இந்தியா, சீனாவுக்கான மானியத்தை நிறுத்துவோம்: டிரம்ப்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிகாகோ, செப்.10 இந்தியா, சீனா போன்ற வளரும் நாடு களுக்கான மானியத்தை அமெரிக்கா நிறுத்த விரும்புகிறது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

சீனா மாபெரும் பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் வகையில், உலக வர்த்தக அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவின் வடக்கு டகோடா மாகாணத்துக்கு உள் பட்ட பார்கோ நகரில், நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டிரம்ப் பங்கேற்று பேசியதாவது:

நாம் மானிய உதவி அளித்து வரும் நாடுகளில் சில வளரும் பொருளாதார சக்திகளாக உள்ளன. சில நாடுகள் இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் இருப்ப தால், நாம் அவர்களுக்கு மானி யங்களை வழங்கி வருகிறோம்.

ஆனால், மொத்த விவகாரமும் வேடிக்கையாக இருக்கிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகள், பிறர் குறிப்பிடுவதைப் போல உண்மையிலேயே வளர்ந்து வருகின்றன.

இருப்பினும், தங்களை வளர்ந்து வரும் நாடுகள் என அவர்களாகவே கூறிக் கொள் கின்றனர். அந்த வரம்பின் கீழ் மானியங்களையும் பெறுகின்ற னர். நாம் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் வேடிக்கை யாக உள்ளன. ஆகவே, மானிய உதவியை நாம் நிறுத்தப் போகிறோம். நிறுத்திவிட்டோம் என்றே வைத்துக் கொள்ளலாம்.

நாமும் கூடத்தான் வளர்ந்து வரும் நாடாக இருக்கிறோம். என்னைப் பொருத்தவரையில் நாம் வளர்ந்து வரும் நாடுதான். நம்மை அந்த வரம்பின் கீழ் குறிப்பிடுவதைத்தான் நான் விரும்புகிறேன். நாம், மற்ற எல்லோரை காட்டிலும் வேகமாக வளர்ச்சியடையப் போகிறோம். உலக வர்த்தக அமைப்பு என்பது இருப்பதிலேயே மிக மோசமான தாக இருக்கிறது. சீனாவை மாபெரும் பொருளாதார சக்தியாக சீனா உருவெடுக்க அந்த அமைப்பு அனுமதித்திருக்கிறது என்பது ஏராளமான மக்கள் அறிந்திராத ஒரு விஷயமாகும் என்றார் டிரம்ப்.