முன்பு அடுத்து Page:

அமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தற்கொலை

அமீரகத்தில் இந்திய  சமூகச் சேவகர் தற்கொலை

துபாய், டிச. 12- இந்தியாவை சேர்ந்த சந்தீப் வெள்ளலூர்(35) என்பவர் அய்க்கிய அரபு அமீர கத்தின் ஒரு நாடான ரஸ் அல்கைமாவில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணியாற்றி வந்தார். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உள்ள சந்தீப் அய்க்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான சில சமூகச் சேவைகளையும் செய்து வந்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் இங்கு பலியான இந்தியரின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி....... மேலும்

12 டிசம்பர் 2018 15:21:03

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லண்டன், டிச. 12- விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்த சர்வதேச சாராய வியாபாரி மல்லையா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தி இந் தியா....... மேலும்

12 டிசம்பர் 2018 15:21:03

பிரெக்சிட் முடிவை பிரிட்டன் தன்னிச்சையாக திரும்பப் பெறலாம்: அய்ரோப்பிய நீதிமன்றம்

பிரசெல்ஸ், டிச. 12- சக உறுப்பு நாடுகளின் ஒப்புதல் இல்லாமலேயே, அய்ரோப்பிய யூனியனிலிருந்து விலகும் (பிரெக்சிட்) முடிவை பிரிட்டன் திரும்பப் பெறலாம் என்று அய்ரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை, பிரிட்டனில் பிரெக்சிட் டுக்கு எதிராகப் போராடி வருபவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பிரெக்சிட் தொடர்பாக ஸ்காட்லாந் தைச் சேர்ந்த சில தலைவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த அய் ரோப்பிய யூனியன் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது: அய்ரோப்பிய யூனியன்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:20:03

இலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துகின்றன: சிறிசேனா குற்றச்சாட்டு

   இலங்கை அரசியல் விவகாரம் - வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துகின்றன: சிறிசேனா குற்றச்சாட்டு

கொழும்பு, டிச. 12- இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக் ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அதிரடி யாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடா ளுமன்றத்தை கலைத்து தேர் தலை அறிவித்தார். ஆனால் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தது. பின் னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா....... மேலும்

12 டிசம்பர் 2018 15:20:03

மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்- விஞ்ஞானிகள் ஆய்வு

பெர்லின், டிச. 11- இருதய நோய் கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இருதயம் கிடைக்கா மல் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து கிடக்கின்றனர். எனவே, மனித இருதயத் துக்கு பதிலாக பன்றியின் இரு தயத்தை பொருத்தும் ஆராய்ச்சி யில் விஞ்ஞானிகள்....... மேலும்

11 டிசம்பர் 2018 16:18:04

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பியது சீனா

பீஜிங், டிச. 11- நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங் கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலை களை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e....... மேலும்

11 டிசம்பர் 2018 16:18:04

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரோலினா, டிச. 11- அமெரிக்க நாட்டின் தென்கிழக்கில் உள்ள வடக்குக் கரோலினா, தெற்குக் கரோலினா, ஜியார்ஜியா, அலபாமா, டென்னசி, கென்டக்கி, விர்ஜினியா ஆகிய மாநி லங்களில் தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. அதோடுமட்டுமல்லாமல் அங்கு பனிப்புயலும் வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. பனிப்புயல் இன்னும் வலுவடைய வாய்ப்புள் ளதாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடுமையான பனிப்புயலின் காரணமாக சுமார் 3....... மேலும்

11 டிசம்பர் 2018 16:18:04

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட கொடுக்கக் கூடாது: அய்.நா. தூதர்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட கொடுக்கக் கூடாது: அய்.நா. தூதர்

நியூயார்க், டிச. 11- பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குகி றது. எனவே அந்நாட்டுக்கு அமெரிக்கா ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது என்று அய்.நா.வுக்கான அமெ ரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உயர் பத வியில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய - அமெரிக்கரான ஹாலே, அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் எந்த நாட்டுக்கும், நிதியுதவி செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாம் எந்த நாட்டுடன் கூட்டணி....... மேலும்

11 டிசம்பர் 2018 16:18:04

மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான்: இம்ரான்கான் ஒப்புதல்

   மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்  பயங்கரவாதிகள்தான்: இம்ரான்கான் ஒப்புதல்

இசுலாமாபாத், டிச. 10- மும்பை யில் கடந்த 2008ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியது பாகிஸ் தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டின் பிரத மரான இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தியாவின் வர்த்தக தலை நகரான மும்பையில் கடல்வழி யாக ஊடுருவி பயங்கரவாதிகள் 10 பேர் கடந்த 2008ஆம் ஆண்டு திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி....... மேலும்

10 டிசம்பர் 2018 14:30:02

டிரம்புடன் கருத்து வேறுபாடு பதவி விலகும் ஜான் கெல்லி

 டிரம்புடன் கருத்து வேறுபாடு  பதவி விலகும் ஜான் கெல்லி

வாசிங்டன், டிச. 10- அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை யில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருகிறார் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார். முன்னாள் கடற்படை அதிகாரியான ஜான் கெல்லி (68 வயது) - அதிபர் டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு இருப்ப தாக முன்னதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகி றது. இந்த நிலையில் ஜான்....... மேலும்

10 டிசம்பர் 2018 14:30:02

இலங்கை: காணாமல் போனவர் பற்றி தகவல் திரட்டும் அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் நியமனம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொழும்பு, மார்ச் 2 இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது மாயமானவர்கள் பற்றிய விவரங்களை திரட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலகத்துக்கான உறுப்பினர்களை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த சிறப்பு அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்படும். அந்தச் சட்டத்தின்படி, மாயமானவர்கள் தகவல் தொடர்பு அலுவலகத்துக்கு 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், சட்ட நிபுணர் சலியா பெரிஸ் தலைமையின் கீழ் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக நீடிப்பார்கள். இவர்களைத் தவிர, தமிழ் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 2 பேரும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அலுவலகம், உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும். மேலும், போரின்போது காணாமல் போன உயிர் பிழைத்தவர்களை, அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அலுவலகம் மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தப் போரின்போது, பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்த காலக்கட்டத்தில், அரசுப் படையினர் 5 ஆயிரம் பேர் உள்பட சுமார் 25 ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்றை இலங்கை அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு நியமித்தது. மேலும், சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, காணாமல் போனோர் தகவல் தொடர்பு அலுவலகத்தை இலங்கை அரசு அமைத்தது. அந்த அலுவலகத்தின் உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப் பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner