முன்பு அடுத்து Page:

2018ஆம் ஆண்டிற்கான மேன்புக்கர் பரிசு வடக்கு அயர்லாந்து பெண் எழுத்தாளர் தேர்வு

  2018ஆம் ஆண்டிற்கான மேன்புக்கர் பரிசு  வடக்கு அயர்லாந்து பெண் எழுத்தாளர் தேர்வு

லண்டன், அக். 18- வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”.  இந்த விருது கடந்த 1969ஆ-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், அய்ரிஸ் முர்டோச், சல்மான் ருஷ்டி, ஜார்ஜ் சாண்டர்ஸ் உள்பட....... மேலும்

18 அக்டோபர் 2018 15:49:03

எல்லையில் படைகள் நீக்கம்: கொரிய நாடுகள், அய்.நா. பேச்சுவார்த்தை .

எல்லையில் படைகள் நீக்கம்: கொரிய நாடுகள், அய்.நா. பேச்சுவார்த்தை  .

நியூயார்க், அக். 18- வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படை களை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்ப தாவது: வட - தென் கொரிய நாடுகள் இடையிலான பான்முன்ஜோம் எல்லை கிரா மம் கூட்டு பாதுகாப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 250 கி.மீ. தொலைவு கொண்ட அந்த எல்லைப் பகுதியில்தான் இரு நாட்டுப் படையினரும் நேருக்கு நேர்....... மேலும்

18 அக்டோபர் 2018 15:40:03

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

சனா, அக். 17- ஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016-ஆம் ஆண்டு நீக்கி அஹமத் ஒபைட் பின் டக்ர்-அய் புதிய பிரதமராக்கினார் அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி. கடந்த 2016இ-ல் இருந்து அஹமத் ஒபைட் பின்டக்ர் பிரதமராக செயலாற்றி வந்தார். ஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் அரசு உடனடியாக பதவி விலக வேண்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:26:05

எச்1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக அய்.டி. நிறுவனங்கள் வழக்கு

எச்1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக  அய்.டி. நிறுவனங்கள் வழக்கு

வாசிங்டன், அக். 17- அமெரிக்க அரசு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த ‘விசா’ மூலம் அங்கு வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேற முடியாது. அமெரிக்க கம்பெனிகளில் வெளிநாட்டி னர் பணிபுரிவதற்கான ‘விசா’ வாகும். அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற வுடன் அதற்கான எச்-1பி விசா வுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார்........ மேலும்

17 அக்டோபர் 2018 17:26:05

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 3ஆம் தேதி சீனா பயணம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  நவம்பர் 3ஆம் தேதி சீனா பயணம்

இசுலாமாபாத், அக். 17- பாகிஸ் தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியு தவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வரு கிறது. தற்போது கடன் சுமை மற் றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலை மைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரி கள் அடுத்த மாதம்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:25:05

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

  பெய்ஜிங், அக். 16- வர்த்தகப் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா முன்னுக்குப் பின் முர ணமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வின் "ஃபாக்ஸ்' தொலைக் காட்சிக்கு அந்த நாட்டுக்கான சீனத் தூதர் குய் தியான்காய் அளித்த பேட்டியில் தெரிவித்த தாவது: வர்த்தகப் பேச்சுவார்த்தை யைப் பொருத்தவரை அமெரிக் காவிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் சார்பில் முடிவுகளை நிர்ணயிப்பது....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

அங்காரா, அக். 16- செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவகாரம் குறித்து சவூதி அரேபிய மன்னர் சல்மா னுடன் துருக்கி அதிபர் எர்டோகன் முதல் முறையாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து துருக்கி அதிபர் மாளிகை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சவூதி மன்னர் சல்மானுடன் அதிபர் எர்டோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதகரகம் சென்ற செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவ காரம் குறித்து....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

கோலாலம்பூர், அக். 16- மலேசியாவில் சனிக்கிழமை நடை பெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், எம்.பி.யாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மலேசியாவின் போர்ட் டிக்ஸன் நாடாளுமன்றத் தொகுதி யில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் முன் னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட ஏழுபேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில், 31,016 வாக்குகள் அன்வருக்கு கிடைத்ததையடுத்து அவர் பெரும் பான்மையான வாக்குகள்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:06:04

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில்  இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

நியூயார்க், அக். 16- உலக பட்டினிக் குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உய ரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ஆம் ஆண்டுக்கான உலக பட்....... மேலும்

16 அக்டோபர் 2018 15:55:03

முகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு

முகநூலில் மூன்று கோடி  நபர்களின் தகவல்கள் திருட்டு

நியூயார்க், அக். 15- முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ள தாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத் தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட் டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள் ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண்,....... மேலும்

15 அக்டோபர் 2018 15:24:03

உ.பி. ஊராட்சித் தேர்தல் தோல்விகள் குறித்து பாஜக மவுனம் காப்பது ஏன்? அகிலேஷ் குற்றச்சாட்டு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எடா, டிச.5 உத்தரப் பிரதேச மாநகராட்சி மேயர் தேர்தல்களில் பெற்ற வெற்றியை மட்டும் பேசி வரும் பாஜக, ஊராட்சித் தேர்தல்களில் பெற்ற தோல்வி குறித்து மௌனம் காப்பதாக சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

எடா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர், இதுகுறித்து கூறியதாவது:
பாஜக பொய்களைப் பரப்பி வரும் கட்சியாகும். அந்தக் கட்சி உத்தரப் பிரதேசத்தில் 16 மாநகராட்சித் தேர்தல்களில் 14 இடங்களைக் கைப்பற்றியது. காரணம், அந்தத் தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், வாக்குச் சீட்டு முறையைப் பயன் படுத்தி நடைபெற்ற ஊராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் பாஜக தோல்வியடைந்தது. எனினும், அதுகுறித்து பாஜக எதுவும் கூறாமல் இருக்கிறது.

இந்தியாவைவிட முன்னேறிய பல நாடுகளில் இன்னும் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தியே தேர்தல்கள் நடைபெறும்போது, இந்தியாவில் மட்டும் அதில் என்ன பிரச்னை இருக்கிறது? பழு தான மின்னணு வாக்குப் பதிவு இயந் திரங்கள் எவ்வாறு சரி செய்யப்படுகின்றன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அவ்வாறு வாக்குப் பதிவு இயந்திரங்களின் கோளாறுகளை சரி செய்ய முடியும் என்றால், நன்றாக இயங் கிக் கொண்டிருக்கும் வாக்குப் பதிவு இயந் திரங்களில் முறைகேடான மாற்றங்களைச் செய்யவும் முடியும் என்றார் அவர்.

சமாஜவாதி கட்சி மட்டுமன்றி, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்தல்களின்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேடு செய்வதாக புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner