முன்பு அடுத்து Page:

வெனிசுலாவில் பொருளாதாரச் சரிவு பசி - பட்டினியால் பொதுமக்கள் கடும் அவதி

 வெனிசுலாவில் பொருளாதாரச் சரிவு பசி - பட்டினியால் பொதுமக்கள் கடும் அவதி

கராகஸ், ஜன. 23- தென் அமெ ரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா நாடு உள் ளது. இதன் அதிபராக நிகோ லன் மதுரோ பதவி வகித்து வருகிறார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த தால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. அதை சமாளிக்க அதிபர் மதுரோ எடுத்த நடவ டிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொழிற் சாலைகள் மற்றும் உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன........ மேலும்

23 ஜனவரி 2018 14:58:02

நியூயார்க் - லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் - புதிய சாதனை

  நியூயார்க் - லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் - புதிய சாதனை

நியூயார்க், ஜன. 23- அமெரிக்கா வின் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்ட னுக்கு நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் அதிவேக மாக பறந்து 5 மணி 13 நிமிடத் தில் சென்றடைந்தது. பொது வாக இது 6 மணி 6 நிமிட நேரத்துக்கு லண்டனை சென்ற டையும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை விட (53 நிமிடத் துக்கு)....... மேலும்

23 ஜனவரி 2018 14:58:02

சிங்கப்பூரில் நடத்துநர் இன்றி இயங்கும் பேருந்து

சிங்கப்பூரில் நடத்துநர் இன்றி இயங்கும் பேருந்து

சிங்கப்பூர், ஜன. 22- நவீன தொழில்நுட்பம் மூலம் மக்க ளுக்கு சேவை வழங்குவதில் சிங்கப்பூர் முன்னிலையில் உள் ளது. அங்கு நடத்துநர்கள் இல் லாமல் பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. எனவே பேருந்துகளில் பய ணம் செய்பவர்கள் பயணச் சீட்டு கட்டணத்தை ஏ.டி.எம். கார்டு வடிவில் இருக்கும் அட் டைகள் மூலம் செலுத்துகின் றனர். ஈஸி லிங்க் நிறுவனம் ஏ.டி.எம். வடிவிலான பேருந்து அட்டைகள் வழங்கியுள்ளன. அதைக் கொண்டு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும்....... மேலும்

22 ஜனவரி 2018 16:30:04

டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்

 டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் வலியுறுத்தல்

இசுலாமாபாத், ஜன. 22- பாகிஸ் தான் பொய், வஞ்சகம் ஆகிய வற்றை தவிர வேறு எதையும் அளித்ததில்லை என தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகிஸ் தான் பிரதமர் வலியுறுத்தியுள் ளார். தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராள மான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நட வடிக்கை....... மேலும்

22 ஜனவரி 2018 16:30:04

சர்ச்சைக்குரிய பகுதியில் கப்பல் பயணம்:

 சர்ச்சைக்குரிய பகுதியில் கப்பல் பயணம்:

அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கைபீஜிங், ஜன. 22- தெற்கு சீன கடலை சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது. ஆனால், வேறு சில நாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடுவதால், அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலை யில், தெற்கு சீன கடலில் உள்ள குவாங்யான் என்ற மணல் திட்டு பகுதி அருகே அமெரிக்க போர்க்கப்பல் கடந்து சென்றது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக....... மேலும்

22 ஜனவரி 2018 16:30:04

தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் - ஜப்பானியர் சாதனை

  தண்ணீரில் மிதக்கும் எலக்ட்ரிக் கார் - ஜப்பானியர் சாதனை

டோக்கியோ, ஜன. 20- ஜப்பானில் 2011ஆ-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். பலர் பாதிக்கப்பட்டனர். சுனாமியிலி ருந்து தப்பிக்க பலர் கார்களுக்குள் சென்றனர். ஆனால் அலை யானது மக்களை காருடன் அடித்துச் சென்றது. இந்நிலையில், சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது மூழ்காமல் இருக்கும் வகையில் புதிய கார் ஒன்றை ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுருமாக்கி வடிவமைத்துள்ளார். இந்த சிறிய....... மேலும்

20 ஜனவரி 2018 15:32:03

சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை பாக். பிரதமர் அப்பாசி திட்டவட்டம்

சர்வதேச தீவிரவாதி  ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை இல்லை பாக். பிரதமர் அப்பாசி திட்டவட்டம்

இசுலாமாபாத், ஜன. 20- மும்பை தாக்குதலில் மூளையாக செயல் பட்ட சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மும்பை மாநகரில், 2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கர வாதிகள் 10 பேர் நுழைந்து, 10-க்கும் மேற்பட்ட இடங்க ளில் அதிபயங்கர தாக்குதல் கள் நடத்தினர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல்களில் 166 பேர் கொன்று....... மேலும்

20 ஜனவரி 2018 15:32:03

ஆக்கி போட்டி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

 ஆக்கி போட்டி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

வெல்லிங்டன், ஜன. 19- நியூசிலாந் தில் 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஆக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 0--2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் 4-ஆவது நிமி டத்தில் பெல்ஜியத்தின் கோல் முயற்சியை திறமையாகக் கையாண்டு தடுத்தார் இந்திய கோல் கீப்பர் சிறீஜேஷ். எனி னும், 8-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் செபாஸ்டியன் டாக்கீர், ரிவர்ஸ் ஷாட் முறை யில் அடித்த பந்தை சிறீஜேஷ் தவறவிட,....... மேலும்

19 ஜனவரி 2018 15:32:03

துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காருக்கு தடையாம்

 துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காருக்கு தடையாம்

அஸ்காபாத், ஜன. 19- சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு துர்க்மெனிஸ்தான். இதன் தலைநகரான அஸ்காபாத்தில் கருப்பு நிற கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஓட்டினால் கருப்பு நிற கார் காவல்துறையி னரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. காரின் நிறத்தை வெள்ளையாக மாற்றி விடுவ தாக ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டால்தான் கார்கள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு முதல் இந்நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. காவல்துறையினரின்....... மேலும்

19 ஜனவரி 2018 15:32:03

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகளுக்கு விடுமுறை - விமானங்கள் ரத்து

 அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகளுக்கு விடுமுறை - விமானங்கள் ரத்து

வாசிங்டன், ஜன. 19- அமெரிக்கா வில் தற்போது குளிர்காலம் ஆகும். அங்கு குளிர் காலத்தில் கடுமையாக பனிப்பொழிவு இருப்பது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட மிக அதிகமாக பனிப்பொழிவு உள் ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதி மாகாணங்களில் பனிப் பொழிவு மோசமான நிலையை எட்டியுள்ளது. அங்கு 30 அடி உயரம் அளவு வரை ஆங் காங்கே பனிக்கட்டிகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் சாலைகள் முற்றி லும் முடங்கிவிட்டது. விமான ஓடுபாதைகளும் பயன்படுத்த....... மேலும்

19 ஜனவரி 2018 15:32:03

பாஜக-வை எதிர்த்து பேரணி நடத்தாமல் இருக்க ரூ. 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது! : ஹர்திக் படேல் தகவல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சூரத், டிச. 5 -பாஜக-வுக்கு எதிரான சூரத் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க தொழிலதிபர் ஒருவர் தனக்குரூ. 5 கோடி வழங்க முன்வந்ததாக படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.

குஜராத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதர வளிப்பதாக ஹர்திக் படேல் அண்மையில் அறிவித்தார். தற்போது காங்கிரசு வேட் பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் சொந்த சட்டமன்றத் தொகுதியான மேற்கு ராஜ்காட்டிற்கு உட்பட்ட சூரத்தில், பாஜக-வுக்கு எதிராக ஹர்திக் படேல் மிகப்பெரிய பேரணி ஒன்றை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தினார். அப்போது பேசிய அவர், சூரத் பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்க தன்னை 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியதாக தெரிவித்தார்.

இந்த பெரிய தொகையை வழங்க சூரத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதி பரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்த தாகவும், ஆனால், அதையெல்லாம் தூக்கி யெறிந்து விட்டே பேரணியில் கலந்து கொண்டதாகவும் ஹர்திக் குறிப் பிட்டார். மேலும், பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பது என்ற விஷயத்தில் தனது தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; குஜராத் தின் மற்ற பகுதிகளில் இருக்கும் அவரவர் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொண்டு, இந்தமுறை பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்ய வேண் டும் என்றும் கூறினார்.

பாஜக, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளின் சதித் திட்டங்கள் மற்றும் பொறிகளில் சிக்கி ஏமாந்து விடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner