முன்பு அடுத்து Page:

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் போராட்டம்

சிட்னி, ஏப்.24 தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி உள்ளிட்ட போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில்  வாழும் தமிழர்கள் கொட்டும் மழை யிலும் போராட்டத்தில் ஈடுபட் டனர். தமிழகத்தை வஞ்சிக்கும் இந்திய அரசை கண்டித்து ஆஸ் திரேலியா நாட்டில் சிட்னி, அடிலாய்டு, பிரிஸ்பேன், பெர்த் உள்ளிட்ட 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடி போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியா தலைநகர் பெர்த்தில் கூடிய 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும்....... மேலும்

24 ஏப்ரல் 2018 14:27:02

அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்

  அமெரிக்காவில் ரூ.66 லட்சம் பரிசுவென்ற இந்திய மாணவர்

நியூயார்க், ஏப். 23- அமெரிக்கா வில் ஜார்ஜியாவை சேர்ந்தவர் துருவ் கவுர். இந்திய வம்சாவ ளியை சேர்ந்தவர். அய்வி லீக் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஜியோ பார்டி கல்லூரி வாகையருக்கான வினாடி -வினா போட்டி நடந்தது. அதில் துருவ் கவுர் மற்றும் 14 மாண வர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் துருவ் கவுர் வெற்றி பெற்றார். அவருக்கு....... மேலும்

23 ஏப்ரல் 2018 16:06:04

அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி மரணம்

 அணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி மரணம்

வாசிங்டன், ஏப். 23- அமெரிக் காவை சேர்ந்த விஞ்ஞானி நெர்சஸ் கிரிக் கிகோரியன். உலகிலேயே முதன் முறையாக அணு குண்டு தயாரித்தவர். இவர் கடந்த 18ஆம் தேதி மரணம் அடைந்தார். இவ ருக்கு வயது 97. இவர் நியூ மெக்சிகோவில் லாஸ் அல் மோஸ் நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவரது பெற் றோர் ஆர்மீனியாவை சேர்ந் தவர்கள். கடந்த 1921-ஆம் ஆண்டு துருக்கியில் அகதி களாக தஞ்சம் அடைந்தனர். அங்கு இவர்....... மேலும்

23 ஏப்ரல் 2018 16:06:04

சர்வதேச ஸ்குவாஷ்: நிகோலை வீழ்த்தினார் ஜோஷ்னா சின்னப்பா

எகிப்து, ஏப். 23-- எகிப்தில் நடை பெறும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, உல கின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான மலேசியா வின் நிகோல் டேவிட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னே றினார். நிகோல் டேவிட்டை, ஜோஷ்னா வீழ்த்துவது இது முதல் முறையாகும். முன்ன தாக, ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற 2-ஆவது சுற்றில் ஜோஷ்னா 11--8, 11--8, 11--8 என்ற செட்களில் 8 முறை உலக வாகையரான நிகோலை....... மேலும்

23 ஏப்ரல் 2018 15:52:03

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்

காமன்வெல்த் அமைப்பின் தலைவர் ஆகிறார் சார்லஸ்

சீனாவில் படகு கவிழ்ந்த 17 பேர் உயிரிழப்பு பீஜிங், ஏப். 22- சீனாவின் குய்லின் பகுதியில் தாவோஹு வாஜியாங் என்னும் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் அவ்வப்போது படகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இதனிடையே, இந்த ஆற்றில் நேற்று படகு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த போட்டி குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக் கப்பட்டவில்லை. இந்நிலையில், படகு போட்டிக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி....... மேலும்

22 ஏப்ரல் 2018 16:46:04

இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் கண்டுபிடிப்பு

  இரண்டாம் உலகப்போர் காலத்து குண்டுகள் கண்டுபிடிப்பு

  பெர்லின், ஏப். 21- ஜெர்மனி -- பிரிட்டன் இடையே கடந்த 1944-ஆம் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது பெர் லின் நகரில் உள்ள பல பகுதி களின்மீது பிரிட்டன் நாட்டு விமானப்படைகள் மிகப்பெரிய வெடிகுண்டுகளை வீசி தாக்கு தல் நடத்தின. இதில் பல நக ரங்கள் இடிந்து, தரை மட்ட மாகி, நிர்மூலமாகிப் போயின. பின்னர், மெல்ல,மெல்ல மீண்டும் கட்டமைக்கப்பட்ட பல நகரங்கள் தற்போது புதுப் பொலிவுடன் மிளிர்கின்றன. இந்நிலையில், பெர்லினில்....... மேலும்

21 ஏப்ரல் 2018 16:42:04

அணுஆயுதச் சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு

 அணுஆயுதச் சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு

வாசிங்டன், ஏப். 21- அணு ஆயுதச் சோதனை மூலம் அமெ ரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மிரட்டிக்கொண்டு இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த் தையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார். முதற்கட்டமாக தென்கொ ரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கிய வடகொரியா, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கும் ஆர்வம் காட்டி யது. இதை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தென்கொரியா தெரி வித்தது. உடனே அவரும்....... மேலும்

21 ஏப்ரல் 2018 16:24:04

ராவல்பிண்டி கிராமத்துக்கு மலாலா பெயர்!

 ராவல்பிண்டி கிராமத்துக்கு மலாலா பெயர்!

ராவல்பிண்டி, ஏப். 20- பாகிஸ் தானில் உள்ள பஞ்சாப் மாகா ணத்தில் இருக்கும் ராவல் பிண்டி பகுதியில் அமைந்துள்ள கிராமத்துக்கு மலாலா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியின் சமூக ஆர்வலர் பஷீர் அஹமது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள பாகிஸ்தா னைச் சேர்ந்த மலாலா யூசுஃப் ஸாய் (வயது 20), கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் கல்விக்கு ஆதரவாகப் பேசி வந்தவரை பள்ளி....... மேலும்

20 ஏப்ரல் 2018 14:49:02

கியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

  கியூபா நாட்டு புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு

ஹவானா, ஏப். 20- அமெரிக்கா விற்கு அருகில் உள்ள மிகச் சிறிய தீவு நாடு கியூபா. இது கரீபியன் கடலில் அமைந்துள் ளது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் இருக்கும் இந்நாட்டில் மறைந்த புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ சுமார் 30 ஆண்டுகள் பிரதமர் மற்றும் அதிபராக இருந்தார். அவருக்கு பின் அவ ருடைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ சுமார் 10 ஆண்டுகளாக அதிபர் பதவியில் உள்ளார். 87 வயதான ரவுல் பதவியிலிருந்து ஓய்வு....... மேலும்

20 ஏப்ரல் 2018 14:49:02

மியான்மாவில் 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

 மியான்மாவில் 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

மியான்மா, ஏப். 18- மியான்மா அதிபர், சிறையில் அடைக்கப் பட்டுள்ள 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஆங் சான் சூகி-யின் நெருங் கிய உதவியாளராக இருந்து, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற டின் க்யாவ் (71), உடல் நலக்குறைவு காரண மாக தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, கடந்த மாதம் மியான்மாவின் புதிய அதிபராக, அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தீவிர ஆதரவாளர் வின் மியிந்த்....... மேலும்

18 ஏப்ரல் 2018 15:51:03

ரோஹிங்கியா விவகாரத்தில் பாராமுகம்: ஆங் சான் சூகியின் விருது பறிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், நவ. 29- மியான்மாவில் ரோஹிங்கியா முசுலிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்கு முறைகளுக்கு அய்க்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலா ளர் அன்டோனியோ குட்டெ ரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முசுலிம்களுக்கு மியான்மா அரசு சட்ட அங்கீ காரம் வழங்க வேண்டும் என வும் அவர் வலியுறுத்தினார்.

வங்காளதேசத்தில் அகதி களாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும் பப்பெற மியான்மா அரசு சம் மதம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க ஏற்பாடு கள் தொடங்கியுள்ளதாக வங் காளதேசம் நாட்டின் வெளியுற வுத்துறை அமைச்சர் மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித் தார்.

இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சமீபத்தில் ஆங் சான் சூகியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத் தினார். உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ் தவர்களின் தலைமை மதகுரு வான போப் பிரான்சிஸ் தற் போது இவ்விவகாரம் தொடர் பாக ஆலோசனை நடத்துவ தற்காக மியான்மா நாட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மியான்மா நாட்டில் ரோஹிங்கியா முசு லிம்களுக்கு எதிரான ஒடுக்கு முறை விவகாரத்தில் பாராமுக மாக இருந்த அந்நாட்டு அர சின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி-க்கு பிரிட்டன் அரசால் அளிக்கப்பட்ட ஆக்ஸ் போர்ட் சுதந்திர விருது பறிக் கப்பட்டது.

இதுதொடர்பாக, நேற்றிரவு நடைபெற்ற ஆக்ஸ்போர்ட் நகர கவுன்சில் கூட்டத்தில் 1997ஆ-ம் ஆண்டு ஆங் சான் சூகி-க்கு அளிக்கப்பட்ட ஆக்ஸ் போர்ட் விருதினை பறிக்கும் தீர்மானத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner