முன்பு அடுத்து Page:

அமெரிக்கா - வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சார்பில் கலைஞர் மறைவிற்கு வீர வணக்க நிகழ்ச்சி

   அமெரிக்கா - வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சார்பில் கலைஞர் மறைவிற்கு வீர வணக்க நிகழ்ச்சி

அமெரிக்க தலைநகர் வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் வீர வணக்க நிகழ்வு கிரேட் பால்ஸ் நூலக கருத்தரங்க அறையில் 18.8.2018 அன்று மாலை 5 மணிக்கு, வட்டார தமிழ்ச்சங்க தலைவர் இராஜாராம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் நினைவுரையாற்றினார் மற்றும்  வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் சுந்தர் குப்புசாமி, முன்னாள் பேரவைத் தலைவர்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:19:03

'சகாப்தங்கள் மறைவதில்லை' சிகாகோவில் கலைஞர் மறைவிற்கு நினைவேந்தல் மரியாதை நிகழ்வு

  'சகாப்தங்கள் மறைவதில்லை' சிகாகோவில் கலைஞர் மறைவிற்கு நினைவேந்தல் மரியாதை நிகழ்வு

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 11.8.2018 சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு கண்ணீர் மரியாதையாக இல்லாமல்  'ஸிணிவிணிவிஙிணிஸிமிழிநி ரிகிலிகிமிநிழிகிஸி' 'சகாப்தங்கள் மறைவதில்லை' என்ற தலைப்பில் திமுக தலைவர் அவர்களின் வாழ்வை நினைவு கூரும் விழாவாகவே நடைபெற்றது. கலைஞர் தமிழுக்கு செய்த தொண்டினை விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுதே உணர முடிந்தது. உடலால் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் உணர் விலும்,  உயிரிலும் கலந்திருக்கும்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:19:03

புதிய அமைச்சரவையை அறிவித்தார் இம்ரான்

  புதிய அமைச்சரவையை அறிவித்தார் இம்ரான்

இசுலாமாபாத், ஆக.20 பாகிஸ்தானில் புதிதாக ஆட்சிய மைத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், 21 உறுப்பினர்களைக் கொண்ட தனது அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலான வர்கள், முன்னாள் அதிபர் முஷாரஃபின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, புதிய அமைச்சரவையின் பட்டியலை தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் செய்தித் தொடர்பாளர்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியா, ஆக.20 இந்தோ னேசியாவில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் லொம்போக் தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாகப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லொம்போக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெலான் டிங் நகருக்கு மேற்கு-வடமேற்குத் திசையில், 7 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி யியல் ஆய்வு மய்யம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதமோ, பொருள்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா

வாசிங்டன், ஆக. 19- உலகில் அதிக அளவிலான மக்கள் தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச் சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுமார் 20 லட்சம் படைவீரர்களை வைத் திருக்கும் சீனா, ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கென பட் ஜெட்டில் அதிகப்படியான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆப்பிரிக்காவின் கொம்பு என்றழைக்கப்படும் டிஜி போட்டி நாட்டில்  ராணுவ தளம் ஒன்றை அமைத்துள்ள சீனா, மேலும் சில நாடுகளில்....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:15:04

கேரளாவுக்கு உதவ அய்க்கிய அரபு எமிரேட்ஸ் தனிக்குழு அமைப்பு அதிபர் ஷேக் கலீபா உத்தரவு

கேரளாவுக்கு உதவ அய்க்கிய அரபு எமிரேட்ஸ் தனிக்குழு அமைப்பு அதிபர் ஷேக் கலீபா உத்தரவு

அபுதாபி, ஆக. 19- கேரள மாநிலம் வெள்ளத்தால் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளது. கேரளாவுக்கு உதவ அய்க்கிய அரபு எமிரேட்ஸ் தனிக்குழு ஒன்றை அமைக்க அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நக்யான் உத்தரவிட்டுள்ளார். தேசிய எமர்ஜென்சி குழுவை நியமித்து வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுமாறு தெரிவித்துள்ளார். அய்க்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷீத் அல் மகதூம் டுவிட் டரில் கூறும்போது, அய்க்கிய அரபு....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:07:04

22ஆவது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு

22ஆவது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு

இசுலாபாமாத், ஆக. 19- பாகிஸ் தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை (ஆக.18) பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தானின் புதிய பிரத மராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடி அய்) தலைவருமான இம்ரான் கானை (65) அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக் கிழமை தேர்ந்தெடுத்தது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் முசுலிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃபை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:07:04

பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி - ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்

  பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி - ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்

காபூல், ஆக. 18- ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் மீது சமீப கால மாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத் தத் தொடங்கி உள்ளனர். இந்த ஆண் டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். கடைசியாக நேற்று முன்தினம் காபூ லில் உள்ள தனியார் பயிற்சி மய்யம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக் குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட் டனர். 67 பேர்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:44:03

லிபியா முன்னாள் அதிபர் கடாபி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை

  லிபியா முன்னாள் அதிபர் கடாபி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை

திரிபோலி, ஆக. 18- 2011-ஆம் ஆண்டு அரபு நாடுகள், ஆப்பி ரிக்காவின் வடபகுதி நாடுகள் ஆகியவற்றில் திடீர் புரட்சி ஏற்பட்டது. இதில் சில நாடு களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சில நாடுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. லிபியா நாட்டில் நீண்ட காலமாக முகமது கடாபி ஆட் சியில் இருந்து வந்தார். அங் கும் புரட்சி ஏற்பட்டது. புரட் சியாளர்கள் நாட்டை கைப் பற்றிக் கொண்டனர். கடாபி புரட்சிக்கும்பலிடம் சிக்கினார். அவர்கள்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:43:03

வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க இலங்கை ராணுவத்தில் கீரிகள்

  வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க இலங்கை ராணுவத்தில் கீரிகள்

கொழும்பு, ஆக. 18- வெடிகுண்டு களை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன் படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன் படுத்தலாம் என்று கண்டுபிடித் திருக்கிறார்கள். நாய்களை விட கீரிகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருப்பதாகவும், அவை சிறப்பாக வெடிகுண் டுகளை கண்டுபிடிப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கீரிகளை பயன்படுத்தி வெடி குண்டுகளை....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:43:03

மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது: நெருக்கடி நிலையால் பதற்றம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மாலே, பிப். 7- மாலத்தீவில் 12 எம்.பி.க்க ளின் தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க் கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண் டும் என்று உத்தரவிட்டது. இதனால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது.

எனவே அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்ததுடன்,  15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய் தார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.  அத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியது.

முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமை மாலத்தீவு காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட மவுமூன் அப்துல் கயூம், அதிபர் யாமீனின் சகோதரர் ஆவார்.

இதையடுத்து இமாலத்தீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதித்துறை நிர்வாக அதிகாரி ஹசன் சயீத் உசைனும் கைது செய்யப்பட்டார்.

சாலைகளில் ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. போராட்டங்களை ஒடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசும் வாக னங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் மாலத்தீவு முழுவதும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்: அமெரிக்கா

இந்நிலையில் மாலத்தீவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அமெரிக்க தனது கவலையை தெரிவித்துள்ளது.  இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹீதர் நாவேர்ட் கூறியதாவது:-

மாலத்தீவில் நெருக்கடி நிலையை அதிபர் யாமீன் பிரகடனம் செய்திருப்பது குறித்த தகவல்கள் அமெரிக்காவிற்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளித் துள்ளது. அதிபர் யாமீன், ராணுவம் மற்றும் காவல்துறை என அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க வேண் டும், உச்ச நீதிமன்றம் மற்றும் குற்றவி யல் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை நடை முறைப்படுத்த வேண்டும் என அமெ ரிக்கா விரும்புகிறது.

அத்துடன் நாடாளுமன்றம் முறை யாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசியலமைப்பின்படி மக் களின் உரிமைகள் அனைத்தும் வழங் கப்படவேண்டும்.

2013இ-ல் யாமீன் தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவால் அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டபோதிலும், கூட்ட ணியை திட்டமிட்டு தனிமைப்படுத்தி உள்ளார். முக்கிய எதிர்க்கட்சி பிரமுகர் களை சிறையில் அடைத்துள்ளார், அல் லது நாடு கடத்தியுள்ளார். எம்.பி.க்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளை அழிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் செய்துள்ளார். அரசு துறைகளை பலவீனப்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner