முன்பு அடுத்து Page:

பிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்

பிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்

பாரிசு,  ஜன. 14- பிரான்சில் அர சுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 9-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது.  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 9-ஆவது வாரமாக சனிக் கிழமையும் நடைபெற்றது. ....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

22ஆவது நாளாக அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம்

வாசிங்டன், ஜன. 14- அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அந்த நாட்டின் வர லாற்றிலேயே மிக அதிக நாள் களுக்கு நீடித்த அரசுத் துறைகள் முடக்கம் இது என்பது குறிப் பிடத்தக்கது. மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.45,125....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் விமானங்கள், வாகன போக்குவரத்து பாதிப்பு

நியூயார்க், ஜன. 14- அமெரிக்கா வில் கடும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இது அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் 1,609 கி.மீ. தூரம் தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாசிங்டன், டென் வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது: 19 தொழிலாளர்கள் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது: 19 தொழிலாளர்கள் பலி

பீஜிங், ஜன. 14- சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலா ளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடி யாமல் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர். 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

உலக வங்கி தலைவர் பதவி நிக்கி ஹாலே - இவாங்கோ டிரம்ப் முன்னிலை

உலக வங்கி தலைவர் பதவி நிக்கி ஹாலே - இவாங்கோ டிரம்ப் முன்னிலை

வாசிங்டன், ஜன. 14- உலக வங்கி யின் தலைவர் ஜிம் யோங்கிம், தனது பதவிலிருந்து வில குவதாக கடந்த வாரம் அறிவித்தார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும்போதே அவர் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். வருகிற 31-ஆம் தேதி அவர் தனது பதவில் இருந்து விலகு வார் என தெரிகிறது. இந்நிலையில் உலக வங்கி....... மேலும்

14 ஜனவரி 2019 17:09:05

360 டிகிரி கோணத்தில் நிலவின் இருண்ட பகுதி: படமெடுத்து அனுப்பியது சீன ஆய்வுக் கலம்

பீஜிஸ், ஜன. 13- பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினு டைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பி யுள்ளது. பிரத்யேக செயற்கைக்கோள் வழியாக இந்தப் படம் அனுப்பப்பட்டதையடுத்து, சாங் இ-4 ஆய்வுத் திட்டம் முழு வெற்றியடைந்துள்ளதாக சீனா....... மேலும்

13 ஜனவரி 2019 15:47:03

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

தைபே, ஜன. 13- தைவானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெருத்த பின்னடவை சந்தித்தது. தைவானை பொறுத்தமட்டில் உள்ளூர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் போது, தலைமை பொறுப் பில் இருப்பவர்கள் பதவி விலகுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் வில்லியம் லை தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தார். அதனை....... மேலும்

13 ஜனவரி 2019 15:47:03

காலியானது டெக்சாஸ் காப்பகம் கடைசி அகதி குழந்தையும் அனுப்பி வைப்பு

டெக்சாஸ், ஜன. 13- அமெரிக்கா வில் எல்லை வழியாகச் சட்ட விரோதமாக குடியேறும் அகதி களைக் கட்டுப்படுத்தும் வகை யில் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் பிறப்பித்த உத்தரவின் படி, மெக்சிகோ எல்லை வழி யாக வரும் அகதிகளைச் சட்ட விரோத குடியேற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர் களின்....... மேலும்

13 ஜனவரி 2019 15:47:03

காங்கோ குடியரசு: அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி

காங்கோ, ஜன. 12- காங்கோ குடியரசில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் பெலிக்ஸ் சிசேகெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கோ குடியரசில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சியான ஜனநாயக மற்றும் சமூக முன் னேற்றக் கட்சியின் தலைவர் பெலிக்ஸ் சிசேகெடி 70 லட்சத் துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் 35 சதவீத....... மேலும்

12 ஜனவரி 2019 16:29:04

வங்கதேசத்தில் தொடரும் ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்: ஒருவர் பலி

வங்கதேசத்தில் தொடரும் ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்: ஒருவர் பலி

டாக்கா, ஜன. 12- வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கேட்டு ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் 4 நாள்களாக நடத்தி வரும் போராட்டம், புதன்கிழமை மேலும் தீவிரமடைந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயத்த ஆடைத் தொழிலாளர் கள் நடத்தி வரும் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. தலைநகர் டாக்காவை யொட்டி சாலைகளில் தடுப்பு களை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டு வந்த சுமார் 10,000 பேர், காவல்துறையின ரால்....... மேலும்

12 ஜனவரி 2019 16:29:04

5ஆவது பெரிய அணுசக்தி நாடாக பாகிஸ்தான் உருவாகும்? - அறிக்கையில் தகவல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 8- அமெரிக்க நாட்டில் ‘பாகிஸ்தானிய அணு ஆயுதங்கள் - 2018’ என்ற தலைப்பில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், ராபர்ட் நோரீஸ், ஜூலியா டயாமண்ட் ஆகிய 3 பேர் ஒரு அறிக்கை தயாரித்து உள்ளனர். இவர்களில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குனர் ஆவார்.

அவர்கள் தயாரித்து உள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் தற்போது 140 முதல் 150 அணுகுண்டுகள் வரை இருக்கலாம். இதே வேகத்தில் அந்த நாடு போய்க்கொண்டு இருந்தால், 2025ஆம் ஆண்டுவாக்கில் அந்த நாட்டிடம் 220 முதல் 250 அணுகுண்டுகள் வரை சேர்ந்துவிடும். இது நடந்துவிட்டால், பாகிஸ்தான் உலகின் 5-ஆவது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும்” என கூறி உள்ளனர்.

பாகிஸ்தான் எத்தனை அணுசக்தி திறன் கொண்ட லாஞ்சர்களை நிறுத்துகிறது, இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாடு அணுகுண்டுகள் கையிருப்பை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இங்கிலாந்து துறைமுகத்தில் உள்ள

இந்திய கப்பல் ‘மாளவியா’ விற்பனை

லண்டன், செப். 8- மும்பையைச் சேர்ந்த ‘ஜிஓஎல் ஆப்ஷோர்’ என்ற நிறுவனத்திடம் மாளவியா 20, மாளவியா 7 என்ற இரு சரக்கு கப்பல்கள் இருந்தன. ‘மாளவியா 20’ இங்கிலாந் தின் யார்மவுத் துறைமுகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் நிற்கிறது. இக்கப்பலின் கேப்டன் நிகேஷ் ரஸ்தோகி மற்றும் 3 ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த கப்பலை விற்பனை செய்வதற்கான அனுமதி உயர் நீதிமன்றத்தில் கப்பல் நிறு வனம் கடந்த மாதம் பெற்றது.

இதற்கான டெண்டர் வரும் 12ஆம் தேதி விடப்படுகிறது. இது அந்த கப்பலின் கேப்டன் ரஸ்தோகி மற்றும் ஊழியர்க ளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதுகுறித்து ரஸ்தோகி அளித்த பேட்டியில், ‘‘இந்த கப்பலின் விற்பனை நடவடிக்கைகள் முடிவடைந்தால்தான் நாங்கள் மும்பை திரும்பி எங்கள் குடும்பத்தினரை சந்திக்க முடியும். இது மிகப் பெரிய நிம்மதி’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner