பல்வேறு தருணங் களில் ராஜபக்சே அறிவித்தார்.

ஆனால், கருணை வழங்குவது தொடர்பான பேச்சுகள் எழும் போதெல்லாம், பொன்சேகாவும் அவரது குடும்பத்தினரும், கருணை கோரும் வகையில் எந்தக் குற்றமும் செய்யவில்லை'' என்று கூறி அதி பரின் அழைப்பை நிராகரித்து வந்தனர். பொன்சேகா அமெரிக் காவின் குடியுரிமை பெற்றவர் என்பதால், அவரை விடுவிக்க வேண் டும் என்று அந்த நாடு இலங்கைக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மே 18ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) அமெரிக்காவில் அந் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் சந்திக்க இருக்கும் நிலையில், யாரும் கருணை கோரா மலேயே பொன்சேகாவை விடுவிக் கும் முடிவை அரசு எடுத்திருப் பதற்கும் இதுவே காரணம் என்றும் நம்பப்படுகிறது.

சீக்கியர்கள் தலைப்பாகையுடன் காவல் பணியாற்ற அனுமதி

வாஷிங்டன், மே 18-  இனி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும் தலைப்பாகை, மீசை, தாடியுடன் பணியாற்றும் காவல் துறையினரைக் காண முடியும். சீக்கியர் களின் மத அடையாளங்களான இவற் றுடன் பணியாற்ற வாஷிங்டன் காவல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை வாஷிங்டன் காவல்துறை தலைவர் காத்தே லீனியர் தெரிவித்தார். சீக்கிய மதத்தைச் சேர்ந்த 4,000 வீரர்கள் பயிற்சிக்கு சென் றுள்ளனர் என்றும், ஆகஸ்ட் மாதத்தி லிருந்து படிப்படியாக இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.

தலைப்பாகை அணிவது, தாடி, மீசை வைப்பது மேலும் குறுவாள் எனப்படும் சிறிய கத்தியை தலைப்பாகைக்குள் வைத்திருப்பது ஆகியன சீக்கியர்களின் மத நம்பிக்கையாகும்.

பொதுவாக மேற் கத்திய நாடுகளில் தாடி, மீசை மற்றும் தலைப்பாகையுடன் சீக்கியர்கள் பணி யாற்றுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. பிறகு அவர்களின் மத உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களை பணியில் சேர்த்துக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை பிற நாடுகள் மேற் கொண்டுள்ளன.

அமெரிக்காவிலும் பிற மாகாணங்களில் காவல்துறையில் சீக்கியர்கள் மத அடையாளங்களுடன் பணி புரிய அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஏற்கெனவே அமெரிக்க ராணுவத்தி லும் சீக்கியர்கள் உள்ளனர். அமெரிக்க வாழ் சீக்கியர்கள் காவல்துறையில் சேர்ந்த பிறகு முழு கடமை உணர்வோடு நாட்டுக் காக பணியாற்றுவர். அதற்காக அவர் களது மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்தகைய விதி விலக்கு அளிக்கப்பட் டுள்ளதாக லீனியர் தெரிவித்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க சீக்கியர்கள், சாலை விதிமீறல் கட்டுப்பாட்டு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டனர்.

இப்போது முழு நேர காவல் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட் டுள்ளதாக அமெரிக்க வாழ் சீக்கியர்களுக் கான சட்ட பாதுகாப்பு மற்றும் கல்வி நிதியத்தின் செயல் இயக்குநர் ஜஸ்ஜித் சிங் தெரிவித்தார்.

தலைநகர் வாஷிங்டனில் தலைப்பாகை அணிந்து பணியாற்ற சீக்கிய காவல்துறைக்கு அனுமதி அளித்த போதிலும் நியூயார்க் மாகாண காவல் துறையில் இன்னமும் அனுமதி அளிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கனடா மற்றும் பிரிட்டனில் காவல்துறையில் பணியாற்ற சீக்கிய சமூகத் தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏதென்ஸ் பிரதமர்

 

ஏதென்ஸ், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய பிரதமர் பானாஜியோடிஸ் பிக்ராமெனோஸ் (இடது) உடன் உரையாடிய கிரீஸ் அதிபர் காரோலோஸ் பாபோலிஸ்.

விஞ்ஞானி சிஷ்டியை அழைத்து செல்ல பாகிஸ்தான் அனுப்பிய விமானம்

இஸ்லாமாபாத், மே 16- ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ள விஞ்ஞானி சிஷ்டியை அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் சிறப்பு விமானத்தை டில் லிக்கு அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த மருத்துவர் கலீல் சிஸ்டி (வயது 82). இவர், 1991 ஆம் ஆண்டு, ராஜஸ் தான் மாநிலம் அஜ்மீரில் இருந்த தன் தாயைப் பார்க்க வந்தார். அப் போது, அவரது உறவின ருடன் ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்தது. இந்த வழக்கில், சிஸ்டிக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. இதை அடுத்து, அவர் அஜ்மீர் சிறையில் அடைக் கப்பட்டார்.

கடந்த 20 ஆண்டு களாக சிறையில் அடைக் கப்பட்டிருந்த சிஸ்டி யின் வயதைக் கருத்தில் கொண்டு, மனிதாபி மான அடிப்படையில், உச்சநீதிமன்றம், சமீபத் தில் அவருக்கு ஜாமீன் அளித்தது. சில நிபந்த னைகளின் அடிப்படை யில், பாகிஸ்தான் செல்ல, உச்சநீதிமன்றம், கலீஸ் சிஷ்டிக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், நேற்று, சிஸ்டி பாகிஸ்தான் புறப் பட்டார். இவரை அழைத் துச் செல்ல, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர் தாரி, சிறப்பு விமானத்தை டில்லிக்கு அனுப்பி வைத் தார். இந்த விமானத்தில் இஸ்லாமாபாத் வந்த சிஸ்டியை, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் வரவேற்றார்.

சரப்ஜித்தை விடுவிக்க கடிதம்

பாகிஸ்தான் சிறை யில் வாடும் சரப்ஜித் சிங்கை விடுவிக்க வேண் டும் என, அந்நாட்டு அதிபர் சர்தாரிக்கு, இந் திய பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்க்கண் டேய கட்ஜு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, சர்தாரிக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்தில், கொலை வழக்கில் கைதாகி, இந் திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த, 82 வய தான பாக்., விஞ்ஞானி கலீல் சிஷ்டிக்கு, சமீபத் தில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதோடு, அவர் பாகிஸ்தான் செல் லவும் அனுமதித்தது.

அதே மனிதாபிமான அடிப்படையில், பாகிஸ் தான் சிறையில் வாடும், இந்தியர் சரப்ஜித் சிங்கை யும் விடுவிக்க வேண்டும்' எனக் கோரியுள்ளார். இந்த கடிதத்தை, சிஷ் டியின் மகள் அம்னாவி டம், கட்ஜு ஒப்படைத் தார். அவர், கடிதத்தை கராச்சியில் உள்ள பாகிஸ் தான் நிர்வாகத்தினரிடம் வழங்குவார்.

இறந்ததாக கருதியவர் உயிருடன் எழுந்தார்

லண்டன், மே 16- இறந்து விட்டதாக கருதி கல்லறை யில் புதைக்க இருந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் இறுதி சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.

எகிப்து நாட்டின் லக்சர் பகுதியை சேர்ந்தவர் அல் நுப்தி, 28. இவருக்கு சமீபத் தில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையானார். பல மணி நேரம் கழித்தும் இவர் எழுந்திருக்காததால், இவர் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் அனைவரும் இவரை கல்லறைக்கு எடுத்து சென்றனர்.

முன்னதாக, இவரது உடலை குளிப்பாட்டிய போது இவர் எழுந்திருக்காத தால், இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக மருத்துவரை அழைத்து வந்தனர்.

இறப்பு சான்றிதழ் கொடுக்க வந்த பெண் மருத்துவர், அல் நுப்தியின் உடலை தொட்டு பார்த்த போது, அவரது உடல் கதகதப்புடன் இருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத் தில், அல் நுப்தி உயிருடன் எழுந்தார். துக்கத்தில் மூழ் கியிருந்த உறவினர்கள், அல் நுப்தி உயிரோடு எழுந்தது குறித்து மகிழ்ந்தனர்.

 

நேபாளத்தை 11 மாநிலமாக பிரிக்க முடிவு

 

காத்மாண்டு, மே 16-நேபாளத்தை 11 மாநிலங் களாக பிரித்து கூட்டாட்சி முறையில் நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேரடி தேர்தல் மூலம் அதி பர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

நேபாளத்தில் நீண்ட காலமாக மன்னராட்சி நடந்து வந்தது. அங்கு பெயரளவுக்கு மக்க ளாட்சி இருந்தது. மன்னர் குடும்பத்தின் அதிகாரத் துக்கு எதிராக மாவோ யிஸ்டுகள் போராட்டம் நடத்தினர். அதற்கு மக் கள் ஆதரவும் கிடைத்தது.

இதையடுத்து, மன்னர் குடும்பம் அதிகாரத்தில் இருந்து விலகிக் கொண் டது. அங்கு அரசியல் சட்ட சீர்திருத்தங்கள் செய்யும் நிபந்தனையுடன் பிரதமர் பாபுராம் பட் டாரை தலைமையில் அரசு அமைந்தது. இந்த மாதம் 27ஆம் தேதிக்குள் சீர்திருத்தங்கள் செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டது.

எனினும், அதற்கான பணிகள் தொடங்காத தால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் பாபுராம், அனைத்து கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட தேசிய அரசை சமீபத்தில் ஏற்படுத்தினார். அதில் 2 துணை பிரதமர்கள் சேர்க் கப்பட்டனர்.

நேபாள காங்கிரஸ், யுசிபிஎன் மாவோயிஸ்ட், சிபிஎன் யுஎம்எல் ஆகிய முக்கிய பெரிய கட்சிகளு டன் மாதேசி முன்னணி உட்பட 5 சிறிய கட்சிக ளும் அரசில் அங்கம் வகிக்கின்றன.

இந்த நிலையில், திட் டமிட்டபடி 27ஆம் தேதி காலக்கெடுக்குள் அரசி யல் சட்ட சீர்திருத்த பணி களை தொடங்க தேசிய அரசு முடிவு செய்தது. அதன்படி, அரசியல் கட் சிகள் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் நேற்று முக் கிய முடிவுகள் அறிவிக் கப்பட்டன.

நேபாளத்தை 11 மாநி லங்களாக பிரிப்பதுடன் கூட்டாட்சி தத்துவப்படி அரசு நடத்துவது என கட்சிகள் ஒருமித்த கருத் துடன் முடிவெடுத்துள் ளன. நேரடி தேர்தல் மூலம் அதிபரை தேர்ந்தெடுக்க வும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், 11 மாநிலங் களுக்கான எல்லை வரை யறை குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதிபருக்கு குறிப்பிட்ட அதிகாரங்களே இருக்கும். நாடாளுமன்ற தேர்தல் மூலம் தேர்வாகும் பிரத மரிடம் கூடுதல் அதிகா ரம் இருக்கும்.

நாட்டின் முதல் குடி மகனாக அதிபரும், அர சின் தலைவராக பிரதம ரும் இருப்பார்கள். நாடா ளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது.

இந்த முடிவுகளால் 27ஆம் தேதிக்குள் நேபா ளத்தின் புதிய அரசியல் சட்டம் அதிகாரப்பூர்வ மாக வெளியிடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்