முன்பு அடுத்து Page:

சிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி

சிறீசேனாவுக்கு மேலும் ஓர் அடி

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்: இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொழும்பு, டிச. 14- "இலங்கை நாடாளு மன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்ட விரோதம்'' என்று அந்நாட்டு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் பிறப்பித் துள்ள இந்த தீர்ப்பு, அதிபர் சிறீசேனா வுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக இலங்கை உச்சநீதி மன்றத்தில் 13 மனுக்கள் தொடுக்கப்பட் டிருந்தன. அந்த மனுக்கள்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

அமெரிக்கா மீது வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

கராகஸ், டிச. 14- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரண மாக கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டனர். ஆனால் அங்கு அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனை காரணம் காட்டி....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

நாம் இருவருமே தமிழகத்தில் பிறந்தவர்கள்: அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால்

நியூயார்க், டிச. 14- கூகுள் வலை தள நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையும், தாமும் இந்தியாவின் ஒரே மாநிலத்தில் (தமிழகம்) பிறந்த வர்கள் என்பதை இந்திய வம் சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. பிரமீளா ஜெயபால் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். கூகுள் வலைதளப் பயனா ளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, இது தொடர்பான அமெரிக்க நாடா ளுமன்ற குழுவிடம் சுந்தர் பிச்சை நேரில் சென்று விளக்கமளித்தார். அப்போது....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

ஏவுகணை சோதனை: உறுதி செய்தது ஈரான்

   ஏவுகணை சோதனை:  உறுதி செய்தது ஈரான்

தெகிரான், டிச. 14- நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மையில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி,  பர்ஸ் செய்தி நிறுவ னம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: நடுத்தர தொலைவு ஏவுக ணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி சோதனை யில் ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரி கள் ஒப்புக் கொண்டனர். ஈரான் தனது ஏவுகணை பரிசோதனைகளைத் தொடரும் எனவும், அண்மையில் நடந் துள்ள சோதனை மிகுந்த முக்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:12:03

சிறீசேனாவுக்கு மற்றொரு அடி

சிறீசேனாவுக்கு மற்றொரு அடி

இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் வெற்றி கொழும்பு, டிச. 13- இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக் டோபர் மாதம் 26ஆம் தேதி நியமித்தார். அன்றிலிருந்து இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப் பங்களும் ஏற்பட்டு வருகின்றன. ராஜபக்சேவுக்கு பெரும் பான்மைக்குத் தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் நாடா....... மேலும்

13 டிசம்பர் 2018 15:10:03

கசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை

கசோகி படுகொலை குறித்து அய்.நா. விசாரணை: துருக்கி ஆலோசனை

அங்காரா, டிச. 13- செய்தியாளர் கசோகி படுகொலை தொடர்பாக அய்.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப் பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவு சோகுலு செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இஸ்தான்புலில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கசோகி படுகொலை செய்யப்பட்டது குறித்து அய்.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இதுதொடர்பாக, அய்.நா. பொதுச்....... மேலும்

13 டிசம்பர் 2018 15:10:03

இந்தியாவுக்கு கடத்தப்பட்ட 100 அமெரிக்க குழந்தைகளை மீட்க வேண்டும்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் வாசிங்டன், டிச. 13- அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 100 குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் களை அமெரிக்காவுக்கு மீட்டு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் சிமித் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விவகாரங்கள் துணைக்குழு சார்பில் சர்வதேச குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வாசிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெற்றோர், குழந்தை கடத்தல் தடுப்பு தொடர்பான....... மேலும்

13 டிசம்பர் 2018 15:09:03

எதிர்ப்பு எதிரொலி: பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

லண்டன், டிச. 13- அய்ரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மேற்கொண்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுவ தையடுத்து, அந்த ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெ டுப்பை அவர் ஒத்திவைத்து உள்ளார். அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய (பிரெக்சிட்) பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக் கும் இடையிலான உறவு குறித்து இரு தரப்பிலும் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத் துக்கு, எம்.பி.க்களிடையே கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற....... மேலும்

13 டிசம்பர் 2018 15:09:03

அமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தற்கொலை

அமீரகத்தில் இந்திய  சமூகச் சேவகர் தற்கொலை

துபாய், டிச. 12- இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் அய்க்கிய அரபு அமீர கத்தின் ஒரு நாடான ரஸ் அல்கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் அய்க்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான சில சமூகச் சேவைகளையும் செய்து வந்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் இங்கு பலியான இந்தியரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி....... மேலும்

12 டிசம்பர் 2018 15:21:03

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லண்டன், டிச. 12- விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்த சர்வதேச சாராய வியாபாரி மல்லையா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தி இந் தியா....... மேலும்

12 டிசம்பர் 2018 15:21:03

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர அனுமதி!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரியாத், பிப். 27- ராணுவத்தில் இனி பெண்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்று சவுதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் நீடித்த வளர்ச்சியினை உறுதி செய்யும் பொருட்டு சவுதி அரேபிய இள வரசர் முகமது பின் சல்மான் ‘சவுதி அரேபியா விசன் 2030’ என்ற தொலைநோக்குத் திட் டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

அந்த திட்டத்தின் அடிப் படையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆண்களின் அனு மதி இல்லாமலேயே பெண்கள் தொழில் தொடங்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந் தது. அடுத்ததாக இவ்வாண்டு ஜனவரியில் பெண்கள் கார் ஓட் டுவதற்கு முன்பு விதிக்கப்பட்டி ருந்த தடையும் ரத்து செய்யப் பட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது  பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக ஞாயிற்றுக் கிழமை அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ரியாத், மக்கா,  அல்-குசைம் மற்றும் அல் மதினா உள்ளிட்ட மாகாணங் களைச் சேர்ந்த பெண்கள் ராணு வத்தில் முதல்நிலை வீராங்க னையாக சேர விண்ணப்பிக் கலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இனி நாட்டின் பொருளா தாரத்தினை விரிவு செய்யும் வகையில், பெண்கள் பொருள் ஈட்டும் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கித் தரப் படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


 

நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் 110 பேர் கடத்தல்

அபுஜா, பிப். 27- ஆப்பிரிக்க நாடு களில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் கள். இவர்கள் அங்கு அப்பாவி மக்களை குறிவைத்து அதிபயங் கர தாக்குதல்களை நடத்தி அவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளை கடத்திச் சென்று, அவர்களை தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு பயன் படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு போர்னோ மாகாணம் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை போகோஹரம் பயங்கரவாதிகள் கடத்திச் சென் றனர். இவர்களில் பலர் பயங் கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தனர். இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்ட மாண விகளின் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.

சிபோக் நகரில் இருந்து 275 கி.மீ தொலைவில், யோப் மாகாணத்தின் வடகிழக்கு பகு தியில் அமைந்து உள்ள நகரம் தாப்சி. இந்த நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை கடந்த வாரம் போகோஹரம் பயங்கரவாதிகள் சூறையாடினர். 110 மாணவி களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

தாப்சி நகரின் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்த பாதுகாப்பு படை வீரர் கள் கடந்த மாதம் தங்களின் முகாம்களுக்கு திரும்பி சென்று விட்டதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அந்த நகருக்குள் நுழைந்து, பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றுவிட்டனர்.

பயங்கரவாதிகளின் தாக்கு தலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ராணுவ விமானங் களில் தாப்சி நகருக்கு திரும்பி னர். அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் முயற்சி கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner