Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

பொது

போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின

இஸ்லாமாபாத், மே.18- பாகிஸ்தானில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின. இதில் 4 விமானிகள் பலியானார்கள். வீடுகளில் இருந்த 3 குழந் தைகள், பெண் உள்பட 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

பாகிஸ்தானில் உள்ள ரிசால்பூர் என்ற இடத்தில் விமானப்படை பயிற்சி அகாடமி உள்ளது. இங்கிருந்து நேற்று காலை 10 மணி அளவில் 2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றன.

சிறிது நேரத்தில் அந்த 2 போர் விமானங் களும் எதிர்பாராதவிதமாக நடுவானில் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதின. இதனால் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்த படி தரையை நோக்கி பாய்ந்து வந்தன.

விபத்துக்குள்ளான இந்த 2 போர் விமானங் களும் பெஷாவர் நகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ரஷ்கை என்ற ஊரில் உள்ள வீடுகள் மீது விழுந்து நொறுங் கின. இதில் 2 வீடுகளின் கூரைப்பகுதி, சுவர்கள் இடிந்து சேதம் அடைந்தன. விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன.

இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்பு பணி யில் ஈடுபட்டார்கள். வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டார்கள். இச்சம்பவத்தில் போர் விமானங்களை ஓட்டி வந்த 4 விமானிகளும் உயிர் இழந்தனர்.

வீடுகளில் வசித்த 3 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. ராணுவ அதிகாரிகளும், காவல்துறை யினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 11ஆம் தேதி கராச்சி அருகே போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. தற்போது ஏற்பட்ட விபத்து 2ஆவது சம்பவம் ஆகும்.

3 நாடுகளின் தூதரகங்களுக்கு மிரட்டல்

இஸ்லாமாபாத், மே.18- ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைக்கு பொருட் களை எடுத்து செல்லும் வழியை பாகிஸ்தான் மூடி வைத் துள்ளது.

அமெரிக்கா நெருக் கடியை அடுத்து இந்த வழியை திறக்க பாகிஸ்தான் தீர்மானித் துள்ளது. இந்நிலையில் பாகிஸ் தானில் இருக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு நாடுகளின் தூதரகங் களுக்கு பார்சல்கள் வந்தன. அதில் விஷம் கலந்த சுமார் 1/2 கிராம் எடையுள்ள பவுடர் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

உடனே இந்த பார்சல்கள் பாகிஸ்தான் காவல்துறையி னரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த தகவலை இஸ்லாமாபாத் காவல்துறை உயர் அதிகாரி யாமின்கான் உறுதி செய்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

`சிந்து மாகாணத்தில் உள்ள அய்தராபாத்தில் இருந்து இவை வந்துள்ளன. அதில் நேட்டோ படைக்கு வழியை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 3 வரி களில் மிரட்டல் வாசகம் இடம் பெற்று இருக்கிறது. கறுப்பு நிறத்தில் இருக்கும் இந்த பவுடர் வெடிமருந்து அல்ல' என்று கூறினார். கைப்பற்றப் பட்ட இந்த மர்ம பவுடர் என்ன? என்பதை கண்டறிய பரிசோ தனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வெஸ்பா வாடிக்கையாளர்களுக்கு இரண்டு விற்பனையகங்கள் திறப்பு


இத்தாலிய பெரு நிறுவனமான பியாஜியோ குழுமத்திற்கு சொந்த மான இந்திய துணை நிறுவமான பியாஜியோ வெஹிக்கில்ஸ் லிமி டெட், சென்னை அண்ணா நகரில் ஆரஞ்ச் மோட்டார்ஸ் மற்றும் கிரீம்ஸ் சாலையில் பிள்ளை மோட்டார்ஸ் கம்பெனி என்ற இரு புதிய விற் பனையகங்கள் தொடங்கப்படு வதை அறிவித்துள்ளது. இதற்கான டீலர்ஷிப்புகளை தொடங்கி வைத்து பேசிய பியாஜியோ நிறுவனத் தலைவர் ரவி சோப்ரா:-
சென்னையில் இருசக்கர வாகனச் சந்தையில் அனைவரும் அறிந்த இந்த இரு கம்பெனியோடு எங்களது கூட்டுறவை நாங்கள் ஆவலோடு எதிர் நோக்குகிறோம்.


இந்திய சந்தையில் வெஸ்பா வின் வெற்றி என்ற நோக்கத்தை ஆதரிக்கக்கூடிய சிறப்பான அனுபவத்தையும் கொண்ட வர்களாகவும் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். வெஸ்பா (ஏநுளுஞஹ) என்ற புகழ் பெற்ற பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெரிதும் மகிழ்கிறோம். இந்தியா வில் வெஸ்பா இரு சக்கர வாக னத்தின் வெற்றிப் பயணத்தை வலுப்படுத்த நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம் என ஆரஞ்ச் மோட்டார்ஸ் மற்றும் பிள்ளை மோட்டார்ஸ் கம்பெனியின் பிரநிதிகள் தெரிவித்துள்ளார்.

சோமாலியா கொள்ளையர்கள் படகுகள் மீது குண்டு வீச்சு அய்ரோப்பிய யூனியன் கடற்படை தாக்குதல்

புரூசெல்ஸ், மே 17- இந்திய பெருங்கடல் பகுதியில் பயணம் செய் யும் சரக்கு கப்பல்களை சோமாலியா நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்று பிணைத் தொகை பெற்று வரு கின்றனர். இது உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சோமாலியா கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களைக் காக்க சர்வதேச நாடுகள் தீவிர பாதுகாப்பு நட வடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றன. இருந்தும் அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. எனவே அவர்களை ஒழிக்க சோமாலியா கொள்ளையர்களின் நிலைகள் மீது அய்ரோப் பிய யூனியனின் கடற் படை ஹெலிகாப்டர் கள் குண்டுவீசி தாக்கு தல் நடத்தின. சோமா லியா கடற்கரையின் முடுக் மாகாணத்தில் உள்ள ஹேண்டுலே கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டது. அப்போது அங்கு நிறுத்தியிருந்த கொள் ளையர்களின் படகுகள் அவற்றை இயக்க சேக ரித்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் கொள்ளையர்கள் யாரும் கொல்லப்படவில்லை. இந்த தகவலை அய் ரோப்பிய யூனியனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.   சோமாலியா கொள்ளை யர்களிடம் இருந்து கப் பல்களைக் காக்க கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அய்ரோப்பிய யூனியன் 10 கப்பல்களில் ரோந்து சுற்றி வருகிறது. நேட்டோ கப்பல்களும் இப்பணி யில் ஈடுபட்டுள்ளன. இவை தவிர, அமெ ரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா மற்றும் மலே சியா நாடுகளை சேர்ந்த கப்பல்களும் தங்கள் நாட்டு கடல் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. இருந்தும் சோமாலியா கொள் ளையர்களை ஒழிக்க முடியவில்லை. எனவே தான் முதன் முதலில் கொள்ளையர்களின் நிலைகள் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதற்கு சோமாலியா அரசும் ஒத்துழைப்பு அளித்தது.

புதினுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

மாஸ்கோ, மே. 15- ரஷி யாவின் புதிய அதிபராக விளாடிமிர் புதின் மூன்றா வது முறையாக பதவி ஏற்றுள்ளார். தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து எதிர்க்கட்சி கள் போராட்டம் நடத் தின.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் மாஸ்கோவில் புதினுக்கு எதிரான போராட்டத்தில் பொது மக்கள் குதித்தனர். மக் களின் உரிமைகளில் அரசு தலையிடக்கூடாது என் பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந் தது.

இதற்கு ரஷிய எழுத்தா ளர்கள், கவிஞர்கள் ஏற் பாடு செய்து இருந்தனர்.

இப்போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் தானா கவே முன்வந்து கலந்து கொண்டனர். போராட் டத்தில் பங்கேற் றவர்கள் முழக்கங்களையோ, கையில் கோரிக்கை அட் டைகளை ஏந்தி வரவில்லை.

மாறாக, மாஸ்கோ நக ரின் வீதிகளில் கும்பலாக நடந்தபடியே சென்று தங்கள் எதிர்ப்பை தெரி வித்தனர்.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்