முன்பு அடுத்து Page:

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் போட்டி

  வாசிங்டன், ஜன. 23- இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (54), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெ ரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அதிபர் டொனால்ட் டிரம்பை கடு மையாக விமர்சித்து வரும் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் 4-ஆவது போட்டியாளர் ஆவார். அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அமெ ரிக்க நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற....... மேலும்

23 ஜனவரி 2019 15:45:03

கனடாவில் கடும் பனிப்பொழிவு 16 மணிநேர குளிரில் தவித்த பயணிகள்

கனடாவில் கடும் பனிப்பொழிவு  16 மணிநேர குளிரில் தவித்த பயணிகள்

மாண்ட்ரியல், ஜன. 23- அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந் தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே விமானத்தை கன டாவில் உள்ள நியூ பவுண்டு லேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து விமானம் புறப்பட தயாரானது........ மேலும்

23 ஜனவரி 2019 15:44:03

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக  கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கைது

காரகாஸ், ஜன. 23- வெனிசுலா நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல் லுகள் முறைகேடுகள் நடந்த தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. பிர தான எதிர்க்கட்சி புறக்கணித்த தால் தேர்தலில் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவா கின. அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற் றியை ஏற்க எதிர்க்கட்சிகள்....... மேலும்

23 ஜனவரி 2019 15:42:03

மடகாஸ்கர் நாட்டின் அதிபராக ஆன்ட்ரி ரஜோலினா பதவி ஏற்பு

மடகாஸ்கர் நாட்டின் அதிபராக  ஆன்ட்ரி ரஜோலினா பதவி ஏற்பு

அன்டனானாரிவோ, ஜன. 23-  ஆப்பிரிக்க கண்டத்தின் தென் கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் நாட்டின் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் 55.66 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆன்ட்ரி ரஜோலினா நேற்று அந்நாட்டின் அதிபராக பதவி யேற்றுக் கொண்டார். தனது ஆட்சிக்காலத்தில் நாட்டில் உள்ள 6 மாகாணங்களும் சரிசமமான வளர்ச்சியை பெறும் என....... மேலும்

23 ஜனவரி 2019 15:36:03

பக்ரைன், குவைத்தில் பொங்கல் விழா வீர விளையாட்டு விழா

பக்ரைன், குவைத்தில் பொங்கல் விழா வீர விளையாட்டு விழா

பக்ரைன், ஜன. 22- பக்ரைனில் தமிழ் உணர்வாளர்கள் சங்கமும், இந்திய கிளப்பும் இணைந்தும் நடத்திய பொங் கல் பண்டிகை உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழர் களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரபு நாடுகளில் பொங்கல் பண் டிகை முன் எப்போதும் இல்லாத வகை யில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டா டப்பட்டது. குறிப்பாக, பக்ரைனில் பல பகுதிகளில் தமிழர்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர். பக்ரைன் தமிழ்....... மேலும்

22 ஜனவரி 2019 14:52:02

சீனாவின் மக்கள்தொகை 139 கோடியை தாண்டியது

பெய்ஜிங், ஜன. 22- சீனாவின் மக்கள் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டில் 139.5 கோடியை எட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளதாவது: சீனாவின் மக்கள் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டில் மட் டும் 1.52 கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது. முந்தைய 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது புதிதாக பிறந்த குழந்தை களின் எண்ணிக்கை 7.90 லட்சம் அதிகம். 2018-இல் சீனாவின் மொத்த மக்கள் தொகை 139.5 கோடியை எட்டியுள்ளது........ மேலும்

22 ஜனவரி 2019 14:49:02

உலகின் மிக வயதான தாத்தா காலமானார்

உலகின் மிக வயதான தாத்தா காலமானார்

டோக்கியோ, ஜன. 21- உலகில் அதிககாலம் வாழ்ந்துவரும் ஆண், பெண்களை உலக சாதனை பதிவுகளை நிர்வகித்துவரும் கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் அளித்து, சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், பிரான்சு நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகி றார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவருக்கு பின்னர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர் வாழ்ந்து....... மேலும்

21 ஜனவரி 2019 15:51:03

பிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்

பிரான்சு: 10ஆவது வாரமாக மஞ்சள் அங்கிப் போராட்டம்

பாரிசு, ஜன. 21- பிரான்சில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 10-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட அரசின் பல்வேறு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 10-ஆவது வாரமாக சனிக் கிழமையும் தொடர்ந்தது. போராட்டத்தின் ஒரு பகுதி யாக, தலைநகர் பாரீசில் நூற் றுக்கணக்கானவர்கள் ஆர்ப் பாட்ட....... மேலும்

21 ஜனவரி 2019 15:49:03

பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

இஸ்லாமாபாத், ஜன. 21- பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 26-ஆவது தலைமை நீதிபதி ஆவார். புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள அதி பர் மாளிகையில் நேற்று நடந்தது. புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கான் கோசாவுக்கு அதிபர்....... மேலும்

21 ஜனவரி 2019 15:48:03

அதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப் ஆர்வம்

அதிபர் ஆலோசனைக் குழுவில் இந்திய அமெரிக்கரை நியமிக்க டிரம்ப் ஆர்வம்

வாசிங்டன், ஜன. 21- அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழு வில் இந்திய அமெரிக்கரான பிரேம் பரமேஸ்வரனை (50) நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர் வம் காட்டி வருவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில்,  ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்கள் குறித்த அதிபர் ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக எலைன் எல். சாவோவை நியமிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த குழுவின் உறுப்பினர்களாக....... மேலும்

21 ஜனவரி 2019 15:46:03

இசுரேல் அதிபருக்கு எதிராகப் போராட்டம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெல் அவிவ், டிச. 4- யூதர்களின் நாடான இசுரேலின் அதிபராக இருப்பவர் பெஞ்சமின் நேதன் யாகு. சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப் பொருள் பெற்றதாகவும், எதிர்க் கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்த நிலையில், நேற்று திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண் டனர். நேதன்யாகுவிற்கு எதி ராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசார ணைக்கு உட்படுத்த வேண்டும் என்று முழக்கம் போட்டனர்.

நேதன்யாகு குற்ற விசார னையை எதிர்கொள்ளும் பட் சத்தில், அது அவருடைய கழுத் தின் மேல் தொங்கும் கத்தியா கவே இருக்கும் என்று அரசி யல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


2020ஆம் ஆண்டில் கல்லீரல் நோயினால் உயிரிழப்பு அதிகரிக்கும்

லண்டன், டிச. 4- எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்க்கு அடுத்த படியாக இருதய நோய் உயிர்க்கொல்லி ஆக உள்ளது. இவற் றில் இருதய நோய் சாதாரணமாக பலரை தாக்கி பலி வாங் குகிறது. இதைவிட மிகப்பெரிய உயர்க்கொல்லி நோயாக கல்லீரல் நோய் சத்தமின்றி அமைதியாக உருவாகி வருகிறது. இதை சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் மதுகுடித்தல் மற்றும் உடல்பருமன் போன்றவைகளால் கல்லீரல் நோய் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2020ஆ-ம் ஆண்டில் கல்லீரல் நோயின் மூலம் ஏராளமா னோர் உயிரிழக்கும் ஆபத்து உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அது இருதய நோயினால் ஏற்படும் உயிரி ழப்புகளை விட மிக அதிகமாக இருக்கும் என கண்டறியப் பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் இருதய நோயினால் 76 ஆயிரம் பேர் மரணம் அடையும் பட்சத்தில் கல்லீரல் நோய் மூலம் 80 ஆயிரம் பேர் பலியாவார்கள். இதன் மூலம் கல் லீரல் நோய் உயிர்க்கொல்லியாக மாறும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கல்லீரல் நோய் இளைய மற்றும் நடுத்தர வயதினரான 40 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதிக்கிறது. எனவே கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க மதுவின் விலையை ஸ்காட்லாந்து அரசு உயர்த்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner