முன்பு அடுத்து Page:

கடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம்: அமெரிக்கா நடவடிக்கை

கடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம்: அமெரிக்கா நடவடிக்கை

வாசிங்டன், மே 22- 2015ஆ-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவருவதாக கூறி வந்த அமெ ரிக்கா, சமீபத்தில் இதில் இருந்து விலகியது. இதனால், ஈரான் மீது பல்வேறு பொரு ளாதாரத் தடைகளை விதிக்க வும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வரலாற் றில் இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கும் பணியில் அமெரிக்கா ஈடு பட்டு வருவதாக....... மேலும்

22 மே 2018 15:58:03

முதலீட்டாளர்கள், பொறியியல், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு 10 ஆண்டு விசா அய்க்கிய அரபு அ…

முதலீட்டாளர்கள், பொறியியல், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு 10 ஆண்டு விசா  அய்க்கிய அரபு அமீரகம் முடிவு

துபாய், மே 22- அய்க்கிய அரபு அமீரக அரசாங்கம் அந்நாட்டில் முதலீடு செய்யும் முதலீட்டா ளர்கள், பொறியியல், மருத்து வம் போன்ற துறைகளின் நிபு ணர்கள் மற்றும் புத்திசாலி மாண வர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க முடிவு செய்துள்ளது. அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை பிர தமரும் துபாய் ஆட்சியாளரு மான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அமைச்சர்களுடன் ஆலோசனை....... மேலும்

22 மே 2018 15:58:03

வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி

வெனிசுலா அதிபர் தேர்தலில்  நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி

    கராகஸ், மே 22- வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல் லுகள் முறைகேடுகள் நடந்த தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. இதையடுத்து, நேற்று பதி வான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1....... மேலும்

22 மே 2018 15:58:03

இந்திய எல்லைப் பகுதி அருகே எங்களுக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட முழுஉரிமை உள்ளது: சொ…

இந்திய எல்லைப் பகுதி அருகே  எங்களுக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம்  தோண்ட முழுஉரிமை உள்ளது: சொல்கிறது சீனா

  பீஜிங், மே 22- இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத் துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந் தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் அருணாசல பிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார்....... மேலும்

22 மே 2018 15:58:03

இந்தியாவில் சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மெகன் மார்க்லே விருப்பம்

இந்தியாவில் சமூக சேவையாற்ற  பிரிட்டன் இளவரசி மெகன் மார்க்லே விருப்பம்

லண்டன், மே 21- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல் பட்டு வருவது மைனா மகிளா தொண்டு நிறுவனம். கடந்த 2015இ-ல் தொடங்கப்படட இந்த அமைப்பு பெண்கள் சுய மாக சம்பாதிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத் துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்....... மேலும்

21 மே 2018 15:27:03

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் முடிவு

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் முடிவு

இசுலாமாபாத், மே 21- பாகிஸ் தான் நாட்டால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள காஷ்மீர் பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் ஆசாத் காஷ்மீர் என் றும் அழைக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு என்று தனி அதி பர், பிரதமர் தேர்ந்தெடுக்கப் பட்டு வந்தாலும்கூட, அதன் முக்கிய நிர்வாக பொறுப்பை பாகிஸ்தான் அரசு தன்னிடம் தான் வைத்துக்கொண்டு உள் ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அரசின் காஷ்மீர் விவகாரங்கள் துறை அமைச்சகம்தான் இதைக் கவனிக்கிறது. இந்தப் பகுதிக்கு....... மேலும்

21 மே 2018 15:27:03

உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் பயணத்தை தொடங்கியது

உலகின் முதல் மிதக்கும் அணுமின்  நிலையம் பயணத்தை தொடங்கியது

மாஸ்கோ, மே 20- ஒரு சரக்கு கப்பலை போல தோற்றமளிக் கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப் பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங் கியுள்ளது. இந்திய மதிப்பில் 654 கோடி ரூபாய் செலவில் உரு வாகியுள்ள இந்த மிதக்கும் அணு மின் நிலையம் 144....... மேலும்

20 மே 2018 16:32:04

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் படுகொலை

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் படுகொலை

லண்டன், மே 20- இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெசிகா பட்டேல் (வயது 34) வசித்து வந்தார். இவரது கண வர் மிதேஷ் (வயது 36). இவர் கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைகழகத் தில் படித்தபொழுது சந்தித்து கொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகி லேயே கடந்த 3 ஆண்டுகளாக மருந்து கடை ஒன்றை....... மேலும்

20 மே 2018 16:32:04

மாணவியின் சார்பில் பட்டம் பெற்ற ரோபோ

மாணவியின் சார்பில் பட்டம் பெற்ற ரோபோ

அலபாமா, மே 20- அலபாமாவைச் சேர்ந்த பள்ளி மாணவி, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்க, அவருக்கு பதிலாக பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அய்பேட் இணைக்கப்பட்ட ரோபோ கலந்து கொண்டு பட்டத்தைப் பெற்றுக் கொண்டது. சிந்தியா பெட்வே என்ற மாணவி பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினார். எதிர்பாராதவிதமாக பள்ளியில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ஒரு வார காலத்துக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே....... மேலும்

20 மே 2018 16:32:04

தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கியது சீனா

தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கியது சீனா

பீஜிங், மே 20- சீனாவின் தென் பகுதியில், பசிபிக் பெருங்கட லின் ஒரு பகுதியாக அமைந் துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் அய்ந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப் பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடை பெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதா லும் இது....... மேலும்

20 மே 2018 16:32:04

மாலத்தீவு: அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் நஷீத் முடிவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொழும்பு, பிப். 4- இந்திய பெருங்கடலில் உள்ள மாலத் தீவுகள் நாட்டின் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட் டப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நசீது, முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் மற்றும் அவர்களது ஆதரவாளர் கள் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிரிட்டனில் சிகிச்சை பெற முகம்மது நசீது நாட்டை விட்டு வெளியேறி னார். பல எதிர்க்கட்சி தலைவர் கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், வரும் அதிபர் தேர் தலில் போட்டியின்றி தேர்வா கலாம் என அதிபர் யாமீன் அப்துல் கயூம் கணக்கு போட் டிருந்தார்.

அவரது கனவை சுக்கு நூறாக உடைக்கும் விதமாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என நேற்று பின்னிரவில் உத்தரவிட் டது.

மேலும், எந்த குற்றச்சாட் டில் அவர்கள் கைது செய்யப் பட்டார்களோ, அது தொடர் பான வழக்கில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் நேர் மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என் றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நசீத்தின் ஆதரவாளர் கள் நள்ளிரவில் கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்ற போது, கலவரம் வெடித்தது. இதற்கிடையே, அதிபரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை காவல்துறை தலைவர் எடுக் காததால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வழக்கில் இருந்து விடு விக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறீலங்காவில் இருக் கும் முன்னாள் அதிபர் முகம் மது நசீத், அதிபர் தேர்தலில் யாமீனை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள் ளார்.

“போட்டியிட்டு இம்முறை கட்டாயமாக வெற்றி பெறு வேன் என நம்பிக்கை உள்ளது” என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner