நைரோபி, பிப்.22- ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டில் அமெ ரிக்க-பிரான்ஸ் ராணு வத்தினர் கடலோரப் பாது காப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அங்குள்ள டிஜி போவுடி என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் இருந்து சென்ற போர் விமானம் திடீ ரென்று விழுந்து நொறுங் கியது.
இதில் விமானத்தை ஓட்டிச் சென்ற கேப்டன் கள் ராயன் ஹால் (வயது 30), நிகோலஸ் (29) உள்பட 4 வீரர்கள் பலியானார்கள். இதை அமெரிக்க ராணுவ உயர் அதிகாரிகள் உறுதி செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்துகிறார்கள்.