முன்பு அடுத்து Page:

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு: ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

வாசிங்டன், ஜூலை 16- கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் வகை யில் தலையீடு செய்ததாக 12 ரஷ்ய உள வுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை குற்றச்சாட்டு பதிவு செய்து உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட 29 பக்க குற்றப் பதிவு ஆவணத்தில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: “ஜிஆர்யூ’ என் றழைக்கப்படும் ரஷ்ய உளவுப்....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

அகதிகள் விவகாரம் - டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அகதிகள் விவகாரம் - டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாசிங்டன், ஜூலை 16- மெக்சி கோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் உரிய ஆவணங் கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரித்து காவலில் வைக்கும் கொள்கையை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது. இதன்படி, அங்கு சுமார் 2 ஆயிரம் குழந்தைகள், பெற் றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. டிரம்பின் அகதிகள் கொள் கைக்கு அவரது மனைவி மெல னியா டிரம்ப், மகள்....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

அமெரிக்கா: அகதி சிறுவர்கள் ஒப்படைப்பு

அமெரிக்கா:  அகதி சிறுவர்கள் ஒப்படைப்பு

      வாசிங்டன், ஜூலை 16- அமெரிக் காவில் அடைக்கலம் தேடி வந்த அகதிகளிடமிருந்து பிரிக்கப் பட்ட அவர்களது 7 குழந்தை கள், அவர்களது பெற்றோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்ட னர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அகதிகளிட மிருந்து அவர்களது குழந்தை களை பிரிக்கும் நடைமுறை யைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலை யில், அவ்வாறு பிரிக்கப்பட்ட மேலும் 7 சிறுவர்கள் அவர் களது பெற்றோர்களிடம் வெள் ளிக்கிழமை ஒப்படைக்கப்பட் டனர். கவுதமாலாவிலிருந்து அமெரிக்காவுக்கு அடைக்கலம்....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு: டிரம்ப் - தெரசா மே தீவிர ஆலோசனை

   பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக உறவு: டிரம்ப் - தெரசா மே தீவிர ஆலோசனை

லண்டன், ஜூலை 15- அய்ரோப் பிய யூனியனிலிருந்து பிரிட் டன் வெளியேறும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கைக்குப் பிறகு, பிரிட் டன் மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பிரிட் டனில் வெள்ளிக்கிழமை சந் தித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை முதல் பிரிட்டனில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற தற்குப் பிறகு டிரம்ப் பிரிட்டன் வருவது இதுவே....... மேலும்

15 ஜூலை 2018 15:16:03

தேர்தல் பேரணிகளில் குண்டுவெடிப்பு: 133 பேர் பலி; 125 பேர் படுகாயம்

   தேர்தல் பேரணிகளில் குண்டுவெடிப்பு: 133 பேர் பலி; 125 பேர் படுகாயம்

இசுலாமாபாத், ஜூலை 15 பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 133 பேர் பலியாகினர். 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது அயூப் அச்சாக்ஸய் கூறியதாவது: பாகிஸ்தானில் இருவேறு இடங்க ளில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளின் போது பயங்கரவாதிகள் இந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பை நடத்தியுள் ளனர். பலூசிஸ்தான் மாகாணம் மஸ்துங் பகுதியைச் சேர்ந்த பலூசிஸ்தான் அவாமி கட்சி தலைவர் சிராஜ் ரைசானியை முக்கியமாக....... மேலும்

15 ஜூலை 2018 15:12:03

சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

சீனாவில் இரசாயன ஆலையில் தீ விபத்து: 19 பேர் பலி

சிச்சுவான், ஜூலை 14  சீனாவில் இரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் உணவு மற்றும் மருந்துவ தொழிற்துறைகளுக்கான இரசாயனங்களை தயாரிக்கும் தனியார் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மள மளவென ஆலையின் மற்ற பகுதிகளிலும் பரவியதால் எங்கும் புகைமூட்டம்....... மேலும்

14 ஜூலை 2018 16:07:04

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மரண தண்டனை: இலங்கையில் அமல்படுத்த திட்டம்

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த  மரண தண்டனை: இலங்கையில் அமல்படுத்த திட்டம்

கொழும்பு, ஜூலை 14 இலங் கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் மரண தண்ட னையை அமல்படுத்த அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. அதன்பிறகு, மரண தண் டனை அளித்தாலும் நிறை வேற்றப்படவில்லை. தற்போது, ஆயிரம் தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களில்....... மேலும்

14 ஜூலை 2018 16:04:04

பெண் கல்வி மறுக்கப்படுவதால் ரூ.2,000 லட்சம் கோடி இழப்பு! உலக வங்கி அறிக்கை

நியூயார்க், ஜூலை 14 பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி டாலர் முதல் (ரூ.1,000 லட்சம் கோடி) 30 லட்சம் கோடி டாலர் (ரூ.2,000 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.பாகிஸ்தானில், பெண்கள் கல்விக்காகப் போராடி, சிறுமியாக இருக்கும்போது தலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, பிறகு உயிர் பிழைத்தவர் மலாலா.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அவரை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான....... மேலும்

14 ஜூலை 2018 16:01:04

அமெரிக்க சாதனையாளர்கள் பட்டியலில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்

அமெரிக்க சாதனையாளர்கள் பட்டியலில் 2 இந்திய வம்சாவளி பெண்கள்

வாசிங்டன், ஜூலை 14 அமெரிக்காவில் சுயதொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சாதனைப் பெண்களின் பட்டி யலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம்பெற் றுள்ளனர்.இந்தப் பட்டியலை அமெ ரிக்காவின் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் 60 சாதனைப் பெண்களின் பெயர் கள் இடம்பெற்றுள்ளன. அவர் களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயசிறீ உல்லல் 18-ஆவது இடத்தைப் பிடித்துள் ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.8,917 கோடியாகும்.லண்டனில்....... மேலும்

14 ஜூலை 2018 15:51:03

மிகவும் ஆபத்தான நிலையில் 120 கோடி குழந்தைகள்

உலகம் முழுவதும் 120 கோடி குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த 'சேவ் தி சில்ரன்' (Save the Children) அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகில் உள்ள குழந்தைகளில் 120 கோடி குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் வறுமை, போர் அல்லது பெண் குழந்தை வன்புணர்வு ஆகிய ஆபத்துகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளது. 120 கோடி....... மேலும்

14 ஜூலை 2018 12:55:12

அமெரிக்க - தென் கொரிய விமானப் படைகளின் போர்ப் பயிற்சி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், டிச. 5- அமெரிக்க மற்றும் தென் கொரிய விமானப் படைகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட போர்ப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

இவ்விரு நாடுகளிடையேயான பாது காப்பு ஒத்துழைப்பின் கீழ் இதுபோன்ற போர்ப் பயிற்சிகள் நடைபெற்றாலும், தற்போதைய போர்ப் பயிற்சியே மிகப் பெரிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விஜிலன்ஸ் ஏஸ்’ என்று பெயரி டப்பட்ட இந்தப் போர்ப் பயிற்சி அய்ந்து நாட்களுக்கு நடைபெறும்.

இது தொடர்பாக அமெரிக்க விமா னப் படை தெரிவித்திருப்பது:

இரு நாட்டு விமானப் படைகளைச் சேர்ந்த 230 விமானங்கள் “விஜிலன்ஸ் ஏஸ்’ போர்ப் பயிற்சியில் கலந்து கொள் கின்றன. அமெரிக்காவின் அதி நவீன எஃப்22 ராப்டர் ஸ்டெல்த் ஜெட் போர் விமானங்கள், எஃப்16, எஃப்35 விமா னங்கள், யூ2 உளவு விமானங்கள் உள் ளிட்டவை இதில் கலந்து கொள்கின்றன. மேலும் 12,000 அமெரிக்க வீரர்கள் அய்ந்து நாள் போர்ப் பயிற்சியில் பங்கு பெறுகின்றனர்.

தென் கொரியாவின் குன்சான் போர் விமான தளத்தை மய்யமாகக் கொண்டு போர்ப் பயிற்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இரு முறை இது போன்ற போர்ப் பயிற்சிகள் நடைபெறு வது வழக்கமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவை அச்சுறுத்தும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை யடுத்து தற்போதைய போர்ப் பயிற்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அய்.நா.வின் கடுமையான பொரு ளாதாரத் தடைகளைப் பொருட்படுத் தாமல், கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி வாய்ந்த ஏவுகணையைக் கடந்த வாரம் வட கொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. அது 13,000 கிலோ மீட்டர் தொலைவு பறக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஹவா ஸாங்-15 என்னும் இந்தப் புதிய ஏவு கணை மூலம் அமெரிக்காவில் உள்ள எந்தப் பகுதியையும் குறி வைத்து வட கொரியாவால் தாக்க முடியும் எனப்படு கிறது. எனினும் 1 டன் எடையுள்ள அணு குண்டை ஏந்தி வெற்றிகரமாக அது தனது இலக்கை எட்டுமா என்பது குறித்து நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக் கின்றனர்.

வட கொரியாவின் போர் அச்சுறுத் தல் புதிய உச்ச நிலையைத் தொட்டிருக் கும் வேளையில், சரித்திரம் காணாத பிரம்மாண்ட போர்ப் பயிற்சி நடை பெறுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடன் மோதினால் வட கொரியா முற்றிலும் அழிந்துவிடும் என்று அய்.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார்.

வட கொரியாவின் போர்த் திறனை முடக்கும் விதமான ஒரு தாக்குதலை அமெரிக்கா மேற்கொள்ள வாய்ப்பிருப்ப தாக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்ஸி கிரஹாம் ஒரு கருத்தரங்கில் கூறியிருந்தார்.

வட கொரியாவின் போர் அச்சுறுத் தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர். மெக்மாஸ்டர் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner