முன்பு அடுத்து Page:

வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

   வெனிசுலா துணை அதிபராக டெல்சி ரொட்ரிகஸ் தேர்வு

கராகஸ், ஜூன் 17- வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ஆம் ஆண் டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடப்ப தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி கள் தேர்தலை புறக்கணித்தன. இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி....... மேலும்

17 ஜூன் 2018 13:40:01

முதல் முறையாக கருப்பினப் பெண் தேர்வு

சான்ஃபிரான்சிஸ்கோ: மேயர் பதவிக்கு   சான் ஃபிரான்சிஸ்கோ, ஜூன் 17- அமெ ரிக்காவின் சான் ஃபிரான் சிஸ்கோ நகர மேயர் பதவிக்கு, கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். கலிஃ போர்னியா மாகாணத்தைச் சேர்ந்த சான் ஃபிரான்சிஸ்கோ நகர மேயர் தேர் தல் இந்த மாதம் 5-ஆம் தேதி நடை பெற்றது. இதில், சான் ஃபிரான்சிஸ்கோ நிர்வாக வாரியத்தின் தலை வராக உள்ள லண்டன் பிரீட் (43) போட்டியிட்டார். இந்தத்....... மேலும்

17 ஜூன் 2018 13:33:01

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு மீண்டும் தடை

  இசுலாமாபாத், ஜூன் 16 பாகிஸ் தான் முன்னாள் அதிபர் முஷா ரஃப் தேர்தலில் போட்டியிடு வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இதையடுத்து, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் அரசியல் வாழ் வைத் தொடங்க முஷாரஃ புக்குக் கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போனதாகக் கூறப்படுகிறது. தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக, முஷாரஃப் வாழ்நாள் முழுவதும்....... மேலும்

16 ஜூன் 2018 15:37:03

ஏவுதளங்களை அழிப்பது குறித்து கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

ஏவுதளங்களை அழிப்பது குறித்து  கிம் ஜோங் உன் அறிவிப்பார்: டிரம்ப் தகவல்

  வாசிங்டன், ஜூன் 15- வட கொரி யாவில் உள்ள ஏவுதளங்களை அழிப்பது குறித்த அறிவிப்பை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், அடுத்த சில நாள்களில் வெளியிடுவார் என்று அமெ ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கிம் ஜோங் உன்-னும், டிரம் பும் நேரில் சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தேறி யது. அப்போது, கொரிய தீப கற்பத்தில் இருந்து அணு ஆயு தங்களை....... மேலும்

15 ஜூன் 2018 16:04:04

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

போர்க்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம்: அமைச்சரவை ஒப்புதல்

கொழும்பு, ஜூன் 15- இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையே கடந்த 30 ஆண்டுகளாக போர் நடை பெற்று வந்தது. 2009-ஆம் ஆண்டு இந்த போர் முடிவடைந்தது. இதற்கிடையே, போர்க்கா லங்களில் காணாமல் போனவர் கள், போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள், படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்க ளுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என அய். நா.சபையின் மனித உரிமை அமைப்பு கோரிக்கை....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

கவுதமாலா எரிமலை வெடிப்பு எதிரொலி - விமான சேவை முடக்கம்

  கவுதமாலா சிட்டி, ஜூன் 15- கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள் ளனர். இந்நிலையில் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கவுதமாலா பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளில் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஃப்யூகோ எரிமலை மீண்டும்....... மேலும்

15 ஜூன் 2018 15:50:03

மலேசிய பள்ளிகளுக்கு பெரியாரியக்க நூல்கள்

மலேசிய பள்ளிகளுக்கு பெரியாரியக்க நூல்கள்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கி.வீரமணியின்கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்கள் கீழ்காணும் மலேசிய ஊர்களில் உள்ள தமிழ்பள்ளி மாணவர்களுக்கு திராவிட இயக்க பணி யாளரும், விவசாய நிர்வாகிகள் இயக்க தலைவருமான மு.கோவிந்தசாமி வழங்கினார். மலேசியா திராவிடர் கழக தோழர்கள், பெரியார் தொண்டர்கள் இரா.பெரியசாமி, கோ.ஆவுடையார், த.பரமசிவம், கு.கிருட் டிணன், கவிஞர் கு.க.இராமன், முன்னாள் மதிக தலைவர் ரேசு.முத்தையா ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். மேண்டகப் தோட்டம், பகாங், பத்து அரங்,....... மேலும்

14 ஜூன் 2018 16:08:04

அமைச்சரவை விரிவாக்கம் தமிழர் உள்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு

அமைச்சரவை விரிவாக்கம் தமிழர் உள்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு

  கொழும்பு, ஜூன் 14- இலங்கை அதிபர் சிறிசேனா தனது அமைச் சரவை விரிவாக்கம் செய்துள் ளார். இதில், அந்நாட்டு பொதுத் தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள ஒரே தமிழரான, திரிகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராம நாதன் உள்பட 7 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 7 பேரில், 2 பேர் அமைச்சர்களாகவும் 5 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். இவர்கள் அனைவரும்....... மேலும்

14 ஜூன் 2018 15:57:03

கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்

   கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்

கவுதமாலா சிட்டி, ஜூன் 14- கவு தமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித் துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற் பட்டோர் காணாமல் போயுள்ள னர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர் கள் 50 பேர் காணாமல் போயுள் ளதாக தெரியவந்துள்ளது. 50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியா வின் 75....... மேலும்

14 ஜூன் 2018 15:57:03

வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

வங்காளதேசத்தில் பிரபல எழுத்தாளர் சுட்டுக்கொலை

டாக்கா, ஜூன் 13- வங்காள தேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத் தையும் நடத்தி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன் பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற் காக சென்று இருந்தார். அப்போது அங்கே....... மேலும்

14 ஜூன் 2018 14:57:02

வருவாய்த்துறையும் சமூகப்பணியும் கருத்தரங்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, பிப். 27 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 3ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம் தூத் துக்குடியில் 27.1.2018 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது.

உண்மை வாசகர் வட்டச் செயலாளர் சு.காசி அனைவரை யும் வரவேற்றார். முன்னிலை ஏற்ற மாநகர ப.க.தலைவர் ப.பழனிச்சாமி, மாவட்டக் கழக செயலாளர் மு.முனிய சாமி, மாவட்ட தலைவர் பேரா சிரியர் தி.ப.பெரியாரடியான் ஆகியோர் உரையாற்றிய பின் தலைமையேற்ற வாசகர் வட் டத் தலைவர் மா.பால்ராசேந் திரம் தலைமையுரையாற்றினார்.

அவர்தம் உரையில்:

தந்தை பெரியாரை ஏற்ற தமி ழர்கள் உயர் வாழ்வு வாழ்கின் றனர். அன்று தொடர்வண்டி நாட்டில் விடுவதென ஆங்கி லேயர் முடிவு செய்தபோது முதல்பெட்டி பார்ப்பனர்க்கு என்றனர். சதுர்வர்ண அடுக்கு முறையில் பெட்டிகளை அமைத்து ஆதிதிராவிடர்க்கு வண்டியேறும் உரிமை கிடை யாது என முடிவு செய்தனர் பார்ப்பனர். அன்று தமிழச்சி களைத் தேவதாசிகள் என்று அழைத்திட வாய்கூசாத ஆரி யம்; தாசிகளாய் இருக்கமாட் டோமெனத் தாசி வாழ்க்கையில் இருந்தவர்களே மறுத்தபோது பெரியாரியக்கம் அதற்கு உறு துணையாய் நின்று போராடி யது. வேண்டாமிந்த இழி வாழ்வு, சட்டம் செய்யுங்கள் என்று சட்டமன்றத்தில் முத்து லெட்சுமி அம்மையார் கூறிய போது மோட்சம் கிட்டியுள்ளது தாசிகளுக்கு, மறுக்காதீர்!" என்றார் அய்யர் சத்தியமூர்த்தி. நாங்களே பெற்ற மோட்சத்தை அக்கிரகாரப் பெண்களும் பெறட்டும்; நிறைவேற்றுங்கள் சட்டத்தை என்று பெரியாரின் குரலை மன்றத்தில் ஓங்கி உரைத்தபோது மடங்கியது மந்திரவாதிகளின் மறுப்புக் குரல். அன்று பெருமை கூறியோர் இன்று 'தேவதாசி' யென்பது இழிமொழியெனக் கூக்குரலிடுகிறார்களென்றால் பெரியார் வென்று நிற்கிறார். இருப்பினும் திராவிடர் இயக் கம் தமிழ்நாட்டை விட்டு அகல வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பார்ப்பன ரின் சூழ்ச்சியே இந்த வன் முறை வெறியாட்டம். எனவே நாம் மனிதம் பேணிய மாத் தலைவர் 'பெரியார்' பிறந்த மண்ணில் பிறந்தோம், வாழ் கின்றோமேன்ற உணர்வை மறவாது வாழ்வோ மென்றார்.

சிறப்புரையாற்ற வருகை தந்த பணிநிறைவு பெற்றத் துணையாட்சியர் செ.ஜனார்த் தனன் அவர்கள் பயனாடை அணிவித்தும், பெரியாரின் நூல் வழங்கியும் அறிமுகப் படுத்தப்பட்டார். வருவாய்த் துறையும், சமூகப்பணியும் என்ற தலைப்பில் அவர் உரை யாற்றினார். 1939இல் காயல்பட் டணம் அருணாசலபுரத்திற்கு அய்யா பெரியார் வருகை தந் தார். எங்கள் கிராமமே சுயமரி யாதைக் கிராமமாக இருந்தது. கோயில்கள் எதற்கு? பள்ளிக் கூடங்களைக் கட்டுங்கள் எனப்பெரியார் சொன்னதால் 4 கோவில்களை இடித்து 1947இல் தேசியத் தொடக்கப் பள்ளி கட்டினோம்.  பார்ப் பனரே பெரிய உத்தியோகங் களில் இருந்த நிலையை மாற்றி நீதிக்கட்சியும், பெரி யாரும் செய்த பணியால் எங்கள் கிராமத்திலும் பேராசிரி யர்களும், வட்டாட்சியரும், பொறியாளரும், மருத்துவரும் வர முடிந்தது. ‘பங்கா' இழுத்த சமுதாயத்தை மாற்றி சிரஸ் தாரராக ஆக்கிய இயக்கம் திராவிடர் இயக்கம். கலை ஞரின் 3 விழுக்காடு உள் ஒதுக்கீட்டால் 42 வயதில் ஒரு பெண் வட்டாட்சியராக, அருந் ததியர் வந்துள்ளார் என்று முக வுரை தந்தார்.

கிழக்கிந்தியா கம்பெனி ஆட்சி, வாரன்ஹேஸ்டிங்ஸ் வருவாய்த்துறையை மேம்படுத் தக் கழகம் அமைத்தார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆட்சித் தலைவர் நியமிக்கப்பட்டார். ஆங்கிலேயர் 3 வகை நில உட மைகள் உருவாக்கினர். 1) ஜமீன்தாரி முறை 19% நிலப் பரப்பில் வரி வசூல் 2) ரயத் துவாரி முறை 51% நிலப்பரப்பு இம்முறைப்படி குடியானவனே நில உடமையாளன், 3) மகல் வாரி 30% நிலப்பரப்பில் வசூல் 1833இல் அறிமுகமாகியது. வருவாய்த்துறையில் பேரிடர் மேலாண்மைத்துறை முக்கியப் பணியாகும். 1) இயற்கைப் பேரிடர் 2) மனிதனால் பேரி டர். நிலவுடைமையாளர்களாக அரசு நிலங்கள் வாங்கப்பட்டுப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. 1983இல் தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச்சட்டம் வந்தது. நிலங்கள் உரிமையென்பது பட்டா ஒன்றினால்தான் உறுதி யாகும் என்றார். இறுதியாகத் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உழைப்பும்தான் தமிழர்களை சாமானியர்களைத் தமிழகத்தில் வாழவைத்து வருகிறது. எனவே அரசியல் மோகத்தில் வீழாமல் இளைஞர்கள், திரா விடர் கழகம் பக்கம் வாருங்கள் என்று எடுத்துக்கூறினார்.

நிறைவாக மாவட்டப் ப.க. செயலாளர் மா.பழனிசாமி நன்றி கூறச் சரியாக இரவு 8 மணிக்கு முடிவுற்றது. இந்நிகழ் வில் மாவட்டத் துணைத் தலை வர் பொ.செல்வராசு துணைச் செயலாளர் இரா.ஆழ்வார், முன்னாள் மாவட்டச் செயலா ளர் ச.சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் பெ.காலாடி, மாநக ரப் ப.க. செயலாளர் சு.சுப்பு ராஜ், இரா.அய்யம்பெருமாள், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செ.இராசா, கழகப் பாடகர் இலா.விக்டர், துவத்தை சா.முத்துராஜ், திருக்குறள் பேர வைச் செயலாளர் மோ.அன்பழ கன், மாணவரணி மு.முரளி தரன், உ.நிதியரசு, ம.முல்லை யரசு, ம.தென்னவன், மய்யக் காப்பாளர் பொ.போசு, பெரி யார் பிஞ்சு கதிர் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண் டனர்..

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner