முன்பு அடுத்து Page:

அய்.நா. தூதர் பதவிக்கான விண்ணப்பம்: திரும்பப் பெற்றார் கெதர் நாவெர்ட்

அய்.நா. தூதர் பதவிக்கான விண்ணப்பம்:  திரும்பப் பெற்றார் கெதர் நாவெர்ட்

வாசிங்டன், பிப். 19- அமெரிக் காவுக்கான அய்.நா. தூதர் பதவிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப் பட்ட வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பா ளர் கெதர் நாவெர்ட், அந்தப் பதவிக்கான தனது விண்ணப் பத்தை திரும்பப் பெற்றுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த அய்.நா. தூதர் பதவியை வகிப் பதற்குப் போதுமான தகுதி நாவெர்ட்டுக்கு இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலை யில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக் கது. தற்போது அமெரிக்காவுக்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:21:03

அய்.எஸ். கைதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள அய்ரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்

வாசிங்டன், பிப். 19- அய்ரோப்பிய நாடுகளிலிருந்து சென்று சிரியா வில் பிடிபட்ட 800-க்கும் மேற் பட்ட இஸ்லாமிய தேச (அய்.எஸ்) பயங்கரவாதிகளை திரும் பப் பெற்றுக் கொள்ளும்படி அந்த நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சுட்டுரை (டுவிட் டர்) வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளிலிருந்து சிரியா சென்று போரிட்டு, அமெரிக்க கூட்டுப் படையினரிடம் பிடிபட்டுள்ள அய்.எஸ். பயங்கரவாதிகளை, அந்த நாடுகள்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:20:03

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிடம் அமெரிக்கா கோரிக்கை

வாசிங்டன், பிப். 19- அணு ஆயுத சோதனைகள் மூலம் ஜப்பான் உள்பட பன்னாட்டு நாடுக ளுக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்தி வந்தது வடகொரியா. இதற்கு தீர்வுகாணும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் வட கொரியாவுடனான அமைதி....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:17:03

ஆலோசனைக்காக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைப்பு

ஆலோசனைக்காக இந்தியாவுக்கான  பாகிஸ்தான் தூதர் திரும்ப அழைப்பு

இஸ்லாமாபாத், பிப். 19- இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்தி ருக்கிறது பாகிஸ்தான். புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் திரும்ப அழைக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு, அவசர ஆலோ சனை நடத்துவது என்ற பெய ரில் இந்தியாவுக்கான பாகிஸ் தான் தூதர் திரும்ப அழைக் கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் காலை புதுடில்லியில் இருந்து இந்தியாவுக்கான....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:16:03

நிலவில் மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்

நிலவில் மீண்டும்  விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்

வாசிங்டன், பிப்.19 சந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் அணுக நாசா வேண்டு கோள் விடுத்து உள்ளது. சந்திரனின்  சுற்று வட்ட பாதையில்  ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன. இதற்கு இரு நாடுகளும் ஒப்புதலும் தெரிவித்து உள்ளன.  இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இதற்கு ஆழ்ந்த விண்வெளி நுழைவாயில்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:13:03

பாகிஸ்தான் மருத்துவமனையில் நவாஸ் செரீப் அனுமதி

பாகிஸ்தான் மருத்துவமனையில்  நவாஸ்  செரீப் அனுமதி

இசுலாமாபாத், பிப்.17 ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் (69), சிகிச்சைக்காக லாகூரில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அல்-அஜீசா இரும்பாலை ஊழல் வழக்கில்,  நவாசுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நவாசுக்கு இருதய நோய் பாதிப்பு அதிகமானதையடுத்து அவர், அந்த சிறையிலிருந்து உயர் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:41:01

அமெரிக்க அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை: வெனிசுலா அதிபர் ஒப்புதல்

அமெரிக்க அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை: வெனிசுலா அதிபர் ஒப்புதல்

நியூயார்க், பிப்.17 வெனிசுலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் குறித்து அமெரிக்க அரசுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதை அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடூரோ ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: வெனிசூலாவில் அரசியல் பதற்றம் ஏற்பட்ட பிறகு,  வெனிசுலா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் அரீஸா இரண்டு முறை அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். நியூயார்க்கில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையின்போது, வெனிசுலாவுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் எலியட் அப்ராம்ஸை வெனிசுலா....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:39:01

போரால் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் பலி பன்னாட்டு அமைப்பு தகவல்

நியூயார்க், பிப்.17 போரால் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்று சேவ் தி சில்ரன் என்ற பன்னாட்டு அமைப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 10 நாடுகளில் நடைபெற்ற போரின் காரணமாக 5,50,000 கைக்குழந்தைகள் உயிரிழந்தனர். சண்டையின்போது மட்டுமின்றி, போருக்கு பிறகு ஏற்பட்ட பஞ்சம், மருத்துவம் கிடைக் காதது, சுகாதாரமின்மை உள்ளிட்ட பல காரணங்களால்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:35:01

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாசிங்டன், பிப்.17 பயங்கர வாதிகளுக்கு ஆதரவளிப்பதை யும், அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டு மென பாகிஸ்தானை அமெ ரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு -காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்திய பயங்கரவாதத் தாக்குத லில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் பல வீரர்கள்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:29:01

வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் சீனா உள்ளது: அதிபர் டிரம்ப் பேட்டி

வாசிங்டன், பிப். 16- அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய நிலையில் சீனா உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டே ஆக வேண்டிய நிலையில் தற்போது சீனா உள்ளது. எனவே, விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படும். ஆனால், அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே அமெரிக்காவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்........ மேலும்

16 பிப்ரவரி 2019 15:36:03

அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கிச் சூடு: இந்தியர் பலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், செப். 9- அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் பவுன் டெயன் சதுக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் பிரித்வி ராஜ் கான்டோ (25), ரிச்சர்ட் நியூகாமர் (64), லூயிஸ் பெலிப் கால்டெரான் (48) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் கொலை யாளியுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அதில் கொலையாளி உயிரிழந்தான். அவனது பெயர் ஓமர் சான்டா பெரேஷ் (29) என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரில் பிரித்விராஜ் இந்தியர் என தெரிய வந்துள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலியை சேர்ந்தவர். வேலூரில் உள்ள வி.அய்.டி.யில் பி.டெக் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. படித்தார். சின்சினாட்டியில் துப்பாக்கி சூடு நடந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார்.

இவரது தந்தை கோபிநாத் விஜயவாடாவில் ஆந்திர மாநில வீட்டு வசதி வாரியத்தில் துணை செயற்பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் பெயர் சுதாராணி. குண்டூர் மாவட்டம் தெனாலியில் வசிக்கின்றனர். மனோக்னா என்ற தங்கை உள்ளார். இவர் கே.எல்.பல்கலைக் கழகத்தில் பி.டெக் 3-ஆவது ஆண்டு படித்து வருகிறார். பிரித்விராஜ் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக அவர் சில மாதங்களில் இந்தியா திரும்ப இருந்தார்.

பிணக்குவியல்: ஒரே இடத்தில் புதைத்த 166 உடல்கள் கண்டெடுப்பு

மெக்சிகோ சிட்டி, செப். 9- ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற் பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது.  இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர்.

இதுதவிர, அபின் செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங் குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் சமீபகாலமாக சடலங்கள் வரிசையாக கண்டெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், மெக்சிகோவின் கிழக்கு பகுதியில் உள்ள வெராகுருஸ் மாநிலத்தில் ஒரே இடத்தில் 32 பள்ளங்களில் புதைக்கப்பட்டிருந்த 166 சடலங்கள் சமீபத்தில் கண்டெடுக் கப்பட்டதாக அம்மாநில அரசின் தலைமை வழக்குறிஞர் நேற்று தெரிவித்துள்ளார்.  இதே பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 250 மண்டை ஓடுகள் கிடைத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner