Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

பஹ்ரைன் இந்திய பள்ளிக்கு ஆகாஷ்' டேப்லெட் கணினி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபை, பிப். 22- மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த விலை யிலான 600 ஆகாஷ் டேப்லெட் (கையடக்க) கணினிகள் பஹ்ரைனில் உள்ள இந்திய பள்ளி மாணவர்களுக்கு விரை வில் வழங்கப்படவுள்ளன. 12ஆம் வகுப்பு மாணவர் கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கணினி வழங்கப் படும் என பள்ளியின் செயற்குழுத் தலைவர் ஆப்ரஹாம் ஜான் தெரி வித்தார். டேப்லெட் கணினி மூலமாக மாணவர்கள் தங்களின் அறிவை வளர்த் துக் கொள்வதோடு, ஆய் வுப் பணிகள் உள்ளிட் டவற்றையும் மேம்படுத் திக் கொள்ள முடியும். டேப்லெட் கணினி, மாண வர்களின் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, அவர் களுடைய வாழ்க்கை யில் மிக முக்கிய முடி வுகளை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும். இப்போது முதற்கட்ட மாக 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கு இந்தக் கணி னிகள் வழங்கப்படும். அதன்பிறகு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும்' என்றார் ஆப்ரஹாம். உலகிலேயே மிகக் குறைந்த விலையிலான இந்த ஆகாஷ் டேப்லெட் கணினி, 7 அங்குலம் தொடு திரையைக் கொண்டதாகும். இதன் விலை ரூ.1,700 ஆகும். இந்த கணினி கடந்த அக்டோபரில் டில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச் சகத்தின் கணினி கற்பித் தல் திட்டத்தில் 25 ஆயி ரம் கல்லூரிகள் மற்றும் 400 பல்கலைக்கழகங் களை இணைக்கும் திட் டத்தின் ஒரு பகுதியாக இந்த கணினி உருவாக் கப்பட்டது. இந்தக் கணி னியை இந்திய மற்றும் பிரிட்டிஷ் நிறுவனமான டேட்டாவின்ட் தயாரித் துள்ளது. இதில் இரண்டு வகையான கணினிகள் உள்ளன. ஒன்று ஆகாஷ் யுபிஸ்லேட் 7, மற்றொன்று கீழ்வகுப்பு மாணவர்கள் கற்கும் வகையில் எளி மையான முறையில் வடி வமைக்கப்பட்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்